பரதேசி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
.
தேயிலைத் தொழிலாளர்களின் வேதனையை சிரமத்தை நன்கு படமாக்கி உள்ளார் .பாலாவின் வெற்றிக்குக் காரணம் அவரது படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் .இந்தப் படத்திலும் மிக இயல்பு உள்ளது .வழக்கமான திரைப்படங்களில் கோழையாக இருக்கும் கதாநாயகன் வீரனாக மாறி வில்லனை கதை முடிப்பான் .ஆனால் இந்தப்படத்தில் வில்லன் சாக வில்லை வழக்கமான முடிவு இல்லை .மசாலாப்படம் பார்த்து வளர்ந்த ரசிகர்களை மற்றொரு உயர்ந்த தளத்திற்கு அழைத்து செல்லும் முயற்சி இது .
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
http://www.noolulagam.com/ product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
இயக்கம் பாலா .
பாலா படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு அதனால் முதல் நாளே திரையரங்கம் சென்று பார்த்தேன் .இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு பிறகு காட்சிகளில் நேர்த்தி வைப்பவர் இயக்குனர் பாலா .சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ,தேயிலைத் தோட்டத்திற்கு கொத்தடிமையாக மக்களை கங்காணி மூலம் கடத்தி வந்து மனிதாபிமானமற்ற முறையில் வேலை வாங்கி இன்னல் படுத்தும் கதை .முதல் பாதி சிறு சிறு நகைச்சுவையுடன் படம் செல்கின்றது .சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வசனம் கிராமிய மணம் கலந்து படத்திற்கு சுவை கூட்டி உள்ளது .இசை ஜி வி .பிரகாஷ் பின்னணி இசை மிக நன்று. .படம் தொடங்கும் போது கிராமத்தை காட்டும் போது ஒருவர் கூட பார்க்காமல் அவரவர் அவர் வேலையை பார்பதுப்போல படம் பிடித்து படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார் .பாலா .மிகச் சிறப்பான ஒளிப்பதிவு .
கதாநாயகனாக நடித்துள்ள அதர்வா மிக நன்றாக நடித்துள்ளார் ".புலிக்குப் பிறந்தது பூனையாகாது" என்ற பொன்மொழியை மெய்ப்படுத்தும் விதமாக அவரது தந்தை முரளியை மிஞ்சும் விதமாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது உறுதி .ஊர் மக்களுக்கு தமுக்கு அடித்து செய்தி சொல்லும் அதர்வா.தேயிலைத் தோட்டத்து கொத்தடிமையாக பின் போகிறார் .தேயிலைத் தோட்டத்து கொடுமையில் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது காவலர்களிடம் பிடிபட்டதும் தண்டனையாக குதிங்கால்
நரம்பை விட்டி விடும் காட்சி மிகவும் கொடுமை .மிக நன்றாக நடித்துள்ளார் .

அதர்வாவை ஊர் அழைக்கும் பெயர் ஒட்டுப்பொறுக்கி ஆனால் அவர் வைத்துக் கொண்ட பெயர் ராசா .ஊருக்கு உழைக்கும் அப்பாவியாக வருகிறார் .மெல்லிய காதல் .காதலியின்
படம் முடிந்து வெளியே வரும்போது இனம் புரியாத சோகம் மனதை தொற்றிக் கொள்கிறது சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு .நடந்த உண்மை கதையை இப்போது படம் எடுக்க துணிவு வேண்டும் .படம் முழுவதும் கதை நடந்த காலத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளனர் .பழைய காலத்து கார் ,பழைய காலத்து முறையில் தலைமுடி ஊர் மக்கள் அனைவருக்கும் உள்ளது .படம் முழுவதும் படம் பார்ப்பதுபோல இல்லாமல் கண் முன்னே நிஜ நிகழ்வை பார்பதுப்போன்ற உணர்வை ஏற்படுத்தி இயக்குனர் பாலா வெற்றி பெறுகின்றார் .
அம்மா எதிர்ப்பு .என் மகளை மறந்து விட்டேன் நினைக்க மாட்டேன் என்று ஊர் முன்னிலையில் சூடம் அணைத்து சத்தியம் கேட்கும் போது ,உடன் அதர்வா பாட்டி வந்து சூடம் அணைத்து பேரனை காப்பாற்றுகிறார் .பாட்டி பாத்திரம் மிக நன்று .தாடி வைத்து பெரியப்பாவாக வருபவர் .ஊர் மக்கள் ,தேயிலைத் தோட்டத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவராக நடிப்பவர் .கங்காணி மற்றும் ஆங்கிலேயர்கள் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளனர் .அனைவரிடம் பாலா நன்கு வேலை வாங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
.
தேயிலைத் தொழிலாளர்களின் வேதனையை சிரமத்தை நன்கு படமாக்கி உள்ளார் .பாலாவின் வெற்றிக்குக் காரணம் அவரது படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் .இந்தப் படத்திலும் மிக இயல்பு உள்ளது .வழக்கமான திரைப்படங்களில் கோழையாக இருக்கும் கதாநாயகன் வீரனாக மாறி வில்லனை கதை முடிப்பான் .ஆனால் இந்தப்படத்தில் வில்லன் சாக வில்லை வழக்கமான முடிவு இல்லை .மசாலாப்படம் பார்த்து வளர்ந்த ரசிகர்களை மற்றொரு உயர்ந்த தளத்திற்கு அழைத்து செல்லும் முயற்சி இது .
அன்று நம் மக்கள் வெள்ளையர்களிடம் எப்படி அடிமைப்பட்டு இருந்தனர் என்பதை விளக்கி எத்தனையோ படங்கள் வந்து இருந்தாலும் .இந்தப்படம் வேறு மாதிரி .புது மாதிரி .
கதாநாயகியும் மிக நன்றாக நடித்து உள்ளார் .பிம்பங்களை உடைத்து பாத்திரமாகவே அனைவரும் மாறி உள்ளனர் .
இயக்குனர் பாலாவின் வெற்றிப்பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெரும் .கதையே இன்றி நடிகையின் சதையையும் ,நடிகரின் நம்ப முடியாத சண்டையையும் மட்டும் நம்பி படம் எடுக்கும் மசாலா இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய நல்ல படம் .
உலகத் தரத்தில் வந்துள்ளது .உலகப்பட விழாவில் இடம் பெற்றால் வெற்றி பெறும் .உண்மை நிகழ்வுகளின் வலியை வெண்திரையில் உணர்த்தும் படம் .
தினம் பல முறை தேநீர் அருந்துகிறோம் .ஆனால் தேயிலைத்தோட்டது தொழிலாளர்களின் உழைப்பை உணர வைக்கும் படம் .
அன்று நமை ஆண்ட வெள்ளையர்கள் மனிதாபிமானமற்ற முறையில், விலங்கு போல நடந்து கொண்ட முறையையும் .,ஆதிக்க மனப்பான்மையும் நன்கு காட்சிப்படுத்தி உள்ளார் .பாலா .அன்று இருந்த வெள்ளையர் ஆதிக்கம் ஒழிக்கப்படாலும் .இன்று வேறு வடிவில் வெள்ளையர் ஆதிக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறது .என்பதை உணர முடிந்தது .
மூட நம்பிக்கைகள் மிகுந்த தமிழ்த் திரைப்படத்துறையில் பரதேசி என்று பெயர் வைத்த பாலாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் .
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
http://www.noolulagam.com/
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக