உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

உருவி எடுக்கப்பட்ட கனவு !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !
செல் 994298123
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அமுதமதி வெளியீடு ,65.மேலபச்சேரி ,திருப்பரங்குன்றம் .மதுரை .625005 விலை ரூபாய்
.செல்  30.8608341428.

நூல் ஆசிரியர் கவிஞர் இரா செராயன் திருப்பரங்குன்றத்தில் வாழும் கட்டிடப் பொறியாளர் மட்டுமல்ல புதுக்கவிதைக் கட்டுவதிலும் வல்லவர் என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது .திருப்பரங்குன்றத்து கவிதைக் குன்று புலவர் தமிழ்க்கூத்தனார் கவிதைப் ப
ட்டறையில் வளர்ந்தவர் .திருப்பரங்குன்றத்து 16 கால் மண்டபத்தில் நடக்கும் கவியரங்கங்களில் என்னோடு கவிதை பாடும் இனிய நண்பர் .
எழுத்தாளர் ,நல்ல சிந்தனையாளர் ,இயக்குனர் பாரதி கிருஷ்ணா குமார் அணிந்துரை
அழகுரையாக உள்ளது .
மனிதனுக்கும் தேனீக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் புதுக் கவிதை .இதோ !
பிரியமான தேனீக்கள்
இரவிலும் சிறகசைக்கின்றன
நானோ
ஒரு துளி
வியர்வை பொறுக்காமல்
விசிறிக் கொண்டு இருக்கிறேன் !

திருப்பரங்குன்றத்தில் எந்த ஒரு கூட்டம் என்றாலும் இலக்கியக் கூட்டம் என்றாலும்,கட்சிக் கூட்டம் என்றாலும் மக்கள் கூடுமிடம் 16 கால் மண்டபம் .இந்த நூலின் தலைப்புக்கான கவிதையும் இதுதான் .

16 கால் மண்டபம் !

எங்கோ இருந்த ஒரு மலையின்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்து
உருவி எடுக்க்கப்பட்ட
பெரும் கனவு
நிற்கிறது 16 கால்களுடன் !
யாத்திரை நடந்திருக்கிறது
அரசியல் கூட்டங்களின் மகவரியாக
பலரது வீட்டின் முகவரியாகவும் !

கவிதைக்கு கற்பனை அழகு .கவிஞனுக்கு சிந்தனை அழகு. நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன்வித்தியாசமாக சிந்தித்து உள்ளார் .

வரம் !
சீவப்பட்ட பென்சிலில்
மனதின் காயங்களை
எழுதுகிறோம் !
வசதியாக !
பென்சிலின் காயங்களை
மறந்துவிட்டு !

வாடிய
பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் போல சீவிய பென்சிலுக்காக வாடி உள்ளார் .

பேச்சிக்கா கவிதையில் கிராமிய மண் வாசனை சொற்கள் மண் மணம் வீசுகின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை ,மனிதர்களை, இயற்கையை , மண்ணை மரத்தை உற்று நோக்கி கவிதை வடித்துள்ளார் .
இயற்கையை நூல் படிக்கும் வாசகர்களுக்கு காட்சிப் படுத்தி வெற்றி பெ
றுகின்றார் .

இட்லி வெந்து விட்டதா என்பதை பார்க்க அம்மா விரல் விட்டு பார்க்கும் பழக்கத்தை கவனித்து ஒரு கவிதை
இதோ ! இந்தக் கவிதை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் அவரது அம்மாவையும் , அவர் சாப்பிட்ட இட்லியையும் நினைவூட்டும் .

ஆவி பறக்க
ஈடு ஈடாய் அவித்துத் தட்டிய
இட்லிகள் சிலவற்றில்
அம்மாவின் ஆட்காட்டி விரல் இட்ட
பள்ளங்கள் சூடு தணிந்து
ஆறியிருந்த பின்னும்
பள்ளங்கள் முழுக்க
நிரம்பியிருக்கும்
விரலைச் சுட்ட வேக்காடு !

எத்தனையோ இசைக் கருவிகள் உண்டு .ஆனால் பறை
ஒலிக்கு ஈடான ஓசையை எந்த இசைக் கருவிகளும் எழுப்புவதில்லை .தமிழ் மொழி தெரியாத அயல் நாட்டவர்கள் கூட மெய் மறந்து பறை ஒலி ரசிக்கின்றனர் .பறை பற்றி ஒரு கவிதை .

பறை !
இசைவானின் உறை !
அடிக்க அடிக்க
காற்றின் கரத்தில்
சுழல்கிறது வாள் !
அதிகாரத்தின் மூச்சுக்காற்று திணறுகிறது !
அதிர்கிறது கோட்டை !

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரே கவிதையில் உயர்ந்த தமிழையும்  , உயர்ந்த பனை மரத்தையும் பாராட்டி உள்ளார் .பாராட்டுக்கள் .

சங்க இலக்கியத்துக்கு
ஓலைகள்
தந்த செருக்கு
நிமிர்ந்தே வளர்கிறது
புவியில் பனை !

.நிலவைப் பாடாத கவிஞர் இல்லை .நிலவைப் பாடாதவர் கவிஞர் இல்லை என்பது உண்மை .
கவிஞர் இரா சென்ராயனும் நிலவைப் பாடி உள்ளார் .

நிலா ஏழு !
தேய்வது வளர்வது
வளர்வது தேய்வது
காணாமல் போவது
வாழ்வின் கவிதை இது !

இன்பம் , துன்பம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை .இறுதியில் மறைந்து போவதுதான் வாழ்க்கை என்ற வாழ்வியல் கருத்தை நிலவின் மூலம் விளக்கி உள்ளார். பாராட்டுக்கள் .

நண்பர்களின் உள்ள
த்தை படம் பிடித்துக் காட்டும் கவிதை நுட்பமான வரிகள் .

உழைப்பின் திரு !

நண்பர்களோடு வசிக்கிற
குறுகிய அறையின் சுவர்கள்
வருகைகள் குறித்த கவலைகளற்று
அகன்று கொடுக்கும் !

உண்மை பணம் இருப்பவர்களிடம் மனம் இருப்பதில்லை 
மாளிகையில் வசிப்பவர்களுக்கு நண்பர்களுக்கு இடம் அளிக்கும் குணம் இருபதில்லை .ஆனால் ஏழைகள் குடிசையாக இருந்தாலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் .வறுமையிலும் செம்மையாக வாழும் நண்பர்களை பாராட்டி உள்ளார் .

விபத்தில் இருந்து தப்பியவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் கவிதை .

தப்பிய வாசம் !


23 தையல்களால் நிறுத்தப்பட்டது
தலையில் பீறிட்ட ரத்தம்
ஒரு கணம் தப்பியதால் தப்பியது
ரோசாப் பூ மாலைகளின் வாசம் !

வலிகள் மிகுந்ததுதான் வாழ்க்கை ! என்பதை மெய்ப்பிக்கும் கவிதை ஒன்று .

என் மீது எறியப்பட்ட துரோகத்தின் ஈட்டிகளை
பிடுங்கிக் கொண்டே இருக்கிறேன் .
தீர்ந்தபாடில்லை ! இன்னும் !
காண்டா விளக்கு போல்தான் வாழ்வும் வெளிச்சத்தை விட
கரிப்புகையே அதிகம் !

 புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத இருண்மை கவிதை
எழுதி  வரும் கூட்டம் உள்ளது .ஆனால் இவர் கவிதை எளிமையாகவும் , இனிமையாகவும் எல்லோருக்கும் புரியும் படி உள்ளது .பாராட்டுக்கள் .

--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்