ஹைக்கூ ! ( சென்ட்ரியு ) கவிஞர் இரா .இரவி !


ஏழைகளின் மலர் 
பணக்காரர்கள் மலரானது 
மல்லிகை !

இன்றைய மனிதர்கள்
சத்து  இன்றி 
இல்லை பழைய கஞ்சி !

தனியாகப் பேசுகின்றனர் 
இல்லத்தரசிகள் 
தொடர்களின் பாதிப்பு !

சேதாரத்தால் 
சேதரமானார்கள் 
வாடிக்கையாளர்கள் !

செய் கூலி இல்லை என்று 
சேர்த்தார்கள் 
செம்பொன் !

தள்ளுபடி என்று 
ள்ளுபடியானது 
நாணயம் !

நாங்கள்தான் தங்கம் 
எல்லோரும் சொல்கிறார்கள் 
தங்க வியாபாரிகள்  !

வாங்கினால் அதிகம் 
விற்றால் குறைவு 
தங்கம் !


-- 

கருத்துகள்