பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி .

பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி .

இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால்
பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சுதந்திரம் உள்ளது .ஆளுவோர் எத்தனை முறை பெட்ரோல் விலையை உயர்த்தினார்கள் என்று சரியாக விடை சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு வழங்கப்படும் .மத்தியில் .ஆளுவோருக்கு பெரும் பணக்கார்கள் இன்னும் பெரும் பணக்கார்கள் ஆக வேண்டும் .ஏழைகள் இன்னும் பரம ஏழைகள் ஆக வேண்டும் .இது ஒன்று மட்டுமே லட்சியம் ..

ஹெலிஹாப்டரில் ஊழல் செய்தோர் , டு ஜி ஊழல் செய்தோர், காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் செய்தோர் கண்டு கொள்ள மாட்டார்கள் .பாலியல் குற்றம் புரிந்தவருக்கு உயர்ந்த பதவி தருவார்கள் .
ஏழை மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்பார்கள் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள் .

.பெட்ரோல் மீது தீ பட்டால்தான் நெருப்பு .ஆனால் இன்று பெட்ரோல் விலையை கேட்டாலே மனதில்
தீ ,நெருப்பு ,வெறுப்பு .

அடிப்படை தேவையாகி விட்ட பெட்ரோல் விலையை அடிக்கடி ஏற்றி வருகின்றனர் .அடித்தட்டு மக்களுக்கு பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக விலைவாசி ஏறிக் கொண்டே போகின்றது .வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் .ஆனால் ஏழை மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டது .

விலைவாசியை இறக்குவோம் என்று சொல்லி வாக்கு வாங்கி ஆட்சில் அமர்ந்ததும் தொடர்ந்து மன சாட்சி இன்றி விலைவாசியை ஏற்றுகிறார்கள் .
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் நொந்து எழுதியது ஆட்டோவில் கண்ட வாசகம் .

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் !
அவன் ஆட்டோ ஒட்டி வேதனையில் வாட வேண்டும் !
பெட்ரோல் விலை உயர்வு !

கருத்துகள்