மதுரை அரசமரம் இசை இலக்கிய சங்கம் சார்பில் 18.3.20013 அன்று நடந்தது .
மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது
அதிர்ஷ்டம் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை .அப்படி ஒன்று உலகில் இல்லை .தலைவிதி என்பதும் கற்பிக்கப் பட்ட கற்பனைதான் .ஒருவர் முடி வெட்ட கடைக்கு சென்றார் .அங்கு போய் எல்லாம் என் தலைவிதி என்று புலம்பினார் .முடி வெட்டுபவர் சொன்னார் .முடி வெட்டும் அரை மணி நேரத்திற்கே தலையை ஒழுங்காக காட்டவில்லை .கடவுள் உன் வாழ்நாள் முழுவதும் உள்ள கதை எழுதிட ஒழுங்காக தலையை காட்டி இருப்பீர்களா ?என்றார் .
அட்சய திரிதியில்
உலகப் பொதுமறை எழுதிய திருவள்ளுவரும் தெய்வத்தால் முடியாததும் முயன்றால் முடியும் என்றார் .மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே !
.
பட்டிமன்றம் ! நடுவர் ! தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே !என்று தீர்ப்பு வழங்கினார்
பட்டிமன்றம் ! நடுவர் ! தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் !
மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது
திறமையா ? அதிர்ஷ்டமா ?
மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே !கவிஞர் இரா .இரவி உரை !
இலக்கிய இமயம் மு.வ .அவர்கள் சொன்னது .ஒருவர் கரடி முடி வாங்கி வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லி விற்று வந்தார் .பலரும் வாங்க ஆசைப் பட்டனர் .உடல் முழுவதும் முடி வைத்துள்ள கரடி வைத்துள்ளவன் ஏன்? இப்படி தெருவில் அலைகிறான் .யோசியுங்கள் .என்றார் .
எடை பார்க்கும் கருவியில் எடையின் அளவு வரும் பின் புறம் அச்சடிக்கப்பட்ட சோதிடத் தகவல் வரும் .இதுவும் மிகப் பொருத்தமாகவே வரும் என்றார் நண்பர் .எடை பார்க்கும் கருவி மீது குடையையும் ,சூட்கேசையும் வைத்தேன் .எடை 50 கிலோ. பின்புறம் திருப்பினால்" நீ காதலில் வெற்றி பெறுவாய் "என்று இருந்தது .குடையும் சூட்கேசுயும் காதலில் வெற்றி பெறுமா ? சிந்திக்க வேண்டாமா ?
மன்னரிடம் சோதிடர் சொன்னார் அதிகாலையில் இரட்டைப் புறாக்கள் முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் வரும் என்றார் .உடன் மன்னன் அதிகாலையில் கண்களை மூடிக் கொண்டு இரட்டைப் புறாக்கள் முகத்தில் முழிக்கக் காத்து இருந்தார் ."அம்மா
தாயே "என்று பிச்சைக்காரன் குரல் வந்தது .விழித்துப் பார்த்த மன்னனுக்கு கோபம் வந்தது. பிச்சைக்காரனுக்கு சிரச்சேதம் செய்ய தண்டனை வழங்கினார். பிச்சைக்காரன் சிரித்தான் .சாகப் போகிறாய் ஏன் சிரிக்கிறாய் ? என்றார் .பிச்சைக்காரன் சொன்னான் " என் முகத்தில் விழித்த நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் .உங்கள் முகத்தில் விழித்த நான் சாகப்போகிறேன் .யார் முகம் ராசி இல்லாதது என்று நினைத்துப் பார்த்தேன் .சிரிப்பு வந்தது ." என்றான் .மன்னர் உடனடியாக சிரச்சேதம் தண்டனையை ரத்து செய்தார் .
.அதிர்ஷ்டம் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை .அப்படி ஒன்று உலகில் இல்லை .தலைவிதி என்பதும் கற்பிக்கப் பட்ட கற்பனைதான் .ஒருவர் முடி வெட்ட கடைக்கு சென்றார் .அங்கு போய் எல்லாம் என் தலைவிதி என்று புலம்பினார் .முடி வெட்டுபவர் சொன்னார் .முடி வெட்டும் அரை மணி நேரத்திற்கே தலையை ஒழுங்காக காட்டவில்லை .கடவுள் உன் வாழ்நாள் முழுவதும் உள்ள கதை எழுதிட ஒழுங்காக தலையை காட்டி இருப்பீர்களா ?என்றார் .
கழுதை புகைப்படத்தைப் போட்டு " என்னைப் பார் யோகம் வரும் " என்று எழுதி உள்ளனர் .கழுதையை வளர்த்து கழுதையுடனே நாள் முழுவதும் இருக்கும் துணி துவைப்பவருக்கு ஏன் ? யோகம் வரவில்லை .சிந்திக்க வேண்டும் .
இந்தியாவின் கடைக்கோடியில் ராமேஸ்வரத்தில் படகோட்டி மகனாகப் பிறந்து ,இந்தியாவின் முதற்க்குடிமகனாக உயர்ந்தவர் .செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்பு செய்தியாக வந்தவர் அப்துல்கலாம் .அவர் பொக்ரானில் அணுகுண்டை வெடித்தபோது அமெரி க்காவின் கழுகுக் கண்களான ரெடாராருக்கு தெரியாமலே வெடித்தார் .வெடித்தபின்புதான் அமெரிக்காவி ற்கு தெரிந்தது .இந்த திறமையின் காரணமாகவே அப்துல்கலாம் குடி யரசுத் தலைவர் ஆனார் .அதிர்ஷ்டம் காரணம் அல்ல .
கோவை அருகே உள்ள கோதவாடியில் பிறந்த தமிழர் மயில்சாமி அண்ணாத்துரை சந்திரனுக்கு சந்திராயான் அனுப்பி சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று உலகிற்கு முதலில் அறிவித்தார் .பிறகுதான் அமெரிக்கவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது .மயில்சாமி அண்ணாத்துரை அவர்களை உலகம் அறியக் காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .
பண்ணைப்புரத்தில் பிறந்து பொதுவுடைமைக் கட்சி மேடைகளில் அண்ணன் பாவலர்
இளையராஜா அவர்களிடம் பணி புரிந்த ஏ .ஆர் .ரகுமான் ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கார் விருது வாங்கிடக் காரணம் திறமையே !
வரதராசனுடன் இசை அமைத்து வந்த இளையராஜா அவர்கள் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்து வளர்ந்து பின் சிம்பொனி இசையமைத்து மேஸ்ட்ரோவாக இசைஞானியாக ,வளரக் காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .
முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் எழுத்திலும் ,பேச்சிலும் ,நிர்வாகத்திலும் தனி முத்திரைப் பதிக்கக் காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல முனைவர் வெ .இறையன்பு அவர்கள் சொல்வார்கள். இயங்கிக் கொண்டே இருங்கள் என்பார் .விதைத்துக் கொண்டே சென்றால் அறுவடை வரும் .அதற்காக குரங்கு போல விதைத்தவுடன் தண்ணீர் ஊற்றி விட்டு தினமும் விதையை கையில் எடுத்துப் பார்க்க கூடாது .உடனடி வெற்றி சாத்தியம் இல்லை .இயங்கிக் கொண்டே இருந்தால் திறமை வளரும் வெற்றிகள் குவியும் .
புற்று நோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்ப வந்து சாதனை புரிந்தார் .காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .யுவராஜ் பற்றி நூல் வந்துள்ளது .சச்சின் வெளியிட்டார் .
.சச்சின் அவர்களுக்கு பாராளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினர் பதவி கிடைக்கக் காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .
இப்படி சாதனையாளர்களும் ,வெற்றியாளர்களும் சாதிக்க வெற்றிப் பெற காரணம் திறமையே ! அதிர்ஷ்டம் அல்ல என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
அறிஞர் அண்ணா அவர்கள் கன்னிமாரா நூலகத்திற்கு முதல் ஆளாகச் சென்று கடைசி ஆளாக வெளியில் வருவாராம் .அப்படி நூலகத்தின் மூலம் திறமை வளர்த்தார் .ஆங்கிலப் பேராசிரியர்கள் கூட்டத்தில் பேச அறிஞர் அண்ணா சென்று இருந்தார் .உயரம் குறைவாக இருந்த அறிஞர் அண்ணாவை ஏளனமாகப் பார்த்தார்களாம் . என்ற A,B,C,D நான்கு எழுத்துக்கள் வராமல் நூறு ஆங்கிலச் சொற்கள் சொல்லுங்கள் என்றார் . ஆங்கிலப் பேராசிரியர்கள் தெரியாமல் திகைத்தனர் .ஒரு சிறுவனை அழைத்து ONE ,TWO ,THERE வரிசையாக சொல்லச் சொன்னார் .NINATY NINE வந்தும் STOP என்றார் .காரணம் HUNDRED என்றால் D வந்து விடும் என்பதால் ,இதுதான் A,B,C,D நான்கு எழுத்து வராத நூறு ஆங்கிலச் சொற்கள்என்றார் அனைவரும் அசந்தனர் .அறிஞர் அண்ணா சிறக்கக் காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .
அப்புக் குட்டி என்ற நடிகர் அவர் அழக்காக இல்லாவிட்டாலும் நடிப்பு திறமையின் காரணமாக அழகர்சாமி குதிரை என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் .காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .
பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அன்றே பாடினார் .
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் .விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் .உன் போல குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் .
தலைப்பிற்கு பொருந்தும் என் ஹைக்கூ கவிதைகள் !
இடித்துக் கட்டியதில்
நொடித்துப் போனார்
வாஸ்து பலன் !
பத்துப் பொருத்தம்
பார்த்து முடித்த மாப்பிள்ளை
விபத்தில் மரணம் !
சொல்லவில்லை
எந்த சோதிடரும்
சுனாமி வருகை !
வாங்கிய தங்கம்
அடகில் மூழ்கியது !
.
பட்டிமன்றம் ! நடுவர் ! தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே !என்று தீர்ப்பு வழங்கினார்
கருத்துகள்
கருத்துரையிடுக