உலக குருவிகள் தினம் ! குருவிகள் !கவிஞர் இரா .இரவி !

உலக குருவிகள்  தினம் ! 
குருவிகள்  !கவிஞர் இரா .இரவி !


வீடு  இடிக்கப்பட்டு கூடு   சிதைந்தது 
மனம் தளராமல் மறுபடியும் 
குருவிகள்  !


கைகள் இன்றி கட்டின கூடுகள் 
மிக அழகாக 
குருவிகள்  !

வான் பறப்பதில் சிறியன 
மக்கள் மனதில் பெரியன  
குருவிகள்  !

பார்ப்பதற்கு அலகோ 
அழகோ அழகு 
குருவிகள்  !

உருவத்தால் சிறிது 
உணர்வால் பெரிது 
குருவிகள்  !

அன்று குடும்ப உறுப்பினர்கள் 
இன்று குடும்பங்களே தனித்தனி 
குருவிகள்  !

பறந்தால் பரவசம் 
பார்த்தால் குதூகலம் 
குருவிகள் !

வைக்கோல்  மாட்டுக்கு உணவு
வைக்கோல் வீட்டுச் செங்கல் 
குருவிகள் !

.நவீனம் மனிதனை மாற்றியது 
பறவை இனத்தை அழித்தது 
குருவிகள்  !

செல்பேசி கோபுரங்கள் பெருகப் பெருக 
குறைந்துக் கொண்டே வருகுது 
குருவிகள்  !

புகைப்படம் எடுத்து வைப்போம் 
பேரன்களுக்குக் காட்டிட 
குருவிகள் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்