ஹைக்கூ ! ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !   ( சென்றியு )  கவிஞர் இரா .இரவி !

பெயரை மாற்றுங்கள் 
கருணை இன்றி நிராகரிப்பு 
கருணை மனுக்கள் ?

பசுமை இலை 
வழங்கியது சிகப்பு 
மருதாணி !

விழுங்கியது 
கோடை விடுமுறையை 
இன்றைய  கல்வி !

கறிக்கோழியாக 
மதிப்பெண்ணுக்காக  
மாணவன் !

தேர்வில் வெற்றி 
வாழ்வில் தோல்வி 
மாணவர்கள் !

உணர்த்தியது 
மழையின் வருகை 
இடி மின்னல் !

மரங்களை வெட்டி
கட்டிய கட்டிடங்களில்  
செயற்கைச் செடிகள் !

இன்பம் துன்பம் 
உணர்த்தியது 
பிறை நிலவு !

வலைக்கட்டிக் காத்திருந்தது 
பூச்சிக்காக 
சிலந்தி !

புத்தரை வணங்குவது 
புத்தருக்கு அவமானம் 
சிங்களர் !

விஞ்சியது 
ஜாலியன் வாலாபாக் கொடுமையை 
இலங்கைப் படுகொலைகள் !

தாமதமாகவே விழித்தது 
தூங்கிய தமிழினம் 
லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !

கருத்துகள்