ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 .
நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் அவர்கள் ,தமிழ்த்தேனீ முனைவர் இரா . மோகன் அவர்களைக் காதலித்து கரம் பிடித்து ,காதல் திருமண வெற்றியை தரணிக்குப் பறை சாற்றுபவர். வாழ்கைத்துணையாக மட்டுமன்றி இலக்கியத்துணையாகவும் இருந்து பட்டிமன்றங்களில் உரையாற்றுவதோடு நின்று விடாமல் ,முனைவர் இரா . மோகன் அவர்களைப் போலவே நூல்களும் எழுதி வருகிறார்கள் .பேச்சு , எழுத்து இரண்டிலும் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள் .நான்காம் தமிழ்ச்சங்கம் எனச் சிறப்புப் பெறும் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் இணைப்பேராசிரியாராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார்கள் . பணியில் இருந்து ஓய்வு பெற்ற போதும் இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் படைப்பாளி ..
நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .17.
தொலைபேசி 044-24342810.
விலை ரூபாய் 110
இந்நூலில் மகாகவி பாரதி தொடங்கி உலகம் சுற்றிய சொமலெ வரை 20 கட்டுரைகள் உள்ளது .பல்வேறு ஆய்வரகங்களில், கருத்தரங்கங்களில் வாசித்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .200 நூல்கள் படித்த உணர்வைத் தருகின்றன .பழச்சாறாக பிழிந்து தந்து உள்ளார்கள்
எப்படி ? எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக உள்ளது .
.
.
மகாகவி பாரதி சிறுவயதிலேயே அம்மாவை இழந்தவர் .எனவே அம்மா என்ற சொல்லைக் கேட்டாலே மனம் மகிழ்ந்து விடுவாராம் .மனைவி செல்லம்மாளின் மாண்பை பாராட்டிய உள்ளம் .அன்பு மகள் தங்கம்மாளிடம் காட்டிய பாசம் இப்படி பாரதி வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் .பாரதியார் போற்றும் புதுமைப்பெண் கட்டுரையில் பெண் விடுதலைக்காக பாடிய பாடல்களில் மிகவும் சிறந்த பாடல்களையும் ,பாரதியார் கட்டுரைகளில் சிறந்த கருத்துகளையும் மேற்கோள் காட்டி எழுதி இருப்பது சிறப்பு .பாரதியின் புதிய பரிமாணம் உணர்த்துகின்றது .
" கற்புநிலை யென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் "
பெண்கல்வி , பெண்விடுதலை ,சாத்வீக எதிர்ப்பு முறை இப்படி பல தலைப்புகளில் கட்டுரை உள்ளது .கட்டுரை வடிக்க உதவிய ஆதார நூல்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது .
புதுவையின் புதுமை , புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பெண் முன்னேற்றச் சிந்தனைகள் என்ற கட்டுரையில் பெண் குழந்தையின் பெருமை ,பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ,பெண் முன்னேற்றச் சிந்தனைகள் என பல்வேறு தலைப்புகளில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் படைப்புகள் ஆய்வு செய்துள்ளார் .மகாகவி பாரதியார் , புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இருவைன் பிம்பங்கள் மேலும் உயரும் வண்ணம் கட்டுரைகள் உள்ளது .பாராட்டுக்கள் .
இன்றைய இளைய தலைமுறை அறிந்திராத மாயூரம் வேதநாயகர் பய்டிர கட்டுரை மிக நன்று .
நகை துணி இரவல் வாங்காதே - வாங்கில்
சகலரும் ஏசுவர் தாழ்வு நீங்காதே !
இரவல் வாங்வது இழுக்கு ! என்பதை திருக்குறள் போல இரண்டே வரிகளில் உணர்த்தி உள்ளார் .மாயூரம் வேதநாயகர் .மேற்கோள் காட்டியது சிறப்பு .
கவியரசு கண்ணதாசனின் படிப்புகள் பற்றி விரிவாக ஆய்வாக உள்ளது . கவியரசு கண்ணதாசன் பற்றி எத்தனையோ கட்டுரைகள் வந்தபோதும் படித்தபோதும் இந்நூல் கட்டுரைகள் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக உள்ளது .
"கவியரசர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்களில் பெண்ணிய சிந்தனைகள் ' வித்தியாசமாக உள்ளது .
பூங்கொடியில் இல்லை விதவை ; மான்
குளத்தில் விதவை இல்லை - பகுத்
தறிவு கொண்ட மாந்தர் / தம் அறிவில் விதவையானார் !
கவியரசு கண்ணதாசன் வைர வரிகளை மேற்கோள் காட்டியதோடு நின்று விடாமல் ,இன்றைய பாடல்களில் அவல நிலைக்கு கண்டனத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார்கள் .
சின்னவீடா வரட்டுமா ? பெரிய வீடா வரட்டுமா ?
மேஷ்திரிக்கு எந்த வீடு பிடிச்சருக்கு ?
"பெண்ணே ஆணைப் பார்த்துப் பாடுவது போல் இன்று பாடல்கள் வருகின்றனவே .இதை எந்தப் பெண்தான் விரும்புவாள் .இப்படிக் கொச்சையாக ,பச்சையாக எழுதும் போக்கு எப்பொழுது மாறப் போகிறது ?என்பதுதான் இன்றைய பெண்ணியவாதிகள் எழுப்பும் வினாக்கள் ஆகும் ."
.மரபுக் கவிதை , புதுக் கவிதை ,ஹைக்கூ கவிதை மூன்றும் உள்ளது .முப்பால் போல ,முத்தமிழ் போல ,முக்கனி போல ,மூவேந்தர் போல பல்சுவை விருந்தாக நூல் உள்ளது .
மீராவின் ஊசிகள் !
எங்கள் ஊர் எம் .எல் .எ .ஏழு மாதத்தில்
எட்டுத்தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம்
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார் ..
என்ன தேசம் இந்தத் தேசம் !
ஹைக்கூ கவிதைகளில் முரண் உத்தி !
( துறவி சிறகுகளின் சுவடுகள் ப .41 )
கண்ணகி உடைத்த
சிலம்பின் பரல்கள்
பாண்டியன் விரலில் மோதிரமாய் !
------------------------------ --------------------
(என் .மாதவன் வடக்கேத் தோன்றும் வானவில் ப .61)
ஒன்றாம் வகுப்புக் குழந்தை
கை கட்டிக் கொண்டு பாடியது
கை வீசம்மா கை வீசு
------------------------------ ------------------------
ஹைக்கூ சித்தரிப்பில் தாயும் தாரமும் !
(பொன்குமார் சின்ன ஆசை ப 12 )
மகளுக்குப் பிரசவம்
துடித்தாள்
தாய் !
------------------------------ ------
மகாகவி பாரதியார் , புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைப்புகள் உள்ள இந்த நூலில் என் ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றது கண்டு மகிழ்ந்தேன் .
( இரா .இரவி விழிகளில் ஹைக்கூ ப 48 )
அம்மாவை நினைவூட்டும்
வானத்து வெண்ணிலா
நிலாச்சோறு !
.------------------------------
( இரா .இரவி விழிகளில் ஹைக்கூ ப 27 )
கணவனை மயக்கி ---------------
மனைவி சாதனை
மாமியார் முதியோர் இல்லத்தில் !
------------------------------
( அமுத பாரதி ஹைக்கூ கவிதைகள் ப 74 )
ஆறித்தான் போயிருக்கிறது
ஆனாலும் விரும்பி உண்கிறேன்
தோசையில் மனைவி மனம் !
கவிதை எழுதிய கவிஞர் பெயர் ,நூலின் பெயர் ,பக்க எண் ஆகிய விளக்கங்களுடன் மிகத் துல்லியமாக பதிவு செய்துள்ளார்கள் .பாராட்டுக்கள் .உலகம் சுற்றிய சொமலெ கட்டுரையில் அவர் பற்றி தேசியமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாராட்டையும் எழுதி உள்ளது சிறப்பு .இலக்கியம் இதயத்தை இதமாக்கும் என்பது உண்மை .மனச்சோர்வு ,மனச்சிதைவு ,மனக்குறை ,மனக்கஷ்டம் ,மன அழுத்தம் உள்ளவர்கள் இந்த நூலைப் படித்தால் அனைத்தும் நீங்கி மன அமைதி பெறுவார்கள் என்று உறுதி கூறலாம் .நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .தமிழ் கூறும் நல் உலகம் உங்கள் நூல்களை பாராட்டி வரவேற்கும் .
தரமான நூல்களை பதிப்பதில் தனிப் புகழ் பெற்றுள்ள வானதி பதிப்பகத்தார் மிகத் தரமாகப் பதிப்பித்தமைக்கு பாராட்டுக்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக