மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
தியாகம் பெண்கள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ,மாற்றுத் திறனாளி அமுத சாந்தி அவர்கள் "சவால்களும் சந்தித்தவைகளும் "என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .பிறந்தபோது இடது கையில் பாதி இன்றி பிறந்தார் .பெற்றோர் அடைந்த துன்பம் ,சந்தித்த அவமானங்கள் ,பின் படித்துப் புரிந்த சாதனை ,அறக்கட்டளை தொடங்கி பெண் மாற் றுத் திறனாளிகள் பலருக்கு சுயமாக சம்பாதிக்க தையல் பயிற்சிகள் தந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த விதத்தை விளக்கினார் .அவரது பயிற்சி ,மாற்றுத் திறனாளிகள் சாதிக்கும் போது குறையின்றி அங்கம் உள்ள நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தந்தது .தினேஷ் நன்றி கூறினார் .
--
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர்
வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர்
திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .ஆ .முத்துக் கிருஷ்ணன் ,பிரபுராம் ,ஜானகி ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் .கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,கே .விஸ்வநாதன் தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக