வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வன  யுத்தம் !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .

தெரிந்த கதை தெரியாத உண்மை என்று சுவரொட்டிகளில் பிரசுரம் செய்துள்ளார்கள் .வீரப்பன் கதை என்று ஆர்வமாக சென்று படம் பார்த்தேன் .ஏமாற்றமே மிச்சம் .வீரப்பனின் ஒரு முகம் மட்டுமே காட்டி உள்ளனர் .மறு  முகம் காட்ட வில்லை .

வீரப்பன்  கர்னாடகத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அவர் கொலை, கொள்ளை செய்த போதும் மக்களுக்கு பல நன்மைகள் செய்தார் என்பதற்கு மக்களே சாட்சி ! கர்னாடகம் வீரப்பன் இருக்கும் வரை வாலை சுருட்டிக் கொண்டே இருந்தது ..வீரப்பன் இறந்ததும் வட்டாள்  நாகராஜ் போன்ற வட்டார ரவுடி எல்லாம் தமிழக எல்லைப் பகுதிகளை கர்னாடத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு வாலாட்டி வருகின்றனர்.
 வீரப்பன் மரணம் தமிழகத்திற்கு பெரிய இழப்புதான் .
வீரப்பன் இறப்பில் மர்மம் உள்ளது .அவருக்கு மோரில் விஷம் கலந்து கொன்று  விட்டு பிறகு பிணத்தை ஆம்புலன்சில் வைத்து சுட்டதாக காவல்துறை நாடகமாடிய தகவல் புலானாய்வு இதழ்களில்  வந்தது .படித்தேன் .ஆனால் இந்தப் படத்தில் மோர் தருகிறார் .ஆனால் காவல் துறை உயிரோடு சுடுவது போல காட்டி உள்ளனர் .காவல்துறைக்கு சாதகமாக நினைத்தபடி படம் எடுத்து விட்டு உண்மை கதை என்று பித்தலாட்டம் செய்துள்ளனர் .படத்தின் இறுதிக் காட்சியை பார்வையாளர் யாருமே விரும்பவில்லை வீரப்பனை ரசித்தவர்கள் வீரப்பனை மரணத்தை யாரும் ரசிக்க வில்லை .படத்தில் மயான அமைதி நிலவியது .
வீரப்பனாக நடித்துள்ள கிஷோர் மிக நன்றாக நடித்துள்ளார் .பாராட்டுக்கள் .ஹெலிகாப்டரில் இருந்து காடுகளை பாடமாக்கிய ஒளிப்பதிவைப் பாராட்டலாம் .

பின்னணி இசை மிக நன்று .வீரப்பனை வில்லனாக காட்டிட முயன்று தோற்று விட்டார் இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .
வீரப்பனை நேர்முகத்தை தொலைக்காட்சியில் பலரும் பார்த்து உள்ளனர் .அதில் அவரே பல முறை சொல்லி உள்ளார் .அரசியல்வாதிகள் பலர் துரோகிகள் என்று .அது பற்றி எதுவும் படத்தில் இல்லை . வீரப்பன் பற்றிய நல்ல பிம்பத்தை தகர்க்க முயன்று தோற்று விட்டார் .வீரப்பன் மனைவி  இந்த படத்தை எதிர்த்து போட்ட  வழக்கை திரும் பெற்று இருக்க கூடாது .கொடும்ப சூழ்நிலை கருதி 25 லட்சம் தருவதாக சொன்னதும் வழக்கை திரும் பெற்று இருக்கிறார் .அவருடைய வறுமை காரணமாக இருக்கலாம் .மன்னிக்கலாம் .
காவல்துறை விளம்பரப் படம் போல உள்ளது .காவல்துறை வீரப்பனை தேடுகின்றோம் என்ற பெயரில் மக்கள் மீது நடத்திய  வன்முறை ,பாலியல் வன் புணர்ச்சி பற்றி ஒரு வரி சொல்ல வில்லை .இது பற்றி வழக்குகள் உள்ளது .உண்மைக் கதை என்று சொல்லி தெரியாத உண்மை என்று சொல்லி தெரிந்த உண்மைகளை மறைத்து எடுத்துள்ளார் .

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பாத்திரம் திரைஅரங்கில் புகைப்படத்தில்  உள்ளது .ஆனால் படத்தில் ஒரு காட்சியிலும்  முத்துலட்சுமி பாத்திரம்  வரவில்லை .வீரப்பனின்  உண்மை கதை படமாக வேண்டும் .மக்கள் தொலைக்காட்சில் உண்மை கதை வந்தது .பலரும் பார்த்துப்  பாரட்டினார்கள் .அந்த தொடரை இயக்கிய இயக்குனரை வைத்து உண்மை கதை படமாக்கப் பட வேண்டும் .

ஊழல் படிந்த வன அதிகாரிகளால் ,காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் அரணாக வீரப்பன் இருந்தார் என்பதை மறுக்க முடியாது .அது பற்றி ஒரு காட்சியோ ஒரு வசனமோ இல்லை .மிக நுட்பமாக எடுத்தது போல காட்டிக் கொள்ள தேதி நேரம் காட்டி ஏமாற்றி உள்ளார் .



கருத்துகள்