மதுரையில் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் மன்றம் போட்டிகள் !

மதுரையில் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் மன்றம் போட்டிகள் !

மதுரையில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் மன்றம் சார்பில்
மகாகவி பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்
பள்ளி மாணவர்களுக்கு  பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டி,கவிதைப் போட்டி
நடைபெற்றது .தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன்
தலைமையில் தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்கள்  விழா ஏற்பாடுகளை செய்து
இருந்தனர் . போட்டிகளுக்கு நடுவர்களாக உதவி சுற்றுலா அலுவலர்   கவிஞர்
இரா .இரவி ,மாமதுரை கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத்
தென்னவன், தேமதுரைத் தமிழோசை இதழ் ஆசிரியர் தமிழாலயன் , அரசு
அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் பெரியசாமி ,மதுரை கல்லூரி மேல்நிலைப்
பள்ளி தமிழாசிரியர் பொன் சந்திர சேகரன் ,கவிஞர் பொற்கைப் பாண்டியன்
உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் .வெற்றிபெற்ற மாணவ
மாணவியருக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்சுல் மிஸ்ரா பரிசுத் தொகை
வழங்கி பாராட்டினார் .
நன்றி புகைப்படக் கலைஞர் திரு ஹரி குமார்

கருத்துகள்