விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் ! கவிஞர் இரா .இரவி !

விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !
கவிஞர் இரா .இரவி !

முடியாது என்று முடங்காதே !
முடியும் என்றே முயன்றிடு !

தெரியாது என்று தயங்காதே !
தெரிந்திடு நன்றே அறிந்திடு !

வருமென்று காத்திருக்காதே !
வாய்ப்பைத்  தேடி சென்றிடு !

பிறந்தோம் என்பதற்காக வாழாதே !
பிறந்தது சாதிப்பதற்கு உணர்ந்திடு !

சராசரியாக காலம் கழிக்காதே !
சாதனை நிகழ்த்தி சாதித்திடு !

காலத்தை வீணாய் கழிக்காதே !
காலம் மேலானது தெரிந்திடு !

அறிவுரை ஏற்காமல் இருக்காதே !
அறிவுரை ஏற்று நடந்திடு !

பெரியவர்களை மதிக்காமல் இருக்காதே !
பெரியவர்களை மதித்து நடந்திடு !

எதிர்காலத்தை திட்டமிடாமல் இருக்காதே !
எதிர்காலத்தை திட்டமிட்டு வகுத்திடு !

மனதில் கவலை கொள்ளாதே !
மனதில் கவலையை அகற்றிடு !

அவநம்பிக்கையோடு இருக்காதே !
அகத்தில் நம்பிக்கை பெற்றிடு !

தோல்வி கிடைத்தால் வருந்தாதே !
தோல்விக்குத் தோல்வி கொடுத்திடு !

வெற்றி தூரமென்று நினைக்காதே !
வெற்றி உன்னருகில் அறிந்திடு !

என்றும் சோம்பேறியாக இருக்காதே !
என்றும் சுறுசுறுப்பாக இருந்திடு !

ஓய்வு எடுக்க நினைக்காதே !
ஓய்வுக்கு ஓய்வு அளித்திடு !

நாளையென்று நாட்களைத் தள்ளாதே !
நாளை என்ன ? இன்றே முடித்திடு !

பேசிடக் கூச்சம் கொள்ளாதே !
பேசி நன்மைகளைப்  பெற்றிடு !

உன் வாழ்க்கை உந்தன் கையில் உள்ளது !
விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !

கருத்துகள்