அய்யகோ ! அவசரப்பட்டு விட்டாய் மணி ! கவிஞர் இரா .இரவி !


அய்யகோ ! அவசரப்பட்டு விட்டாய் மணி ! கவிஞர் இரா .இரவி !

நல்லவாடு கிராமத்தில் பிறந்த நல்லவன் நீ !
நல்ல குடும்பத்தைத் தவிக்க விட்டு சென்றாய் நீ !

ஈழத் தமிழருக்காக இன்னுயிரை ஈந்தாய் !
ஈழத்தில் விடியல் உறுதியாய் விடியும் !

தனித்தமிழ் ஈழம் விரைவில் மலரும் !
தமிழ்ஈழத் தெருவில் உன் பெயர் இடம்பெறும் !

அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா !
இனி ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை !

ஆதரிக்காமல் எதிர்க்க நினைத்தால் !
ஆட்சியை உடன் இழக்க நேரிடும் !

ஆட்சியைக் காப்பாற்ற எதுவும் செய்வார்கள் !
ஆட்சிக்காக இதுவும் செய்வார்கள் !

ஆட்சியால்தான் கோடிகள்  சுருட்ட முடியும் !
ஆட்சியில்  இறுதிவரை நீடிக்க நினைப்பார்கள் !

ஒப்பற்ற உயிரை நீத்தாய் இனிய மணி !
உலகத்தமிழர்களின் உள்ளங்களில் நீ !

மெய்க்காப்பாளர்களைக் கொன்று விட்டு !
மெய்யாகவே பச்சிளம் பாலகனைக் கொன்றான் !

கொடியவனுக்கு அடித்தாய் சாவு மணி !
கொடியோன் தப்பிக்க வழி  இல்லை இனி !

புத்தமதத்திற்கு களங்கம் கற்பிக்கிறான் !
புத்தப்பிட்சுகளும் மையாகி விட்டனர் !

நீதி கேட்ட கண்ணகியால் பாண்டியன் உயிர் நீத்தான் !
நீதிமன்றத்தின் தண்டனையால் கயவன் உயிர் நீப்பான் !

கொலை பாதகன் உயிரை எடுக்க நாள் குறிப்போம் !
குற்றவாளிக்கூண்டில் ஏற்றி கதை முடிப்போம் !

அய்யகோ ! அவசரப்பட்டு விட்டாய்  மணி ! 
அன்பான வேண்டுகோள் யாரும் இறக்க வேண்டாம் இனி !


கருத்துகள்