தமிழ் உணர்வாளர்கள் கலந்துறவாடல் கூ ட்டம்


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சான்றோர் தமிழ்க் காப்புக் கழகம் தமிழ் உணர்வாளர்கள் கலந்துறவாடல் கூ ட்டம்  நடைபெற்றது .தமிழ் அறிஞர் 
மிண்ணல் தலைமை வகித்து நெறியுரையாற்றினார் 

-- தமிழுக்கு எங்கு கேடு நிகழ்ந்தாலும் கிளர்ந்து   வேண்டும் .
தமிழுக்கு கேடு செய்வோர் திருந்திட மடல் எழுத வேண்டும் .
தமிழ் விளம்பரங்களில் ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் .
பெயர்ப்பலகை ,விளம்பரம் ,அறிக்கை எதில் பிழை கண்டாலும் உடன் திருத்த சொல்லி மடல் எழுத வேண்டும் .எனக்கும் தகவல் தாருங்கள் .இனி பேச்சுகளை விட செயலே பயன் தரும் .அரசு சார்ந்த நிறுவனங்களிலும் தமிழ்ப்  பயிற்சி வழங்க வேண்டும் .பேராசிரியர்களுக்கும் தமிழ்ப்  பயிற்சி வழங்க வேண்டும்.
தமிழ் மொழியின் சிறப்பு உலக நாடுகளில் பரவும் வண்ணம் நல்ல தமிழ்ப் பாடல்களை மொழிபெயர்த்து வழங்க வேண்டும் .
திரு  .நாகசாமி எழுதிய "மிர்ரரர்ஆப் தமிழ் அன்ட் சான்ஸ்கிரிட்"என்ற  ஆங்கில நூலில் தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியத்தை நடன  சாத்திர நூல் என்றும் ,சிலபதிகாரத்தை நடந்தது அல்ல புனைவு என்றும் ,தமிழ் செம்மொழி அல்ல என்றும் சமசுகிருத்தில் கடன் வாங்கியதால் தமிழ் செம்மொழியானது என்றும் பொய்யாக எழுதி உள்ளார் .அவருக்கு மறுப்பாக, பதில் சொல்லும் விதமாக "பழுதடைந்த கண்ணாடியும் பார்வைக் கோளாறும் "என்ற என்னுடைய நூல் அச்சில் உள்ளது .விரைவில் வெளி வரும் .
ஒட்டுத்தாள் 
தமிழில் சிறந்த பாடல்களையும் தெளிவுரையும் படங்களுடன் தயாரித்து தென்னஈ கடைகள் உணவு விடுதிகளில் மக்கள் கண்ணில் படும் மாறு வைக்க வேண்டும் .

பலரும் கருத்து சொன்னார்கள் .
ஊடகங்களில் நடக்கும் தமிழ்க்கொலை தடுக்கப் பட வேண்டும் .
திரைப்பட பாடல் ஆசிரியர்கள் இது வரை எழுதியது போகட்டும் .இனி எழுதுபவர்கள் தமிழ்ப்பாடலில் ஆங்கிலச் சொல் கலந்து எழுதுவதி நிறுத்திக் கொள்ள வேண்டும் .
திரைப்பட சுவரொட்டிகளில் தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர்களை ஆங்கிலத்தில் இனி அச்சடிக்கக் கூடாது .
தொலைக் காட்சியில் பங்கு பெரும் தொகுப்பாளர்கள் தமிழில் மட்டுமே பேச வேண்டும் .வலிய ஆங்கிலச் சொல் கலப்பதை இனி நிறுத்திக் கொள்ள வேண்டும் .
உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதாட உரிமை உண்டு .தமிழில் வாதாட நீதிபதிகள் அனுமதிக்க வேண்டும் .உயர் நீதி மன்றங்களில் மக்கள் வாதா ட முடியாது . வழக்குரைஞர்கள்  மட்டுமே வாதிட முடியும் .மக்கள் மொழியில் தமிழில் வழக்குரைஞர்கள் வாதாடினால்தான்,  வழக்குரைஞர்கள் என்ன ? வாதாடுகின்றனர் என்பது மக்களுக்கு புரியும் .
வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகையில் தமிழ் இடம் பெற வேண்டும் .
கோயிலில் தமிழ் இடம் பெற வேண்டும் ."இங்கு தமிழிழும் அர்ச்சனை செய்யப்படும் "என்பதை விடுத்தது " இங்கு தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யப்படும்." என்ற நிலை வர வேண்டும் .தேவாரம் திருவாசகம் இடம்பெற வேண்டும் .
நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவைவை நல்லதாக இருக்கட்டும் .
தமிழைக் காக்க வேண்டியது தமிழக மக்களின் கடமை . தமிழர்களுக்கு விழிப்புணர்வு  வர வேண்டும் .
-- 

கருத்துகள்