விஷ்வரூபம் !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
கமல் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் .பாராட்டுக்கள் .கதக் நாட்டிய கலைஞராக மிக சிறப்பாக அபிநயம் செய்துள்ளார் .திருநங்கை போல நன்கு முக பாவம் செய்துள்ளார் .சண்டைக் காட்சிகளில் வேகம் உள்ளது . சாணு வர்க்கீஸ் ஒளிப்பதிவு மிக நன்று .ஆப்கானிஸ்தான் போன்ற செட் அமைப்பு நன்று .கலை இயக்குனருக்கு பாராட்டுக்கள் .பாடல் பின்னணி இசை யாவும் மிக நன்று .தொழில் நுட்பத்தில் காட்டிய கவனத்தை கதைக் கருவிலும் காட்டி இருக்க வேண்டும் .
ஆங்கிலப்படம் பார்ப்பது போன்ற உணர்வே வருகிறது .காரணம் படத்தில் நடித்து இருப்பவர்களும் ஆங்கிலேயர்கள் . பேசும் வசனமும் ஆங்கிலம் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர்கள் பேசுவது உருது ,அரபு மொழிகள் , .தமிழ் எழுத்து திரையில் தெரிந்தாலும் ஒரு வித அந்நிய உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை .பாமரகளுக்கு புரியாத உரையாடல்கள் உள்ளது .வில்லனாக வருபவர் நன்கு நடித்துள்ளார் .ஆண்ட்ரியா பாத்திரம் ஆட மட்டும் பயன் பட்டுள்ளது .
அமெரிக்காவை கதாநாயகனாகவும் ஆப்கானிஷ்தானை வில்லனாகவும் சித்தரித்து உள்ளார் .அமெரிக்க ராணுவம் எந்த நாட்டிற்க்குள் நுழைந்தாலும் அந்த நாட்டை விட்டு திரும்புவதில்லை என்பது உலகம் அறிந்த உண்மை .இன்னும் வியாட்னாமிலும் .அமெரிக்க ராணுவம் உள்ளது . ஆப்கானிஷ்தானிலும் உள்ளது
.இஸ்லாமியர்கள் இந்தப்படத்தை ஆட்சேபித்ததில் நியாயம் உள்ளது .இஸ்லாமியர்கள் பலரை தீவிரவாதியாகவும் இஸ்லாமிய சிறுவனின் கண்ணைக் கட்டி விட்டு கையில் துப்பாக்கி கொடுத்து என்ன துப்பாக்கி என்று கேட்டதும் ஏ .கே .47 என்கிறான் .தோட்டாக்களை தடவிப் பார்த்து அளவு எண்களை சரியாக சொல்கிறான் .இது போன்ற காட்சிகள் இஸ்லாமியர் குழந்தைகளை தீவிரவாதியாக வளர்க்கிறார்கள் என்பது போல தோன்றுகிறது .இஸ்லாமியர் எல்லோரும் தீவிரவாதி அன்று .இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை .இஸ்லாலாமியரில் பலரும் மிக நல்லவர்களே .ஒரு சிலர் தீவிரவாதி இருக்கலாம் .எல்லா மதத்திலும் ஒரு சில தீவிரவாதி உண்டு .
திரைப்படத்தில் விஜயகாந்த் ,அர்ஜுன் ,சரத்குமார் ,கமல் உள்ளிட்ட பலரும் இஸ்லாலாமியர் என்றாலே தீவிரவாதிகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள் .இனியாவது நிறுத்துங்கள் .கமலின் ரசிகன் என்ற முறையிலும் ,அவரை போன்ற பகுத்தறிவாதி நான் என்ற முறையிலும் கமலிடம் ஒரு வேண்டுகோள் விஷ்வரூபம் .பாகம் 2 எடுப்பதை நிறுத்தி விட்டு மக்களை செம்மைப் படுத்தும் வன்முறை இல்லாத நல்ல படம் எடுங்கள் .
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அடுத்த படியாக மிகச் சிறந்த நடிகர் கமல் என்பதில் சந்தேகம் இல்லை .ஆனால் உங்கள் படத்தில் உயிரோடு கழுத்தை அறுக்கும் காட்சி .பொதுமக்கள் முன்னிலையில் திறந்த வெளியில் உங்கள் பாத்திரத்தின் வஞ்சகத்தால் நிரபராதியை தூக்கில் போடும் காட்சி ,கையை வெட்டி எரியும் காட்சி .வெடி குண்டால் உடல் மட்டும் சிதறி வந்து விழுந்து துடிக்கும் காட்சி அளவிற்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் .இளகிய மனசுக்கார்கள் திடப் படுத்திக் கொள்ளுங்கள் என்று படம் தொடங்கும் போது எழுத்து வேறு போட்டு வன்முறை காட்ட வேண்டிய அவசியம் ஏன் ?நாட்டில் நடந்ததை காட்டுகிறோம் .என்பார்கள் .நாட்டில் நடந்த கெட்டதை ஏன் ? காட்ட வேண்டும் .நாட்டில் நடந்த நல்லதை காட்டலாமே
!
உலக அளவில் சண்டைக்கு உலகப்புகழ் பெயர் பெற்ற திரு ,ஜாக்கி ஜான் :" எனக்கு 58 வயதாகி விட்டது இனி நான் வன்முறை சண்டைக் காட்சிகளில் நடிக்கப் போவது இல்லை .நாட்டில் ஏற்கெனவே வன்முறை பெருகி விட்டது. .இந்த அறிவிப்பை கமல் கவனத்தில் கொள்ள வேண்டும்
அமெரிக்கா நடத்திய வன்முறைகள் செய்தியாக நிறைய வந்தது .அதை .கமல் கவனத்தில் கொள்ள வில்லை .பெட்ரோல் எண்ணை வளத்தை கொள்ளை
அடிப்பதற்காக அரபு நாடுகளில் நடத்தும் திருவிளையாடல்கள் உலகம் அறிந்த உண்மை .எண்ணை வளம் இல்லாத இலங்கையில் மட்டும் அமெரிக்காவும் அய் நா மன்றமும் இன்று வரை பாரா முகமாக இருந்து ராஜபட்ஜெயின் வன்முறையை வேடிக்கை பார்த்து வருவது கமலுக்கு தெரியாதா ?
இந்தப்படம் வெற்றிப்படம் .வசூல் குவிக்கும் படம் ,ஆனால் உங்கள் மன சாட்சியை கேட்டுப் பாருங்கள் ,நீங்கள் படத்தில் காட்டிய அளவிற்கு அமெரிக்கா நல்ல நாடும் இல்லை .இஸ்லாமியர்கள் கெட்டவர்களும் இல்லை என்பதை உணருங்கள் .
நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? என்று படத்தில் கேட்ட வசனத்தை .உங்களை நேரில்,நிஜத்தில் கேட்கும் படி நடக்காதீர்கள் .அமெரிக்கா உலக ரவுடி என்பது உலகம் அறிந்த உண்மை .அமெரிக்காவின் ஒரு முகம் காட்டிய நீங்கள் மறு முகம் ,கோர முகம் காட்ட வில்லை ..
.நமது இனிய நண்பர் பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் அவர்களின் செல்லில் இருந்து தசாவதாரம் படத்தில் உங்களின் சிறந்த நடிப்பை பாராட்டியவன் நான் .சிறந்த விமர்சனம் எழுதியவன் நான் ..உங்களுக்கு பல இஸ்லாமிய ரசிகர்கள் உண்டு ..அவர்கள் இந்தப்படத்தை பார்க்க விரும்ப வில்லை .ஒரு சிலர் பார்த்தாலும் வருத்தம் அடைவது உறுதி .
கமலஹாசன் அவர்கள் தனக்கு உள்ள நடிப்பு ஆற்றலை ,மற்ற நடிகர்களுக்கு இல்லாத எழுத்து ஆற்றலை ,சிந்திக்கும் திறனை ,இயக்கும் திறமையை நல்ல விசயத்திற்கு மட்டும் பயன்படுத்தட்டும் என்ற வேண்டுகோளை வைத்து முடிக்கின்றேன் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்
கருத்துரையிடுக