மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
கவிஞர் இரா .இரவி !
சிறுமியின் கால் சிதைந்தது !
சின்னப் புத்திக்காரன் உன் வெடிகுண்டால் !
வெள்ளைக் கோடி ஏந்தி வந்தவர்களையும்
வெட்ட வெளியில் சுட்டவனே !
மருத்துவமனைகள் மீதும் வானூர்தி வழி
குண்டு மழை பொழிந்தவனே !
நேருக்கு நேர் மோதிட முடியாமல்
குறுக்கு வழியில் சதி செய்தவனே !
சிறுவனிடம் வீரம் காட்டிய
சிங்கள ஓநாய்களின் செயல் கொடூரம் !
பன்னாட்டு ராணுவத் துணையுடன்
உள் நாட்டு மக்களைக் கொன்ற கொடியவனே !
காட்டிக் கொடுத்த கயவன் துணையுடன் !
கண்ணான தமிழினத்தை அழித்த வெறியனே !
புத்தப் பிட்சுகளுக்கு இனி என்றும்
புத்தரை வணங்கும் தகுதி இல்லை !
வாய் மூடி மவுனமாக வேடிக்கைப் பார்த்தனர் !
நாங்கள் மன்னித்தாலும் புத்தர் மன்னிக்க மாட்டார் !
கொலைகள் கண்டிக்காமல் இருந்துவிட்டு
கலைநயமிக்க புத்தரை வணங்குவதில் பயனில்லை !
கோயில்களை குண்டுகளால் தகர்த்து விட்டு
கோயில் வந்து திருப்பதி வணங்கும் நீசனே !
அய் நா .விடம் நீ தப்பிக்கலாம் !
அமெரிக்காவிடம் தப்பிக்கலாம் !
உன் மனசாட்சியிடம் தப்பிக்க முடியுமா ?
உனக்கு மனசாட்சி இருக்காது !
மனிதருக்குதானே மனசாட்சி இருக்கும் !
மனிதவிலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
பயத்தால் தினம் நீ செத்து செத்துப் பிழைக்கிறாய் !
பாதியில் முடியும் உன் பயணம் இது உறுதி !
எண்ணிக் கொள் நாட்களை வெகு விரைவில் !
எவரும் காக்க முடியாது உனக்கு வரும் இறுதி !
உன் கதை முடிக்காமல் எமக்கு வராது இறுதி !
உன் கதை முடியும் நாள் எமக்கு தீபாவளி !
ஆதிக்கம் ஒழியும் !அடிமை விலங்கு உடையும் !
விரைவில் தனித் தமிழ் ஈழம் மலரும் !
விண் முட்ட தமிழரின் கொடி பறக்கும் !
.
கருத்துகள்
கருத்துரையிடுக