மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .


மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் .3.3.2013
தொகுப்பு   கவிஞர் .இரா .இரவி .

திருமண விழாவில் வயதானவர் வாழ்த்துரை வழங்கினார் . வழங்கி கொண்டே இருந்தார் .
என் பிள்ளைக்கு பெயர் வையுங்கள் என்றார் .
திருமண விழாவில் பிள்ளைக்கு பெயர் வைக்க முடியாது என்றார் .
நீங்கள் திருமண விழாவில் வாழ்த்துரை வழங்கிய எனக்குதான் குழந்தை பிறந்து விட்டது .இனியாவது வாழ்த்துரையை நிறுத்துங்கள் .

ஆசிரியர் ; பள்ளிக்கு ஏன் ? தாமதமாக வருகிறாய். 
மாணவன் ; ரேசன் கடைக்கு போனேன் தாமதமாகி விட்டது .
ஆசிரியர் ;  உங்க அம்மாவிற்கு அறிவு இல்லையா ? பள்ளி நேரத்திலா ரேசன் கடைக்கு அனுப்புவது .
மாணவன் ; எங்க அம்மாவுக்கு அறிவு இருக்கு !உங்க அம்மாவுக்குதான் அறிவு இல்லை .அவுங்கதான் அனுப்புனாங்க. 

ஒருவன் ;உங்க அம்மாவும் அப்பாவும் ஏன் சண்டை போடுறாங்க .
மற்றவன் ;.சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணியதால்  சண்டை போடுறாங்க .
ஒருவன்; வேற சாதியா ?
மற்றவன் ;.எங்க அப்பா ஆண்  சாதி ,எங்க அம்மா பெண் சாதி .

.உண்ண   முடியாத  பன் எது ?
ரிப்பன் .

போடா முடியாத டிரெஸ் எது ?
அட்ரெஸ் 

உங்க வீடு எப்படி அமைதியா இருக்கு சண்டையே வரவில்லையே எப்படி ?
பெரிய விஷயங்கள் நான் சொல்வேன் .என் மனைவி  கேட்டுக் கொள்வாள் .
சிறிய விஷயங்கள் என்  மனைவி  சொல்வாள் நான் கேட்டுக் கொள்வேன் .
எது பெரிய விஷயம் ? எது சிறிய விஷயம் ?
கார்கில் போர் பற்றி ,ஆப்கானிஸ்தான் பற்றி ,அமெரிக்கா பற்றி பெரிய விசயங்களை நான் சொல்வேன் என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
மாவாட்டுவது ,துணி  துவைப்பது என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொண்டு செய்து விடுவேன் .சண்டை வருவதே இல்லை .

பெண்கள் போராட்டமா  எதற்கு .?
மின் தடை காரணமாக தொலைக்காட்சியில் தொடர் தெரியவில்லையாம் அதற்காக போராட்டமாம் !

பாம்பு சொன்னது ; நான் கடித்தால் சங்கு .!
கொசு சொன்னது ;  நான் கடித்தால் டெங்கு !

உணவு விடுதியில் விளம்பரப் பலகையில் ;
இன்று முதல் சைவ விடுதியாக மாறி விட்டோம் என்பதை மட்டன் அற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் .!

சுவற்றில் ஜிமிக்கி மாட்டி இருக்கே !
சுவற்றுக்கும் காது உண்டு என்பதை எங்க அப்பா நம்பி விட்டார் .

முடியாம இருக்க  மாமியார்  காதில் காரட் அல்வா என்று எதற்கு சொன்னங்க ?
அவங்க காரட் அல்வா  என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று முன்பு சொன்னாராம் .

ஒருவர் ; உங்களால் லஞ்சத்தை ஒழிக்க முடியுமா ?
மற்றவர் ; ஒழித்தால் எவ்வளவு தருவிங்க ?

கணவன் ;இந்த சாப்பாட்டை  கழுதை கூட சாப்பிடாது !
மனைவி ; மெதுவா சொல்லுங்க உங்க அம்மா சாபிடுறாங்க  .

சாப்பிட வந்தவர் .இட்லியை வேகமா கொண்டு வா என்றால் இட்லி வேகாம கொண்டு வந்துள்ளாய் .!
.
எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என்று சொல்லும் மாணவனிடம் கல்வி அதிகாரி ஆசிரியரை கேள்வி கேட்க சொன்னார் .
தெரியும் என்பதின் எதிர்பதம் என்ன ?
தெரியாது  என்றான் மாணவன் .!

இரவு 11 மணிக்கு கணவன் மனைவியிடம் சொன்னான் .கண்ணே ! சத்தியமா குடிக்க வில்லை .கதவைத் திற என்றான் .
மனைவி ; ஏங்க நம் வீடு இது .அடுத்த வீட்டு கதவை தட்டுறிங்க .!

மகன் ; அம்மா பக்கத்து வீட்டு நாயுக்கு சோறு போட்டியா ?
அம்மா ; ஆமாம் ஏன்டா ?
மகன் .நாய் தெருவில் செத்து  கிடக்கு .!

ஆசிரியர் ; பைலட்  என்பவர் யார் ?
மாணவன் ; பையில் லட்டு வைத்து தின்பவர் .!

நடத்துனர் ஏன் உட்காரும் சீட்டை கையில் எடுத்து கொண்டு வாறிங்க .
பயணி ; நீங்கதானே இறங்கும் போது சீட்டை எடுத்துக்கிட்டு வாங்க என்று சொன்னிங்க .!

தலைவர் ஏன் ? கோபமா இருக்கிறார் .
தெருவில் அவர் போட்டோ சுவரொட்டி ஒட்டியுள்ளது கீழே திருடர்கள் ஜாக்கிறதை !என்று எழுதி இருக்காம் . 

ஆசிரியர் ;கிளி ,மயில் என்ன வேறுபாடு !
மாணவன் ; கிளி சோசியப் பறவை , மயில்  தேசியப் பறவை !

மருத்துவரிடம்  ஒருவர் ;உங்க மருத்துவமனைக்கு ஈ ,காக்கை ,கொசு கூட வரவில்லையே .
மருத்துவர் ;விடுங்க அதுகளாவது பிழைத்துப் போகட்டும் .!

ஒருவர் ;பெண்ணிற்கு வழங்கிய சீரில் குரங்கு இருக்கே ஏன் ?
மற்றவர் ;மாருதி கார் கேட்டாங்க அதுதான் மாருதியவது தருவோம் என்று குரங்கு வைத்து இருக்கிறோம் .
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்