மாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்பெற்றது !
.
மாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்பெற்றது .முதல் நிலை நூலகர் பொ .கிருஷ்ண வேணி வரவேற்றார் .மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் கவிமாமணி சி வீரபாண்டியத்தென்னவன் தலைமை வகித்தார் .மாவட்ட மைய நூலக அலுவலர் சி .ஆர் .இரவீ ந்திரன் முன்னிலை வகித்தார் .உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா .இரவி ,கவிஞர்கள் ஆர் .அசோக்ராஜ் ,எஸ் .திருநாவுக்கரசு , அழகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் , "என்னை செதுக்கிய நூல்கள் " என்ற தலைப்பில் நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவ மாணவியர் ,வாசகர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 1000 தலா 7 பேருக்கும் ,இரண்டாம் பரிசு ரூபாய் 500 தலா 7 பேருக்கும் ,மூன்றாம் பரிசு ரூபாய் 350 தலா 7 பேருக்கும் பரிசுத் தொகையும் ,பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்புரையாற்றினார் .இராண்டாம் நிலை நூலகர் வி .பி .டி .ராஜ்குமார் நன்றி கூறினார் .வாசகர் வட் டதினரும் மாணவ ,மாணவியரும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
.
கருத்துகள்
கருத்துரையிடுக