ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இயக்கம் :ஜி.என்.ஆர் குமரவேல்.

நடிப்பு கிஷோர் .

அதிசயமாக வரும் மிக நல்ல படங்களில் ஹரிதாஸ் படமும் ஒன்று .சமுதாயத்திற்கு கருத்து சொல்லும் மிகச் சிறப்பான படம் .இயக்குனர் :ஜி.என்.ஆர் குமரவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஆட்டிசன் குழைந்தைகள் பற்றிய புரிதலை உருவாக்கிய படம் .படத்தில்  சினேகா ,சூரி, சிறுவன் அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர் படம் முடிந்து வெளியில் வந்த பிறக்கும் படத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்து மீள முடியவில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி ...

ரவுடிகளை கொல்லும்   காவல் அதிகாரியாக கிஷோர் .ரவுடிகள் கொலை எதிர்பாராமல் நடப்பதில்லை திட்டமிட்டே நடத்தப்படுகிறது என்ற உண்மையை படத்தில் காட்டிய இயகுனருக்கு பாராட்டுக்கள் .மனைவியை  இழந்த கிஷோர்ஆட்டிசனால் பதிக்கப்பட்ட தன மகனை கிராமத்தில் உள்ள அன்னையிடம் வளர்க்க  வைக்கிறார் .அன்னை இறந்தவுடன் தன மகன் ஹரியை தன்னுடன் ச்சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார் .நட்பிற்காக மருத்துவராக நடித்துள்ள யூகி சேது பாத்திரம் மிக நன்று .படம் முடிந்து வந்தப்பின்னும் மனதில் நிற்கும் பாத்திரம்.
 .

ஹரி பைத்தியம் அல்ல அவனுக்கு இருப்பது நோய் அல்ல சிறு குறைதான் .இதுப்போன்ற பதிப்பு வந்தவர்கள் பின்னாளில் பெரிய சாதனையாளர்களாக வந்ததை எடுத்துக் கூறி  ஹரியின் மீது கவனம் செலுத்தினால்  பெரிய சாதனையாளராக வருவான் என்று மருத்துவர் அறிவுரை கூறியதும் .தந்தை காவல் அதிகாரி பதவியில் விடுப்பு கேட்கிறார் .ஆணையாளர் விடுப்பு தர மறுக்கிறார் .ஆதி என்ற ரவுடியை  கொல்ல என்னை விட்டால் வேறு காவல் அதிகாரி பலர் உள்ளனர் .ஆனால் என் மகன் ஹரியை கவனிக்க நான் மட்டுமே உள்ளேன் .எனவே எனக்கு விடுப்பு அவசியம் எட்ன்று வாதிட்டு .,என் பொறுப்பை ரமேஷ் பார்ப்பான் என்று சொல்லி விட்டு வந்து மகன் ஹரிக்காக வாழத் தொடங்குகிறார் .

சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கிறார் .இப்படிப்பட்ட குழந்தைகளை பொதுவான பள்ளிகளில் சேர்க்க அரசு ஆணை உள்ளது என்ற தகவலும் தந்து உள்ளார் இயக்குனர் ..அங்கு ஆசிரியராக சினேகா நடித்து உள்ளார் .மாணவன் மீது அன்பு செலுத்தும் நல்ல பாத்திரம் .நடிகர் சூரி மனதிற்குள் பேசி சிரிக்க வைக்கிறார் .
.
பள்ளியில் இருந்து சுற்றுலா அழத்து சென்றபோது மாணவன் ஹரி காணமல்போக , சினேகா துடித்து விடுகிறார் .மற்றொரு நாள்  ஆசிரியர் சினேகா வெளியில்  ஹரியை அழைத்து  சென்றபோது தங்கச் சங்கிலியை திருடி விட்டான் என்று ஹரியை அடிக்கும்போது துடித்து தடுத்து விளக்கம் சொல்கிறார் .சிறப்பு குழந்தை
( special child ) என்ற சொல்லாட்சி நன்று .ஹரி குழந்தையாக இருந்தபோது இருந்து குதிரையை பொம்மையை எப்போதும் கையில் வைத்து இருக்கிறான் .
அந்த தங்கச் சங்கிலியில் குதிரை பொம்மை இருந்ததால் அதனை எடுத்து இருக்கிறான் .என்பதை அறிய முடிகின்றது .அதற்குள் பைத்தியமா ? என்று கேட்டு மனதை புண்  படுத்துகின்றனர் .

ஹரியை அவன் தந்தை கடைக்கு அழைத்து சென்ற போது  கடையில் இருந்த ஜாம் பாட்டிலை தட்டி விட உடைந்த கடையில் சிதற , கடைக்காரார் வந்து கண்டபடி திட்டுகிறார் .பணம் தந்து  விடுகிறேன் என்று சொன்னபோதும் பைத்தியமா ? என்று திட்டுகிறார் .உடன் கோபப்பட்டு அடிக்கப் போகிறார் .மனதை நெகிழ   வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது .

பாடல் எழுதியுள்ள திரு .அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள் .தாயின் கருவில் கலையாமல் பிறந்ததே பிறந்ததே வெற்றி என்ற பாடலும் ,பாடலில் வெள்ளத்தனைய ,தெய்வத்தான் என்ற முக்கியமான இரண்டு திருக்குறளும் பாடலில் இடம் பெற்றது சிறப்பு . ,காவலர்களின் சிரமம் சொல்லும் கானாப் பாடலும் மிக நன்று .இந்தப்பாடலுக்கு  நடிகையின் கவர்ச்சி நடனம் தவிர்த்து இருக்கலாம் .இரட்டை அர்த்தத்துடனும் ஆங்கிலச் சொற்களும் கலந்து எழுதும் பாடல் ஆசிரியர்கள் அண்ணாமலையை  பார்த்து திருந்த வேண்டும் .

சாதாரணமாக நடக்கவே சிரமப்படும் ஹரி பந்தயக் குதிரைகள் ஓடுவதைப் பார்த்து ஓடுகிறான் .இதனைக்கண்ட   தந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவனை ஓட்டப்பந்தய வீரனாக  உருவாக்க மிகக் கடுமையாக உழைக்கிறார் .முயற்சி பயிற்சி எடுத்து போட்டியில் கலந்துக்  கொள்ள தயாராகி விடுகிறான் .போட்டியில்  பங்கு பெரும் மாணவர்கள் பெயரில் ஹரி பெயர் இல்லை  என்றவுடன் தேர்வுக் குழுவினருடன் வாதாடி ஹரி பெயரை இடம் பெற வைக்கிறார் .
போட்டியில் ஹரி ஓடி வெற்றி பெறுகிறான் .அவன் வெற்றி பெற்றதும் படம் பார்க்கும் அனைவருக்கும் நாம் வெற்றி பெற்ற உணர்வு வருகின்றது .இது இயக்குனரின் வெற்றி .
..போட்டிக்கு செல்லும் வழியில் ரவுடி ஆதியை பார்க்க , ஆசிரியர் சிநேகாவுடன்  ஹரியை அனுப்பி விட்டு

ரவுடியை விரட்டி சென்று ஆதியை கொல்கிறார் .கொன்ற பின் பின் புறமாக மற்றொரு ரவுடி குத்த தந்தை இறக்கிறார் ..ரவுடிகளை காவல் துறை சுட்டுக் கொள்வதால் மற்றொரு ரவுடியால் காவலர்க்கு  சாவு உண்டு. கொலை தொடர் கதையாகும் என்ற உண்மையையும் உணர்த்தி  உள்ளார் .காவல்துறை அதிகாரிகள் நண்பர்களுடன் அடிக்கடி மது அருந்தும் காட்சியை தவிர்த்து இருக்கலாம் .

. அரைத்த மாவையே அரைக்கும் விதமாக தீவிரவாதிகள் கதையை எடுக்கும் இயக்குனர்களும் .நடிகர்களின் புகழ் பாடும் விதமாக விதமாக படம் எடுக்கும்  இயக்குனர்களும் .பார்த்துத்திருந்த வேண்டிய நல்ல படம் இது . காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் படம் .

 

சிறுவன் ஹரி ஆசிரியர் சினேகா பராமரிப்பில் வளர்ந்து மிக பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாறி பதக்கம் பரிசு பெற்று தந்தையைப் பற்றி நினைத்து பார்க்கிறான் ".ஊக்கப் படுத்தினால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்ப்பான் " என்ற பொன் மொழியின் விரிவாக்கம் தான் இந்தப்படம் .ஆட்டிசன் குழந்தைகளையும் காயப் படுத்தாமல் ஊக்கப் படுத்தினால்  சாதிப்பார்கள் என்ற உண்மையை  உலகிற்கு உணர்த்தியுள்ள மிக நல்ல படம் .


படத்தில் .உரையாடல் எழுதியவரையும் பாராட்ட வேண்டும் .தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல வசனம் .எழுதி உள்ளார் .சமுதாயத்தை  சீர்படுத்த உதவும் மிக நல்ல படம் .ஆட்டிசன் குழந்தைகள் மீது அன்பு செலுத்த வைக்கும் அற்புதமான படம் .இந்தப்  படத்திற்கு உறுதியாக  தேசிய விருது கிடைக்கும் .இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டியது நல்லவர்களின் கடமை .அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் .இயக்குனரை தயாரிப்பாளரை ஊக்கப்படுத்துங்கள் .



--



கருத்துகள்