மரத்தின் கேள்விகள் ! கவிஞர் இரா .இரவி !

மரத்தின் கேள்விகள் !  கவிஞர் இரா .இரவி !

பூ தந்தேன் !
காய் தந்தேன் !

கனி தந்தேன் !
நிழல் தந்தேன் !

காற்று தந்தேன் !
பரிசாக கோடாரி தந்து !

என்னை  வெட்டுவது முறையோ ?
என்னுயிர் பறிப்பது சரியோ ?

நாயுக்குக் கூட நன்றி உண்டு !
மனிதனுக்கு நன்றி இல்லை !

நாயுக்கும் கீழாய்
மனித மாறியதேனோ ?

நன்றி மறப்பது நன்றன்று
நல்ல திருக்குறள் படிப்பது நன்று !
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
மரம்

கருத்துகள்