நிலா ! கவிஞர் இரா .இரவி !


நிலா ! கவிஞர் இரா .இரவி !

மீன் கடித்தும் 
சிதையவில்லை 
குளத்து நிலா !

சிறுவனின் கல் 
உடைந்தது சில நொடி 
குளத்து நிலா !

குளத்தில் 
முகம் பார்த்தது 
நிலா !

தமிழரின் 
கண்டுபிடிப்பு 
ஈரமுள்ள நிலா !

பார்க்கப்  பரவசம் 
பார்த்தால் பிரமாண்டம் 
நிலா !

கிராமத்தின் தெரு விளக்கு 
மாதத்தின் நாள் கணக்கு 
நிலா !

ஆம்ஷ்ட்ராங் கால் பட்டது 
அனைவரின் கண் பட்டது 
நிலா !

தேய்ந்து வளர்ந்து மாயம் காட்டி 
துன்பம் இன்பம் கற்பித்தது 
நிலா !

தொலை தூரத்தில் இருந்தாலும் 
நெஞ்சத்தின் அருகில் 
நிலா !

கவிஞர்களின் கருப்பொருள் 
கவிதைகளின் அட்சயப்பாத்திரம் 
நிலா !

கண்டு ரசிக்க 
கவலை நீக்கும் 
நிலா ! 

சூரிய ஒளியை 
உண்டு உமிழும் 
நிலா !

உலகில் உவமை 
இல்லா உயர்வு 
நிலா !

கருத்துகள்