நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !


நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

நீதிபதி என்பதின் இலக்கணம் சந்துரு !
நீதி தவறாத நேர்மையின் சின்னம் சந்துரு !

சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை அப்படியே 
மக்களுக்கு  வழங்குவது சந்திரன் !

உயர் பதவியின் பயனை அப்படியே 
மக்களுக்கு வழங்கியவர் சந்துரு !

சாதிக்கொரு சுடுகாடு மூட வழக்கம் ஒழித்து 
சாதி அனைத்திற்கும் ஒரே சுடுகாடு தந்தவர் சந்துரு !

பெண்ணுரிமை போற்றும் விதமாக கிராமத்துப் 
பெண்களுக்கு பூஜை செய்யும் உரிமை ஈந்தவர் சந்துரு !

மைலார்டு என்று  அழைக்கும் இங்கிலாந்தின் 
மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் சந்துரு !

பாரபட்சமின்றி சரி சமமான நீதியை 
பார்த்த வழக்குகளில் எழுதியவர் சந்துரு !

நாடகங்களுக்கு காவல்துறை அனுமதி  வேண்டாம் 
நல்ல  தீர்ப்பால் கருத்துரிமை நல்கிவர் சந்துரு !

மாசுப்பட்ட நொய்யல் ஆற்றின் கொடிய சாய 
மாசு நீங்கிட வழி  வகுத்தவர் சந்துரு !

பகுத்தறிவைப் பயன்படுத்தி மூட நம்பிக்கை ஒழிய
பல நல்ல தீர்ப்புரை எழுதியவர் நம் சந்துரு !

எண்பது மாத நீதிநாயகம் பணிக் காலத்தில் 
தொண்னூறு ஆயிரம்  மனுக்களுக்கு நீதி தந்தவர் சந்துரு !

தாமதமான நீதி அநீதி என்பதை உணர்ந்து 
தாமதமின்றி உடனடி நீதி வழங்கியவர் சந்துரு !

ஆடம்பரமின்றி எளிமையின் சிகரமாக வாழ்பவர் 
அமைதியாகவே அறப்பணிகள் புரிந்தவர் சந்துரு!

பிரிவு உபச்சார விழா வீண்செலவு வேண்டாமென்று 
பிரியத்துடன் கேட்டுக் கொண்டவர் சந்துரு !

நீதிபதிகளில் முன் மாதிரியா என்றும் வாழ்பவர் 
நீதித்துறைக்கு பெருமைகள் சேர்த்தவர் சந்துரு !

நீதிபதிகளில் சந்திரனாகத் திகழ்ந்தவர் சந்துரு !
நீதி நாயகம் சந்துரு அவர்களுக்கு இணை சந்துரு மட்டுமே !

நீதிநாயகம் சந்துரு இடத்தை நிரப்பிட யாரும் இல்லை !
நீதிதேவதை கண்களில் கண்ணீர் வழிவதைக்  காணுங்கள் !

கருத்துகள்