உலகின் சிறந்த மொழி தமிழ் !கவிஞர் இரா .இரவி !
உலகில் பல மொழிகள் இருந்தாலும் ,அற்புதத்தமிழ் மொழிக்கு ஈடான மொழி உலகில் இல்லை .உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் .
அகழ்வாய்வுகளில் , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளது .மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பல மொழிகள் அறிந்தவர் .ஆராய்ந்தவர் .அவர் நிறுவிய உண்மை உலகின் முதல் மொழி தமிழ் .உலக மொழிகளின் மூலம் தமிழ் .
தமிழ் மொழி இலக்கண இலக்கியங்கள் நிறைந்த மொழி .நீதிக் கதைகள் ,வாழ்வியல் கற்பிக்கும் கதைகள் நிறைந்த மொழி .மகாகவி பாரதியார் பல மொழிகள் அறிந்தவர் .அவர் பாடினார் .யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் ..என்று கல்வெட்டுப் போல செதுக்கி உள்ளார் .
தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுவதும் அறிந்து வைத்துள்ளனர் .ஆனால் தமிழகத்தில் வாழும் தமிழர்கள்தான் தமிழ் மொழியின் சிறப்பை உணரவில்லை .ஆங்கில மோகம் பிற மொழி மோகம் பிடித்து அலைகின்றனர் .வேற்று மொழி அறிஞர்கள் பலர் தமிழ்தான் தொன்மையான மொழி .உலகின் முதல் மொழி என்ற ஆய்வு முடிவாக அறிவிக்கின்றனர் .என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில் ..தமிழர்கள் பிற மொழி கலந்து பேசுவதை விட வேண்டும் .
தமிழ் படித்தால் வேலை கிடைக்காது .தமிழ் படித்தால் பயன் இல்லை என்று இன்று பலர் தவறாக பரப்புரை செய்கின்றனர் .இன்று எல்லாத் துறையிலும் சாதித்த சாதனையாளர்கள் அனைவருமே ஆரம்பக்கல்வியை தமிழ் வழி பயின்றவர்கள்தான் .அப்துல் கலாம் தொடங்கி மயில்சாமி அண்ணாத்துரை வரை ஆரம்பக்கல்வியை தமிழ் வழி பயின்றவர்கள்தான் .
திரைப்படத்துறையில் இயக்கத்தில், இசையில், நடிப்பில் சாதித்தவர்கள் அனைவரும் ஆரம்பக்கல்வியை தமிழ் வழி பயின்றவர்கள்தான் .தாய்மொ ழியான தமிழ்மொழியில் குழந்தைகள் அனைவரும் ஆரம்பக்கல்வியை பயின்றால் .சுயமாக சிந்திக்கும் ஆற்றல் பிறக்கும் . தாய்மொழிதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உரம் போன்றது .
.
ஆரம்பக் கல்வி தமிழ் மட்டுமே இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும் .தமிழகத்தில் மட்டும்தான் தமிழே படிக்காமல் பட்டப் படிப்பு வரை படிக்க முடியும் என்ற அவல நிலை உள்ளது .வேறு எந்த மாநிலத்திலும் இந்த அவல நிலை இல்லை .
குழந்தைப் பருவத்தில் இருந்து தமிழ்மொழி கற்பித்தால் குழந்தைகள் அறிவாளியாக வரும் .மேதையாக வரும் .சாதனையாளராக வரும் .தமிழ் மொழியால் பல நன்மைகள் உண்டு .பண்பாடு ,ஒழுக்கம் ,பொறுமை ,நீதி ,நெறி அனைத்தும் கற்பிக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு .
தமிழ் மொழியின் மகுடமாக விளங்கும் திருக்குறள் .அனைவரும் படிக்க வேண்டிய வாழ்வியல் இலக்கியம் .உலக இலக்கியங்களில் திருக்குறளுக்கு இணையான ஒரு இலக்கியம் இல்லை என்று அறிஞர்கள் அறிவித்து உள்ளார்கள் .
காந்தியடிகள் லியோ டால்ஸ்டாய் நூல்களின் மூலமாக திருக்குறளின் சிறப்பை உணர்ந்து பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை வாங்கி படித்து அறிந்தார் .அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டார் காந்தியடிகள் .கா ரணம் திருக்குறளை அதன் மூல மொழியான தமிழில் படிப்பதற்காக .
குசராத்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட காந்தியடிகள் திருக்குறளுக்காக தமிழை நேசித்தார் .தமிழனாக பிறக்க ஆசைப்பட்டார் .ஆனால் தமிழத்தில் பிறந்த தமிழர்களோ தமிழ் படிக்க மறுக்கின்றனர் .ஏன் ? இந்த அவல நிலை .
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பொய் பேசி வருகின்றனர் .இந்தி தெரிந்த வடவர்கள் பலர் வடக்கே வேலை இன்றி தமிழகத்தில் வேலை தேடி தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர் .
உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை விட்டு விட்டு பிற மொழியை குழந்தைகளுக்கு கற்ப்பிப்பது மடமை .கண்ணை விற்று விட்டு சித்திரம் வாங்கி என்ன பயன் .சிந்திக்க வேண்டும்
.
பதிவுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ டணணட