உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !


உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !  

தோன்றின் புகழோடு தோன்றுக ! என்ற 
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டானவ்ரே !

புலிக்குப் பிறந்தது பூனையாகாது  என்ற 
பொன்மொழிக்கு இலக்கனமானவரே !

தமிழகத்தின் நிலைத்த பெருமைகளில் ஒன்றானவ்ரே !
தமிழன் பெருமையைத்  தரணிக்கு உணர்த்தியவரே !

பெரிய அய்யா பாதையில் பீடு நடை இட்டவரே !
சின்னையா என்று செல்லமாக அழைக்கப் பட்டவரே !

சிவந்தி மலர் போன்ற முகமுடையவரே !
சிரித்த முகத்திற்கும் சிறந்த அகத்திற்கும் சொந்தக்காரரே !

செய்தி ஒளிபரப்பில் குறுகிய காலத்தில் 
செம்மையான செயல் புரிந்து சிகரம் தொட்டவரே  !

கட்சி சார்பு இன்றி அனைத்துக் கட்சி செய்திகளுக்கும் 
கட்டாயம் இடம் தந்து பிரசுரம் செய்தவரே !

வருடா வருடம் ஆதித்தனார் விருது வழங்கி 
வல்லமை மிக்க எழுத்தாளர் கவிஞர்களை வளர்த்தவரே !

"தினத்தந்தி " என்ற பெயருக்கு ஏற்றபடி 
தினமும் தந்தி போல செய்திகளை முந்தித்  தந்தவரே !

தந்தி தொலைக்காட்சியில் ஈழ எழுச்சியை 
முந்தி வழங்கி முத்திரைப் பதித்தவரே !

சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்துக்காட்டானவரே ! 
சிறந்த மனிதராக வாழ்ந்து சிறந்தவரே ! 

உங்களால் பத்ம ஸ்ரீ பட்டம்  பெருமைப் பெற்றது !
உங்களால் இந்தியா விளையாட்டில் பதக்கங்கள் பெற்றது !
ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரே !
ஓயாத உழைப்பிற்குச் சொந்தக்காரரே !

எழுபத்தி நான்கு வயது வரையிலும் 
இருபத்தி நான்கு வயது இளைஞனைப போல இயங்கியவரே  !

விளையாட்டு வீரராக மட்டுமன்றி தமிழக 
விளையாட்டுத் துறையின் துணைத் தலைவரானவரே !

பத்திரிக்கைத் துறையில் தனி முத்திரைப்  பதித்தவரே !
பாமரர்களும் செய்தி படித்திட பார்த்திட வழி  வகுத்தவரே !

கோடிக் கணக்கான வாசகர்களைக்  கவர்ந்தவரே !
கோடிகளுக்கு அதிபதியானபோதும் எளிமையானவரே !

பணக்காரர் என்ற செருக்கு எல்லாத பண்பாளரே !
பார்த்தவர்கள் மீது அன்பு செலுத்திய அன்பாளரே  !

தேனீர்  கடைகளில் தமிழ் கற்பித்தா ஆசன ஆனவரே ! 
தேனினும் இனிய இலக்கியங்களுக்கு இடம் தந்தவரே !

மக்களாட்சியின் தூணான பத்திரிக்கையில் 
மக்கள் மனங்களில் நின்ற நிலைத்ததூண் ஆனவரே !

செல்லாத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு 
சகல நாடுகளுக்கும் சென்று வென்று வந்தவரே !

விஞ்ஞானம் வளர வளர பத்திரிக்கையின் 
வளர்ச்சியில் விஞ்ஞானம் புகுத்தி வென்றவரே !

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !
தமிழ்க்கவி நாமக்கல் வரிகளுக்கு உதாரணமானவரே !

தமிழர் தந்தை ஆதித்தனார் செல்லப்பிள்ளையானவரே !
தமிழர்கள் அனைவரும் நேசிக்கும் செல்லப்பிள்ளையானவரே !

கல்லூரியை பல்கலைக்கழகமாக வளர்த்தவரே !
கல்லூரிகள் பல நிறுவிகல்விப்புரட்சிப் புரிந்தவரே !

அன்பான உங்களுக்கு  மதிப்புறு முனைவர் பட்டம் 
அனைத்து பலகலைக்கழகங்கள் வழங்கி பெருமைப்பட்டன !

கூடத்து  விளக்காக இருந்த எழுத்தாளர் பலரை 
குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவரே !

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் !
ஆதித்தனார் காலம் 3 ஊர்கள் சிவந்தியார் காலம் 15 ஊர்கள் !

நீங்கள் பதினாறு அடி பாய்ந்தீர்கள் !
தங்கள் புதல்வர் பாலசுப்பிரமணி  32 அடி பாய்வார்கள் !

ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற போதும் 
ஈடு செய்வார் தங்கள் புதல்வர் சந்தேகமில்லை !

தங்களின் தடத்தில் தங்களின் தவப்புதல்வர் 
தரணிப் போற்றிட வெற்றி வாகை சூடுவார் !
உடலால் இவ்வுலகை விட்டு மறைந்தபோதும் 
உணர்வால்  மக்கள்  இதயத்தில் என்றும் வாழ்பவரே !

கருத்துகள்