"கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .

"கவிதை அலை வரிசை "

நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.

நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .

விழிகள் பதிப்பகம் ,8/எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு ,திருவள்ளுவர் நகர்
,திருவான்மியூர் விரிவு ,சென்னை .41.விலை ரூபாய் 120.

 தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன் அவர்கள்  எழுதிய கட்டுரைகள்
 "கவிதை அலை வரிசை " என்ற பெயரில் நூலாகி உள்ளது .இந்நூல் படித்து
முடித்தால் கவிதைகள் பற்றிய எண்ணம் அலை அலையாய் எழுவது திண்ணம் வளர்ந்த
கவிஞர்கள், வளரும் கவிஞர்கள், வளர வேண்டிய கவிஞர்கள் என்ற பாகுபாடு இன்றி
மூன்று  வகை கவிஞர்களின் ஆற்றலை படைப்புத்திறனை படைப்புகளின் மேற்கோளுடன்
கட்டுரை வடித்து உள்ளார் .ஒரு கட்டுரை எப்படி ? எழுத வேண்டும் என்பதற்கு
இலக்கணம் கூறும் நூல் .எடுப்பு , தொடுப்பு , முடிப்பு அத்தனையும் சிறப்பு
..பாராட்டுக்கள்
.
18 கவிஞர்களின் கவிதைகள் முழுவதும் படித்து மலரில் தேன் எடுபதுப் போல
எடுத்து தொகுத்து விமர்சனம் செய்து நூலாக்கி உள்ளார் .குடத்து  விளக்காக
இருந்த படைப்புகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்துள்ளார் .18
கவிஞர்களில் நானும் ஒருவன் என்பதில் அளவில்லா மகிழ்ச்சி .இலக்கியச்
சீரிதழ்களின் செல்லப் பிள்ளை ! இரா .இரவி ! என்று கட்டுரை இடம்
பெற்றுள்ளது .

"கவிதை உலகில் தனக்கென தனி முத்திரைப் பதித்து வரும் பண்பாளர் கவிஞர்
குலோத்துங்கன் கவிதைகளில் உள்ள சிறப்பை எடுத்து இயம்பி கவிதைகளை மேற்கோள்
காட்டியது சிறப்பு .அருமையிலும் அருமை. கவிஞர் குலோத்துங்கன்
அவர்களுக்க்கு பெருமையிலும் பெருமை ."


"கவியரசர் பாரதியார் ,பாவேந்தர் பாரதி தாசன் ,ஆகியோர் அடிச்சுவட்டில்
கவிஞர் குலோத்துங்கன்தமிழை அணையா ஒளி ! என்றும் இன்பத்தின் ஊற்று !
என்றும் வாழ்வுக் கடலில் தோணி ! என்றும் துன்பம் துடைக்கும் மருந்து
!என்றும் பலவாறு போற்றிப் பாடுகின்றார் ."

எண்ணின் இனிப்பது தமிழ் !
"வாழ்வு கசப்பதுண்டாடோ தமிழ்
மாது தருஞ்சுவை உண்டு களித்தபின் ?

முன்னாள் அமைச்சர் கவிவேந்தர் வேழவேந்தன் அவர்கள் பல்வேறு இதழ்களில்
தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .அவர்களைப் பற்றிய கட்டுரைக்கு தலைப்பு
" அயராது எழுதி வரும் ஆற்றல்சார் கவிஞர்வேழவேந்தன் " கட்டுரையின் தலைப்பு
மட்டுமல்ல நூலின் தலைப்பாக இருந்தாலும் , பட்டிமன்றத்தின் விவாத தலைப்பாக
இருந்தாலும் பொருத்தமாக சூட்டுவதில் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர்
இரா மோகன் அவர்களுக்கு இணை யாரும் இல்லை .அவருக்கு மட்டுமே வாய்த்த கை
வந்த கலை .

இன்றைய இளைய தலைமுறையினர் படித்து உணரவேண்டிய தன்னம்பிக்கை விதைக்கும்
கவிதையை மேற்கோள் காட்டி உள்ளார் .
கவிஞர்வேழவேந்தன் கவிதை !
சுறுசுறுப்பைக்  கூட்டுங்கள் வெற்றி கிட்டும் !
சோம்பலினைக் கழியுங்கள் நலங்கள் கிட்டும் !
திறமையினைக் பெருக்குங்கள் பெருமை கிட்டும் !
செயல் முறையை வகுத்திடுங்கள் செழுமை கிட்டும் !
(கவிதைச் சோலை ப.எண் 56 )

வாழ்வியல் கணக்கு சொல்லித் தரும் கவிதையை மேற்கோள் காட்டியதோடு நின்று
விடாமல் .நூலின் பெயர் .பக்க எண் என புள்ளி விபரத்துடன் பதிவு செய்வது
நூல் ஆசிரியரின்  தனிச்சிறப்பு .

சாகித்ய அகதமி விருது பெற்ற கவிஞர் சிற்பி அவர்களைப் பற்றி உள்ள
கட்டுரையில்    சில துளிகள் .

" பாவேந்தர் பாரதிதாசனால் அடையாளம் காட்டப் பெற்ற கவிஞர் சிற்பி' நான்
மரபின் பிள்ளை " புதுமையின் தோழன் என் பின்புலம் - தமிழ் இலக்கியம் ."
என்பது அவரது ஒப்பு்தல் வாக்கு மூலம் .நேரே நில் ! நிமிர்ந்து பார்
!நெஞ்சில் பட்ட்தை வளமாய்ச் சொல் இதுதான் எழுத்தின் மங்கல சூத்திரம் .(
சிற்பியின் கவிதை வானம் பக்க எண் 296 ) என்பது அவரது கவிதைக் கொள்கை .

அழித்து எழுத முடியாத
சித்திரம் ஒன்றுண்டு
அம்மா !

( ஒரு கிராமத்து நதி ப .எண் 28 )

முன்னை இட்ட தீ /அடிமை வாழ்விலே !
பின்னை இட்ட தீ / தேயிலைத் தோட்டத்திலே !
இன்னும் இட்ட தீ / இன வெறுப்பிலே !
அன்னை லங்கையின் / ஆத்மா வேகுதே !
புத்தம் கரணம் கச்சாமி !
தர்மம் மரணம் கச்சாமி !
சங்கம் வரணும் கச்சாமி !
 ( சிற்பியின் கவிதை வானம் ப .எண் 54 )

இந்த நூலில் 18 கவிஞர்களின் படைப்பாற்றலை அறிந்து , ஆராந்து இலக்கிய
விருந்து வைத்துள்ளார் .18 கவிஞர்களின் அனைத்து நூல்களையும் படிக்க
வாய்ப்பு அனைவருக்கும் இருக்காது .இந்த நூல் படித்தால் போதும் அவர்களின்
அனைத்து நூல்களையும் படித்த திருப்தி கிடைக்கும் .
இலக்கியப் பலா விருந்தாக  உள்ளது .இந்நூல்   படித்து உலா வந்தால் நிலா
ரசித்த இன்பம் பிறக்கிறது .

நூல் விமர்சனத்தில் அனைத்தையும் எழுதி விட முடியாது .பதச் சோறாக சில
மட்டும் உங்கள் பார்வைக்கு .

மரபுக்கும்  புதுமைக்கும் பாலமாக விளங்கும் கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி
ஏர்வாடி எஸ் .ராதாகிருஷ்ணன் .இவர் பற்றிய கட்டுரை இவர் பற்றி சிலம்பொலி
சு .செல்லப்பன் ,காவியக் கவிஞர் வாலி ஆகியோர் எழுதிய கவிதைகளுடன் தொடங்கி
உள்ளார் முத்திரைக் கவிதைகளுடன் தொடுப்பு .

மேற்கோள் காட்டி உள்ள ஏர்வாடி எஸ் .ராதாகிருஷ்ணன் கவிதை .
இந்துவுக்குத் தீபாவளி
கிறித்தவருக்குத் கிறிஸ்மஸ்
இஸ்லாமியருக்கு ரம்ஜான்
ஏழைக்கு  ?

ஏழைக்கு  ? என்ற கேள்வியின் மூலம் சிந்தனை அதிர்வுகளை ஏற்படுத்தி விடுகிறார் .

நல்ல பல மேற்கோள் காட்டி படைப்பாளியின் திறமையின் உச்சத்தை படம் பிடித்து
காட்டி உள்ளார் .

கவிமுகிலின் படைப்பாளுமை ! எடுத்துக்காட்டும் கவிதை .
ஆலயத்தை  உருவாக்கும் நேரத்தை !
ஆலைகள் உருவாக்க உழைத்திடு !
------------------------------
-----------------------------
சுதந்திர இந்தியாவில் எங்குமே மன்னர்கள்
மக்களைத்தான் காணவில்லை !
வெறுங்கிணறு என்பது மூடத்தனம் !
வரும் மழை  சேமிப்பே மூலதனம்  !
----------------------------------------------------------
கவிஞர் கவிமுகில் கவிஞர் தாராபாரதியின் சீடர் என்பதால் அவர் வரிகளின்
பாதிப்பு உள்ளது .

வெறுங்கை என்பது மூடத்தனம் !
விரல்கள் பத்தும் மூலதனம்  !
கவிஞர் தாராபாரதி !

கவிஞர் பழனி பாரதி நம் காலத்தின் பிரதிநிதி !

காலமே என் இளமையைச்
சீட்டாடித்  தோற்காதே !
செல்வழி ஒரு போராளியின்
கடைசி துப்பாக்கி  ரவையாக !

மனிதர்களைப் படிக்கும் கவிஞர் நா .முத்துக்குமார் கவிதை .

பெண்டாட்டி தாலியை / அடகு வைச்சு
புஸ்தகம் போட்டேன் விசிடிங் கார்டு மாதிரி
ஓசியில்  தர வேண்டியிருக்கு !

இப்படி படிக்க படிக்க பரவசம் தரும் அற்புதக் கவிதைகளை எடுத்து தொகுத்து
வகுத்து வழங்கி உள்ளார் .நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்
அவர்கள் பாராட்டுக்கள் .இவ்வளவு  நூல்களை  படிக்க இவருக்கு  நேரம் எப்படி
வாய்க்கிறது .எப்போது படிப்பார் .எப்போது எழுதுவார் வியப்பாக உள்ளது
.தமிழ்த்தேனீ என்ற படத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் முனைவர் இரா
மோகன் அவர்கள் .நூலின் மிகத் தரமாக பதிப்பித்த விழிகள் பதிப்பகதாருக்கு
பாராட்டுக்கள்



கருத்துகள்