ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


ஹைக்கூ !    கவிஞர் இரா .இரவி !

சிற்பி இல்லை 
சிலை உண்டு 
அழியாத கலை !

வீழ்ந்த பின்னும் 
நடந்தது நதியாக 
நீர் வீழ்ச்சி !

வளர்ந்துகொண்டே செல்கிறது 
புவி வெப்பமயம் 
கொளுத்தும் கோடை !

நடந்தது கொலை 
சகஜம்  என்றனர் 
அரசியல் !

விரித்து தோகை 
மேகம் பார்த்து 
ஆண்  மயில் !

ஆடி அடங்கியவர் 
இறுதி ஊர்வலத்தில் 
ஆட்டம் போட்டனர் !

இறந்தும் விடவில்லை 
காசு ஆசை 
நெற்றியில் நாணயம் !

கோடீஷ்வரருக்கு 
இறுதில் எஞ்சியது 
ஒரு ரூபாய் நாணயம் !

-- 

.

கருத்துகள்