ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
தந்தது இன்பம்
உள்ளத்திற்கும் உடலுக்கும்
கோடை மழை !
விலங்கிலிருந்து வந்த மனிதன்
விலங்காகிறான்
பாலியல் குற்றம் !
மனிதாபிமானமற்றது
மனிதனை மனிதன் சுமப்பது
பல்லக்கில் அர்ச்சகர் !
முரண்பாடு
பெருகியது பக்தர்கள் கூட்டம்
பெருகவில்லை நல்லவர்கள் !
நண்பன் எதிரி நிரந்தரமன்று
அரசியல்
நிரந்தரம் பிதல்லாட்டம் !
விரும்பினர் ரசிகர்கள்
ஓட்டம் நான்கு ,ஆறு
அழகிகளின் ஆட்டம் !
ரொட்டித்திருடன் சிறையில்
கோடிகள் திருடன் குளு குளு அறையில்
மக்களாட்சி !
விலை இறங்க மகிழ்ச்சி
குறையும் குற்றங்கள்
தங்கம் !
சங்கம் வைத்துத் தமிழ்
வளர்த்த மதுரையில்
சங்கம் இல்லா சாதி இல்லை !
நோக்கம் விபத்துத் தடுக்க
நடந்தது விபத்து
வேகத்தடை !
நம்பினோர்
கைவிடப் பட்டார்
யாத்திரை விபத்து !
கருத்துகள்
கருத்துரையிடுக