தமிழ்க்கூத்தன் அவர்களுக்கு திருப்பரங்குன்றம் த .மு .எ .க .ச .
சார்பில் நடைபெற்ற இதய அஞ்சலி கூட்டத்தில் 27.1.2013 அன்று
கவிஞர் இரா .இரவி வாசித்தது .
தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .
திருவள்ளுவரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை !
திருவள்ளுவரைப் பார்த்தோம் தமிழ்க்கூத்தன் வடிவில் !
திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்த தமிழ்க்குன்று !
தித்திக்கும் தமிழில் அவர் படைத்த கவிதை கற்கண்டு !
இருபத்திஅய்ந்து வருடங்களுக்கு முன்பே !
என்னை கவிதா வேள்வியில் பாட வைத்தவர் !
அன்று தொடங்கிய எனது இலக்கியப் பயணம் !
இன்று பதினொன்று நூல்கள் இரண்டு இணையம் !
ஒரு வலைப்பூ என்று வளர்ந்தது மலர்ந்தது !
அன்று அவர் தந்த ஊக்க விதையே விருட்சமானது !
அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை !
அன்பு நெஞ்சம் உறுத்திக் கொண்டே இருந்தது !
தம்பி கவிஞர் கோபால கிருஷ்ணன் குறுந்தகவல்
தட்டினார் இதய அஞ்சலி கூட்ட அறிவிப்பை !
உடனடியாக ஓடோடி வந்தேன் இங்கு !
உன்னத மனிதருக்கு இதய அஞ்சலி செய்திட !
எழுதியபடி வாழ்ந்தவர் வாழ்ந்தபடி எழுதியவர் !
எதிலும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக் குன்று !
தமிழ் இனத்திற்கான போராட்டம் எதுவென்றாலும்
தானாக முன் வந்து முதல் ஆளாக நின்றவர் !
தமிழ் மொழிக்கு தீங்கு என்றால் தட்டிக் கேட்க
திருப்பரங்குன்றத்தில் தலைமகனாக வந்து நின்றவர் !
திருப்பரங்குன்றத்திற்கு முருகனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து பக்தர்கள் சொல்வர்கள் !
திருப்பரங்குன்றத்திற்கு தமிழ்க்கூத்தனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து கவிஞர்கள் சொல்வர்கள் !
ஈழத்தில் படுகொலைகள் நடந்தபோது கொதித்து
இரக்கக் குரல் உரக்கக் கொடுத்தவர் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் வேடந்தாங்கல் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் குருவாக வாழ்ந்தவர் தமிழ்க்கூத்தன் !
தமிழ்க்கூத்தனால் வளர்க்கப்பட்ட கவிஞர்கள் பலர் !
தமிழ்க்கூத்தனார் வார்ப்பில் நானும் ஒருவன் !
குருவை இழந்த சீடனாக தவிக்கின்றேன் !
திருவைப் பெற்ற குரு தமிழ்க்கூத்தன் !
மறைவு என்பது அவரது உடலுக்குத்தான்
மறைவு என்றும் இல்லை அவர் புகழுக்கு !
வளரும் கவிஞர்களை ஆகா ! ஓகோ ! பலே ! என்றே
வளர்த்து விட்ட தாயுமானவர் தமிழ்க்கூத்தன் !
கவிதைப் பறவைகள் நாள் தோறும் வருகை தந்து
கூ்டு கட்டிட விட்ட ஆலமரம் தமிழ்க்கூத்தன் !
உடலின் நிறம்தான் கருப்பு அவரின்
உள்ளத்தின் நிறமோ வெள்ளையோ! வெள்ளை !
ஈடு செய்ய முடியாத இழப்பு முற்றிலும் உண்மை !
இலக்கிய இமயம் சரிந்தது என்ன கொடுமை !
தமிழ்க்கூத்தன் இடத்தை நிரப்பிட யாரும் இல்லை !
தமிழ்க்கூத்தன் தடத்தில் நடை போடுவோம் வாருங்கள் !

அற்புதமான வரிகள்... புலவர் தமிழ் கூத்தன் ஐயாவின் மாண்பை அப்படியே எடுத்து உரைத்து இருக்கிறீர்கள்... நன்றி... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி.
பதிலளிநீக்கு