சாதி மறுப்பில் காதல் ! நூல் ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் அருணன் ,ச .தமிழ்ச் செல்வன் ,ஆதவன் தீட்சண்யா . நூல் விமர்சனம் கவி்ஞர் இரா .இரவி .

சாதி மறுப்பில் காதல் !

நூல் ஆசிரியர்கள்
எழுத்தாளர்கள் அருணன் ,ச .தமிழ்ச் செல்வன் ,ஆதவன் தீட்சண்யா .

நூல் விமர்சனம் கவி்ஞர் இரா .இரவி .

.வெளியீடு த .மு .எ .க .ச . மாநிலக் குழு  விலை ரூபாய் 10
11.மேலப் பெருமாள்  மேஸ்திரி வீதி ,மதுரை .1. செல் 9442462888 .

காதல் திருமணதிற்கு எதிர்ப்பு என்ற பெயரில் ஆதிக்க சாதியினர் தலித்
மக்கள் மீது நடத்திய வன்முறையை நேரடியாக சென்று ஆய்வு நடத்தி ஆய்வுக்
கட்டுரையாக வடித்துள்ளனர் .எழுத்தாளர்கள் அருணன் ,ச .தமிழ்ச் செல்வன்,
ஆதவன் தீட்சண்யாமூவரின் கட்டுரையும் நூலாகி உள்ளது .40 பக்கங்கள் மட்டுமே
உள்ள சிறிய நூல்தான் . ஆனால் படிக்கும் வாசகர்களின் மனதில் மிகப் பெரிய
தாக்கத்தை ஏற்படுத்துகின்றது .நூல் என்ன ? செய்யும் என்பதற்கு
எடுத்துக்காட்டு இந்த நூல் .படித்து முடித்தவுடன் மனம் கனத்து
விடுகின்றது. மனிதநேயம் பிறக்கின்றது .நூல் ஆசிரியர்களுக்கு
பாராட்டுக்கள் .

கை அடக்க நூலில் மிக நல்ல கருத்துக்களை வலியுறுத்தி உள்ளது சிறப்பு .
ஒரு ஜோடி காதலை இரு சாதி மோதலாக மாற்றி ,வன்முறையை ஈவு இரக்கமின்றி ஏவிய
ஆதிக்க சாதியின் முகத்திரை கிழிக்கும் வண்ணம் நூல் வந்துள்ளது .

"காதலினால் அல்ல " என்ற தலைப்பில் ச .தமிழ்ச் செல்வன்அவர்களும் ,
"இராமதாஸ் வகையறா வந்து கொண்டிருக்கிறது மனிதர்கள் வேறு பக்கம் செல்லவும்
."    என்ற தலைப்பில் ஆதவன் தீட்சண்யா அவர்களும் ,
" மருத்துவர் ஒருவர் நவீன மனுவாகிறார் ."என்ற தலைப்பில் அருணன்அவர்களும்
எழுதிய ஆய்வுக் கட்டுரை நூலாகி உள்ளது .

மனிதாபிமான அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும்
விதமாக நூல் உள்ளது .தனி நபர் இருவரின் காதலை காரணம் காட்டி இரு
சாதிகளின் சண்டையாக உருமாற்றி மிகப் பெரிய கலவரத்தையும் வன்முறையையும்
நிகழ்த்திய கொடுமைக்கு கண்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளனர் .

இனி காதலிப்பது என்றால் என்ன ? சாதி என்று பார்த்து விட்டு தான் காதலிக்க
வேண்டும் . என்ற நிலையை உருவாக்கி வரும் அவலத்திற்கு கண்டனக் குரல்
கொடுத்துள்ளனர் ."ஆதலினால் காதல் செய்வீர் " என்ற மகாகவி பாரதியின் வைர
வரிகளுக்கு உரம் சேர்க்கும் விதமாகு நூல் உள்ளது .

" வன் கொடுமைத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் .அதன் பல்லைப் பிடுங்க
வேண்டும் என்று கோரிக்கை வைக்கிற அளவிற்கு தலித்துகள்  மீதான
வன்கொடுமைகள் தொடர்கின்றனவே அவை இன்னும் முடிவுக்கு வரவில்லையே என்று
சமூக நீதியாளர்கள் வேதனைப்பட்டு வரும் வேளையில் வன் கொடுமைத் தடைச்
சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்பது நியாயமா ? " என்ற
நியாயமான கேள்வியை எழுத்தாளர்கள் அருணன் எழுப்பி உள்ளார் .

 தீண்டாமை ஒழிந்து விட்டது என்று அறுதி இட்டு கூற முடியாத நிலையே இன்னும்
நீடிக்கின்றது .இன்னும் சில கிராமங்களில் இரட்டை குவளை முறை தொடரும்
அவலம் நீடித்து வருவது வேதனை.வன்கொடுமைத் தடைச் சட்டம் இருப்பதால்தான்
ஆதிக்க சாதியினர் கொஞ்சம் அடக்கி வசிக்கின்றனர் என்பதே உண்மை .தலித்
மக்களுக்கு பாதுகாப்பாக உள்ள இந்த சட்டம் இன்னும் நீடிக்க வேண்டும்
என்பதே மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம். .அந்த விருப்பதை வழி மொழியும்
விதமாக கருத்துக்கள் நூலில் உள்ளது .
.
தமிழர்கள் அனைவருக்கு ஒரு வார்த்தை
" பழைய பயித்தியம் படீரென்று தெளியுது "என்று ஆசைப்பட்டான் பாரதி .அந்தப்
பழைய சாதி பயித்தியம் அப்படி உளிய வேண்டும் என்றால் அதற்கு ஒரு நல்ல
மார்க்கம் சாதி பாராத காதல் .சாதி மறுப்புத் திருமணம்
.சாதித் தலைவர்களின் அகங்காரப் பேச்சை கேட்காதீர்கள் .
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் கள்ளங்கபடு இல்லாத இதயங்களின்
சேர்ந்திசைக்கு செவி கொடுங்கள் .காதல் பொங்கலைக் கொண்டாடுங்கள் .அதற்கு
முன்னதாக சாதியத்தைக் கொளுத்திப் போகிப் பண்டிகை நடத்துங்கள் ." என்று
அருணன் அவர்கள்  எழுதியுள்ள கருத்து சிந்தனை விதை விதைக்கின்றது .

காதலுக்கு சாதியில்லை மதமும் இல்லையே ! கண்கள் பேசும் வார்த்தையிலே
பேதமில்லையே ! கவியரசு கண்ணதாசன் வைர வரிகளுடன் நூல் முடிகின்றது .காதலை
நேசிப்பவர்களும் ,காதல் வயப்பட்டவர்களும். சாதியை வெறுப்பவர்களும் ,
மதத்தை மறுப்பவர்களும் ,மனித நேய ஆர்வலர்களும் .வன்முறையை
விரும்பாதவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நூல் .மிகப் பெரிய
சிந்தனைகளை விதைக்கும் அறிவார்ந்த கட்டுரைகளைத் தொகுத்து நூ்லாக்கிய  த
.மு .எ .க .ச . மாநிலக் குழுவிற்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

கருத்துகள்