வன்முறை போதிப்பு ! கவிஞர் இரா .இரவி !


வன்முறை போதிப்பு ! கவிஞர் இரா .இரவி !

நீதி போதனை வகுப்புகள் இப்போது !
நிறுத்தப்பட்டன நமது  பள்ளிகளில் !

வீட்டின் அறைக்குள் தொலைக்காட்சியில் !
வன்முறை போதனை வரைமுறையின்றி !

வீட்டிற்குள்  சத்தம் வந்தது ! கவனித்தேன் !
அந்தக் காரைத் திருடு அவனைச் சுடு !

நகைக்கடைக்குள் போ ! நகையைத் திருடு !
நங்கையை அடி ! பணத்தை எடு !

கணினியில் விளையாடிய சிறுவர்கள் !
கண் இமைக்க மறந்து கத்திய கத்தல் !

பிஞ்சு உள்ளங்களில் !வன்முறை நஞ்சு !
பிள்ளைகளின் புத்தியைச்  சிதைத்தது !

விளையாட்டில் விளையாட்டாகப் பழகும் !
வன்முறை வினையாகி விடுகின்றது !

ஆசிரியரின் பாதம் பணிந்த மாணவன் அன்று !
ஆசிரியரைக்  கொலை புரியும் மாணவன் இன்று !

.

கருத்துகள்