புல்வெளி ரகசியம் !
.நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! புதுக்கவிதை ,ஹைக்கூ கவிதை எழுதும் ஆற்றல் மிக்கவர் இவர் எழுதாத இதழே இல்லை என்று சொல்லும் அளவிற்கு .தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .
நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்களின் முதல் ஹைக்கூ நூல் குளத்தில் மிதக்கும் தீபங்கள் .இந்நூல் கல்லூரியில் பாட நூலாக ஏற்கப்பட்ட காரணத்தால் ,நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் இரண்டாம் பதிப்பு வெளியாகி உள்ளது .இவரது இரண்டாவது நூல் நட்சத்திர தாகம் .மூன்றாவது நூல் புல்வெளி ரகசியம்.ஹைக்கூ கவிதை எப்படி? எழுத வேண்டும் என்ற ரகசியம் சொல்லும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் .
இன்றைக்கு ஊடகங்கள் சமுதாய பொறுப்புணர்ச்சி இன்றி கண்ட கழிவுகளை கக்கிக் கொண்டு உள்ளது .இந்த அவலத்தை உணர்த்தும் விதமாக உள்ள ஹைக்கூ .
.
நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வெளியீடு உதயக்கண்ணன்
10.கல்யாணசுந்தரம் தெரு ,பெரம்பூர் ,சென்னை .600011.
அலைபேசி 9444640996 மின்னஞ்சல் bookudaya@rediffmail.com விலை ரூபாய் 30.
.நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! புதுக்கவிதை ,ஹைக்கூ கவிதை எழுதும் ஆற்றல் மிக்கவர் இவர் எழுதாத இதழே இல்லை என்று சொல்லும் அளவிற்கு .தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .
மூத்த கவிஞர் அமுதபாரதி ,ஹைக்கூ ஆய்வாளர் நெல்லை சு .முத்து ,சிறந்த விமர்சகர் கவிஞர் பொன் .குமார் ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் நுட்பத்தை, சிறப்பை பறை சாற்றும் விதமாக உள்ளது .நூலிற்கு தோரண வாயில்களாக உள்ளது .
இன்றைக்கு ஊடகங்கள் சமுதாய பொறுப்புணர்ச்சி இன்றி கண்ட கழிவுகளை கக்கிக் கொண்டு உள்ளது .இந்த அவலத்தை உணர்த்தும் விதமாக உள்ள ஹைக்கூ .
குடிக்கவில்லை
உளறுகிறது
ஊடகம் !
இயற்கையைப் பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு தமிழக் கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ள ஹைக்கூ .இயற்கையைக் காட்சிப் படுத்தி ஹைக்கூ படிக்கும் வாசகரை மனதளவில் கடற்கரைக்கு ,கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்லும் ஹைக்கூ இதோ !
மலைகளை
நகர்த்த முடியவில்லை
தோற்றது கடல் !
கடவுள் ஊர்வலம் வந்தால் பக்திக்குப் பதிலாக பயம் வந்து விடுகிறது .வன்முறைகளும் நிகழ்ந்து விடுகிறது .சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நம் தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்தது இல்லை .தற்போது மிகப் பெரிய பிள்ளையார் சிலைகளை வீதியில் வைத்து ,பிள்ளையார் ஊர்வலம் பள்ளிவாசல் வழி நடத்தி ,கொட்டு அடித்து கடலில் கரைத்து கடலை மாசு படுத்தி வருகின்றனர் .
சாமி ஊர்வலம்
கறை யோடிருக்கிறது
மனிதம் !
மூன்றாவது வரியில் நாம் எதிர்பார்க்காத ஒன்றை சொல்லை வியப்பில் ஆழ்த்துவது ஹைக்கூ நுட்பம் .பொதுவாக மூங்கில் தீக்காயம் பட்டால் புல்லாங்குழல் ஆகும் யாவரும் அறிந்து ஒன்று .ஆனால் இங்கு மூங்கில் தீக்காயம் பட்டும் புல்லாங்குழல் ஆக வில்லை எப்படி ?
புல்லாங்குழல் ஆகாமலே
தீய்ந்தது மூங்கில்
வெடிகுண்டு மழை !
இந்த உலகில் உள்ள மனிதர்களில் சிலர் தவிர, பலர் கள்ளம், கபடம் , சூது ,வாது மிக்கவர்களாக வே இருக்கிறார்கள் .மனிதன் நிம்மதியாக வாழ முடிவதில்லை .மனிதன்
நிம்மதியாக வாழ்ந்த இடம் ஒன்று உண்டு .அது எது என்பதற்கு விடை சொல்லும் ஹைக்கூ .
சிறையில் மகிழ்ச்சி
சூதுகளற்ற உலகம்
அம்மாவின் கருவறை !
நம்நாட்டில் ஏழைகள் மேலும் ஏழையாகி வருகின்றனர் .பணக்கார்கள் மேலும் பணக்கார்களாகி வருகின்றனர் .அதற்கு ஏற்றபடியே அரசியல்வாதிகள் திட்டம் தீட்டுகின்றனர் .இந்த நாட்டில் வறுமை இன்னும் ஒழிந்தபாடில்லை என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
வைரவிழா வந்தும்
இன்னும் இருண்டே இருக்கிறது
குடிசை !
குடிசைகளுக்கு மின்சார இணைப்பு வரவில்லை ,அப்படியே வந்தாலும் மின்சாரம்
இருப்பதில்லை .ஏழைகளுக்கு மின்தடை காலங்களில் பயன்படுத்தும் மின்னாக்கி வாங்கிட வசதி இல்லை .
குழந்தை பிறந்ததும் வீதியில் விட்டுப்போகும் அவலமும் நம் நாட்டில் நடந்து வருவது உண்மை .தவறு எதுவுமே செய்யாத குழந்தைக்கு தண்டனை தந்து விடுகின்றனர் .
குப்பைத் தொட்டியில்
அழுது கொண்டிருக்கின்றன
புரட்சி விதைகள் !
ஆறறிவு மனிதனை விட அய்ந்தறிவு விலங்குகள் நுட்பமான அறிவோடு விளங்குகின்றன .மனிதன்தான் தனக்கு இருக்கும் ஆறாம் அறிவான பகுத்தறிவை மறந்து விடுகிறான் .பல கிராமங்களில் நாம் கண்ட காட்சியை ஹைக்கூவாக எழுதி அக்றிணையை உயர்திணை ஆக்கி உள்ளார்.
நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் !
வண்டிக்காரன் தூங்கியும்
விழிப்போடு செல்கிறது
மாடு !
நம் நாட்டில் சாமியார் தொல்லை கொசுத் தொல்லை இரண்டையும் ஒழிக்க முடிவதில்லை சாமியார்கள் இரண்டே வகைதான் .பிடிபட்ட சாமியார் .பிடிபடாத சாமியார் .செல்வாக்கைப் பயன் படுத்தி பிடிபடமல் சிலர் தப்பி வருகின்றனர் ..முன்பு ஒரு சாமியார் இருந்தார் .வாயில் லிங்கம் எடுப்பார் .வியந்தனர் மக்கள் .அவரிடம் வாய் வழியே பூசணிக்காய் எடுங்கள் என்றால் எடுக்க முடியுமா ? முடியாது.வாய்க்குள் ஒழித்து வைக்க முடிந்ததை மட்டுமே அவரால் எடுக்க முடியும் .மற்றொரு சாமியார் இருந்தார் கேனில் அவர் கை வைத்தால் தண்ணீரை பெட்ரோல் ஆகும் . மக்கள் வியந்தனர் .அவர் காவிரியில் கை வைத்தால் பெட்ரோல் ஆறு நமக்கு கிடை த்து இருக்குமே .அது அவரால் முடியாது .வித்தை கேனில் மட்டுமே நிகழ்த்த முடியும் .சாமியார்களின் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டினாலும் மக்கள் இன்னும் திருந்துவதில்லை .சாமியார்களிடம் பணம் தந்து ஏமாந்து வருகின்றனர் .இந்நூலில் சாமியார் பற்றி துணிவுடன் ஒரு ஹைக்கூ .
லோக குரு
காம ருதுவானார்
துறவானது சிறை !
நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்களுக்கும் , பதிப்பாளர் உதயக்கண்ணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
.
கருத்துகள்
கருத்துரையிடுக