இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா ! கவிஞர் இரா .இரவி .


இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா !      கவிஞர் இரா .இரவி .

மலையாளிகளை சுட்டு கைதான  இத்தாலி கப்பல்ப்படையினரை  இத்தாலி  தேர்தலில் வாக்களித்தப் பின் திருப்பி அனுப்புகிறோம் என்று சொல்லி மீட்டுச் சென்று .தற்போது அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று பெப்பே காட்டி விட்டார்கள் .இத்தாலியை நம்பி இந்தியா மோசம் போனது .இத்தாலியின் பித்தலாட்டம் கண்டிக்க வேண்டியதுதான் .உடனே இத்தாலி தூதரகத்தில் கண்டிப்பு ,பிரதமர் மன்  மோகன் சிங் கண்டனம் செய்துள்ளார் . இத்தாலி நம்பிக்கை மோசடி செய்து விட்டது .

இலங்கை  கப்பல்ப்படை தமிழக மீனவர்களை நூற்றுக் கணக்கில் சுட்டு க் கொன்றது .காயப் படுத்தியது பல வருடங்களாக இந்தக் கொடுமை தொடர்கின்றது .இந்தியா  தானம் தந்த கட்சித்தீவில் தமிழக மீனவர்கள் வலை உணர்த்திட உரிமை ஒப்பந்தத்தில் இருந்தபோதும் , கட்சித்தீவில்  தமிழக மீனவர்களை ஈவு இரக்கமின்றி ,மனிதாபிமானமின்றி சுட்டுத் தள்ளும் 
இலங்கை  கப்பல்ப்படையினரில் ஒருவரையாவது ஒரு முறையாவது இந்திய ராணுவம் கைது செய்தது உண்டா ? மலையாளி உயிர் என்றால் மதிப்பு அதிகம் .இத்தாலியினரை கைது செய்தீர்கள் .ஆனால் தமிழக மீனவர்களை சுட்டுக் கொள்வதை வாடிக்கையாவும் ,வேடிக்கையாகவும் செய்து வரும் இலங்கை கப்பல் படையை இன்று வரை இந்திய ராணுவம் 
கைது செய்யாததன் மர்மம் என்ன ?தமிழன் உயிர் என்றால் மட்டமா ? உயிர் என்றால் எல்லா உயிரும் உயர்வானதுதான் .ஏமாளியாக இருந்த எம் தமிழர் விழித்து எழுந்து விட்டனர் .
மலையாளிக்கு ஒரு நீதி !.தமிழருக்கு ஒரு நீதி !என்ற போக்கை கடைபிடிக்கும் பேராயக் கட்சியே மாற்றிக் கொள் ! உலகத் தமிழினம் ஒன்று கூடி விட்டது .இனியாவது திருந்திடு !

கருத்துகள்