வசந்த வாசல் கவிதை வனம் 2013 . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


வசந்த வாசல் கவிதை வனம் 2013 .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு வசந்த வாசல் கவிமன்றம் .9/68.பெரியார் நகர் கிழக்கு ,விமான
நிலைய அஞ்சல். கோவை .6410104 செல் 9842238022 .விலை ரூபாய் 250.

2005 ஆம் ஆண்டு  தொடங்கி   2013 ஆம் ஆண்டு வரை வருடா வருடம் தொகுப்பு
நூல் வெளியிட்டு வருகின்றனர் .கோவை வசந்த வாசல் கவி மன்றத்திற்கு
பாராட்டுக்கள் .தொய்வின்றி இலக்கியப் பணி,  தமிழ்ப் பணி செய்து வரும்
கோவை கோகுலன் உள்ளி்ட்ட  பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் .கோவை வசந்த
வாசல் கவிமன்றம் கோவையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டது .தமிழுக்கு
என்றும் அழிவில்லை !
 தமிழ்  என்றும் நிலைத்து வாழும் ! என்பதை பறை சாற்றும் மன்றமாகத்திகழ்கின்றது .

கோவை என்றவுடன் இலக்கியவாதிகள் நினைவிவிற்கு  வருவது கோவை வசந்த வாசல்
கவிமன்றம் தான் .கவிஞர் கோவை கோகுலன் தலைமையில் கவிஞர்கள் முகில் தினகரன்
,நா .கி .பிரசாத் உள்ளிட்ட கவிஞர் பெரும்படை கோவையில் உள்ளது
.வருடந்தோறும்   தொடர்ந்து தொகுப்பு நூல் வெற்றிகரமாக வெளியிட்டு
வருகின்றனர் .இலக்கிய விழாக்களும் நடத்தி விருது வழங்கி ,திட்டமிட்டபடி ,
திட்டமிட்ட நாளில் வெளியிட்டு வருகின்றனர் .

கவிஞர் கருமலைத் தமிழாழன் அவர்களின் மரபுக் கவிதைத் தொடங்கி  புதுக்
கவிதைகளும் ,ஹைக்கூ கவிதைகளும் நூலில் உள்ளது .பல் சுவை இலக்கிய
விருந்தாக நூல் உள்ளது .477  படைப்புகள் உள்ளது .கிட்டத்தட்ட 450
கவிஞர்களின்  படைப்புகள் உள்ள தொகுப்பு நூல் இது .

முதல் கவிதை கவிஞர் கருமலைத் தமிழாழன் அவர்களின்
எழுத்தாளர் பற்றிய  கவிதை .மிக நன்று .

பாலியலின் காட்சிகளைக் கதை களாக்கிப்
படிப்போருக்குக் கிளர்ச்சியினைத்  தூண்டிப் பண்பு
வேலிகளை எரிப்பவரா எழுத்தா ளர்கள்
வேரறுக்கும் கத்திகளா எழு்து கோ்ல்கள்
கதிர்போல இருள் கிழிக்கும் எழுத்தா ளர்தாம்
காண்கின்ற இந்நாட்டின் கண்களாவார் !

ஆபாச எழுத்தை காசாக்கும் எழுத்து வணிகர்களை சாடுகின்றார்.

477  படைப்புகள் உள்ளது விமர்சனத்தில் அனைத்தையும் எழுத முடியாது
என்பதனால் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .நூலில் உள்ள
எல்லாக் கவிதைகளும் நன்று .இந்நூலில் வளர்ந்த கவிஞர்கள் , வளரும்
கவிஞர்கள்,வளர வேண்டிய கவிஞர்கள்மூன்று வகை படைப்பும் உள்ளது.
பாராட்டுக்கள் தன்   படைப்பு நூலாக வரவில்லையே ! என்று ஆதங்கப்
படுபவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக நூல் வந்துள்ளது .

ரூபாய்  150 மட்டும் பங்குத் தொகையும் , கவிதையும் , புகைப்படம் பெற்றுக்
கொண்டு முகவரியுடன் நூலாக்கி ரூபாய் 250 விலையுள்ள  நூலோடு, பாராட்டு
சான்றிதலும் பங்குப் பெற்ற அனைவருக்கும் அனுப்பி விடுகின்றனர். இந்த நூல்
 நூலகங்கள்   உள்பட பரவலாக தமிழகம் முழுவதும் சென்று விடுகின்றது
.என்னுடைய ஹைக்கூ கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளது .

கவிஞர் ச .மருதமுத்து அவர்களின் கவிதையில் மூட நம்பிக்கையைச் சாடி உள்ளார் .

பூனை  குறுக்கே போனால் போதும்
ஏனோ திரும்பிச்  செல்லு கிறார்
பல்லி விழுந்தால் பதறித் துடித்துப்
பஞ்சாங்கத்தைப் புரட்டுகிறார் !

கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் அவர்களின் கர்ணன் பற்றிய கவிதை வித்தியாசமாக உள்ளது .

கர்ணன் கொடையாளி  கேட்டோர்க் கெல்லாம்
கைநிறைய அள்ளியள்ளிக் கொடுத்த வள்ளல்
வில்வி்த்தை மேதையவன் துரியோன் நண்பன்
வருவது வரட்டுமென்ற துணிச்சல் காரன் !

மனிதா உனக்கொரு கேள்வியுண்டு ! கவிஞர் இளங்கோ!

விலை நில  மெல்லாம் வீடுகளாம்
வீதிகள் தோறும் சாதிகளாம்
தினமும் மதங்களின் லீலைகளாம்
திசையெங்கும் மரண ஓலங்களாம்
சாதியையும் மதத்தையும் சாடி உள்ளார் .

அன்னைத்தமிழ் ! கவிஞர் கார்முகிலோ்ன் !

அன்னைத்தமிழுக்குத் தொண்டு செய்வதே
பிறவிப் பயனென்று கருது - இந்த
எண்ணம் நெஞ்சிலே இருந்தால் போதும்
என்றும் நம் நிலைமை உயரும் !

தமிழர்கள் தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உள்ளார் .

கோவை வசந்த வாசல் கவி மன்றத்தின் தலைவர் கோவை கோகுலன் கவிதை .

முதல் கடவுள் ! கோவை கோகுலன் !

எனக்கொரு தீங்கு வந்து சூழுங்கால்
ஏரி  மலையாய் எழுந்ததனை எரித்துடுவிட்டு
எனையேந்தி தன மடியில் காத்திடுவாள் !
கடவுள் வாழும் கருவறையே தாய்மடிதான் !
கண்ணெதிரே நம் கர்ப்பகமாய் காண்பதினால்
கரம் கூப்பி தொழுகின்ற கடவுளே நம் அன்னைதான் !

வாழ்வியல் கற்பிக்கும் கவிதை இதோ !

வெற்றியின் வேதம் ! கவிஞர் அதியமான் !

வெற்றியின் வேதம்  முயற்சி !
வாழ்வில் கொள்ளாதே  தளர்ச்சி !
துணிந்தால் உனக்கு உயர்ச்சி !
பணிந்தால் என்று பெயர்ச்சி !

ஈழப் படுகொலை கண்டு கொதித்துப்  பாடாத கவிஞர் இல்லை .கொதித்துப்
பாடாதவர்  கவிஞரே இல்லை .

தமிழினப்படுகொலை ! கவிஞர் பொன் பசுபதி !

ஈழத்தை ஆண்டோர் எங்கள் தமிழினமே !
மோளைகளாயச் சிங்கள மூடரித்தை ஏற்றிலர் !
வேழத்தை வெல்லும் நம் வீரத்தமிழரைக்
கோளைகளாய் எண்ணி கொடுமை புரிந்தவரை ...

தமிழ் ஈழம் மலரட்டும் ! கவிஞர் தென்றல் இரவி !

அய் .நா .சபையே நீதி வேண்டும் !
என் ஈழத்தமிழன் மீண்டும் இலங்கையை ஆழ வேண்டும் !
இனியும் ராசபட்சே ஆட்சி நிலைத்தால்
பஞ்ச பூதங்கள் அழிந்து போகும் !

நினைவும் நிஜமும் ! கவிஞர் அன்னை சிவா !

எதார்த்தமாய் நீ என் கண்ணில் பட்டாயடி !
பதார்த்தமாய் நான்
பறி கொடுத்தேன் மனதை !

தேவ நேயப் பாவாணர் ஆய்வுக்கருத்தை வலி மொழிந்து ஒரு கவிதை இதோ !

எம்மொழியே வாழி ! கவிஞர் அழகு சக்திகுமாரன் !

உலகத்தின் முதல் மாந்தன் தமிழன் தானே !
உலகத்தின் முதல் மொழியும் தமிழே அன்றோ !
பல கற்றும் கல்லாதார் போன்றே வாழ்ந்த
பாவிகளால் மறைந்ததிந்த உண்மை பாரில் !

நூலில் ஹைக்கூ கவிதைகளும் உள்ளது சிந்திக்க  வைக்கின்றன !

கவிஞர் கோவை புதியவன் - ஹைக்கூ .

டாஸ்மாக் கடையில்
கூட்டம் கூட்டமாய் தள்ளாடின
பல தாலிகள் !
----------------------------
கிழே  விழுந்தாலும்
நிமிர்ந்தே நிக்கிது
நம்பிக்கை உள்ளவனின் தோல்வி !
------------------------------
பசியோடு வாசலில் பிச்சைக்காரன்
நிரம்பிய வயிற்றோடு
கோவில் உண்டியல்
------------------------------
--
தமிழன்னைக்கு வருடா வருடம் கவிதை அணிகலன் பூட்டி மகிழ்கின்றனர். நூலின்
அட்டைப்படம் மாற நேயம் கற்ப்பிக்கும் விதமாக உள்ளது .மனிதன் மரத்தை
வெட்டாமல் மரத்தோடு மனிதன் நேசக்கரம் நீட்டுவதுப்  போல சிறப்பாக உள்ளது
.பாராட்டுக்கள் .மிக சிறப்பான கவிதை நூலை தொகுத்து வெளியிட்ட கோவை வசந்த
வாசல் கவி மன்றத்திற்கு பாராட்டுக்கள் .

--

கருத்துகள்