வரிகள் !வரிகள் !எங்கும் எதிலும் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !
வரிகள் வரிகள் எங்கும் எதிலும் வரிகள் !
வரிசையாக வாங்கும் வரிகள் !
உப்புக்கு வரியா ? என்று தேசப்பிதா அன்று
உணர்ச்சிப் பொங்கிட எதிர்த்தார் !
திருப்பிய பக்கமெல்லாம் வரிகள் !
தவிக்கும் மக்கள் வரிக் கட்டியே !
முகத்தில் வரிகள் விழுந்தது !
மூழ்கி தவித்து மூச்சு திணருகின்றது !
ஜனவரி பிப்ரவரி மார்ச்சுவரி ஆனது
ஜனங்களுக்கு மார்ச்சு வந்தால் மாரடைப்பு !
மத்திய மாநில அரசு ஊழியர் பலருக்கு !
மார்ச் மாதம் ஊதியம் இல்லாமல் போனது !
நின்றால் வரி நடந்தால் வரிகள் !
சென்றால் வரி கடந்தால் வரிகள் !
உண்ண வரி விடுதியில் உறங்க வரிகள் !
உடைக்கு வரி கேளிக்கை வரிகள் !
பெட்ரோலுக்கு வரிகள் ! டீசலுக்கு வரிகள் !
பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் வரிகள் !
எங்கும் எதிலும் வரிகள் !வரிகள்! வரிகள் !
இங்கு வரிகள் இன்றி எதுவுமில்லை !
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே !
ஆனந்த சுந்திரம் அடைந்தோம் என்று !
கருத்துகள்
கருத்துரையிடுக