பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .
விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மானமிகு பதிப்பகம் 3/20 A.ஆதி பராசக்தி நகர் ,திருப்பாலை ,மதுரை .14.
விலை ரூபாய் 60.
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .B.S.N.L நிறுவனத்தில் பணி
புரிந்துக் கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர் .விடுதலை, உண்மை
பத்திரிக்கைகளில் படைத்தது வரும் படைப்பாளி .முனைவர்
வெ .இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்
.முனைவர் பட்டநெறியாளர் பேராசிரியர் கலைமாமணி
கு .ஞானசம்பந்தன் .தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற முனைவர் பட்ட தகுதித்
தேர்வு அன்று சென்று இருந்தேன் .பலரும் பாரட்டினார்கள் நூல் ஆசிரியர் வா
.நேருவை .
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு என்னுரையில் மிக வித்தியாசமாக
எழுதி உள்ளார் .
" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்
.கொடுத்திருக்கிறேன் ."
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூலின் தலைப்பே வித்தியாசமாக
உள்ளது .நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் ஊரில் திருவிழா என்றால்
வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரம் வீடுகளில் வசூல் செய்து
கரகாட்டம், பட்டிமன்றம் ,டாஸ்மாக் என்று தட புடலாக செலவு செய்வார்கள்
.ஆனால் ஊரில் உள்ள பள்ளியை கண்டு கொள்ள மாட்டார்கள் .அதனை உணர்ந்து
எழுதியுள்ள கவிதை நன்று .
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !
ஊரில் உள்ள
ஒரே ஒரு பள்ளிக்கூடம்
கரும்பலகையும்
இல்லாமல்
ஒழுகும் கூரையோடு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
ரொம்ப நாளாய் !
இறுதி மூச்சு உள்ளவரை மனித சமுதாயத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் தந்தை
பெரியார் பற்றிய கவிதை மிக நன்று .
மனிதருக்கெல்லாம் மாமருந்தாய் !
ஈரோட்டுப் பூகம்பமே !
நீ மறைந்து ஆண்டுகள் பல ஆனாலும்
நீ ஏற்படுத்திய அதிர்வலைகள்
கடல் அலைகளாய்
ஓயாமல் உலகெங்கும் !
நூல் ஆசிரியர் வா .நேரு பகுத்தறிவாளர் கழகத்தில் மாநிலத் தலைவராக உள்ள
பகுத்தறிவாளர் என்பதால் ,சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட கருத்துக்களை
துணிவுடன் புதுக் கவிதையாக வடித்துள்ளார் .எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி
? எங்கு? எதனால் ?என்று தந்தை பெரியார் வழியில் சிந்தித்த காரணத்தால்
நன்கு படைத்துள்ளார் .
அறிஞர் அண்ணா பற்றிய கவிதை நன்று .
உனது நூல்களே முறியடிக்கும் !
தந்தை பெரியாரின் தலைமகனே பிரிந்து விட்டார் !
தந்தையும் மகனும் அய்யாவின் கொள்கைக்கு கொள்ளி வைப்பார் !
என்று எதிர்பார்த்த மூதறிஞர்களின் எதிர்பார்ப்பில்
மண்ணை அள்ளிப் போட்ட மகத்தான சரித்திரமே !
அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும் எனது ஆட்சியே தந்தை பெரியாருக்கு
காணிக்கை என்று சொல்லி பெரியாரின் கொள்கைகளை சட்ட வடிவமாக்கியவர் .சுய
மரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் தந்தவர் அறிஞர் அண்ணா.அறிஞர்
அண்ணாபற்றிய மதிப்பீடு மிக நன்று .
மூட நம்பிக்கைகளை சாடி பல கவிதைகள் உள்ளது .பதச் சோறாக சில மட்டும்
உங்கள் பார்வைக்கு !
ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு பகவான்
போகின்றார் .
குரு பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?
மாணவர் தேர்வில் ராம ஜெயம் எழுதியதைக் கண்டு எழுதிய கவிதை ஒன்று !
நம் மூளையில் திணிக்கப்பட்டுள்ளது
திணிக்கப்பட்ட குப்பைகளை தூக்கி
வீசாமல்
முன்னேற்றம் என்பது
முயற்கொம்பே !
காதலைப் பாடாமல் கவிதை நிறைவு பெறாது .நூல் ஆசிரியர் வா .நேருவும்
காதலைப் பாடி உள்ளார் .
ஆதலினால் காதலிப்பீர் !
காதல் வலு சேர்க்கும் !
காதல் சமூகத்தின்
சாதி நோய் போக்கும் !
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும் !
ஆதலினால் காதலிப்பீர் !
தீபாவளி மூட நம்பிக்கை கதையைச் சாடி உள்ளார் .கவிதைகள் வசன நடையில்
இருந்தாலும் சிந்திக்க வைத்து வெற்றி பெருகின்றது.பாராட்டுக்கள்.
பிள்ளையார் (சுழி ) அழி !
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு !
என நம்மை ஏமாற்றி
என்றும் ஏதுமறியா
சுழியன்களாய் நம்மை
வைத்திருக்க சூது செய்யும்
பிள்ளையார் ஊர்வலச்
சதி அறிவோம் !
என் கை பட்டால் நோய்கள் குணமாகும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும்
சாமியார்களின் மோசடிகளை தோலுரிக்கும் விதமாக ஒரு கவிதை இதோ !
பக்தி வியாபாரிகள் !
அறிவியல் மருந்துகளை
மறுத்து வெறும் பிராத்தனையால்
ஓடி விடும் ! நோய்கள் !
என மன நோயாளிகளாய்மனிதர்களை மாற்றிவிடும்
அயோக்கியத்தனம் !
மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சமுதாயம் திருந்தும் கவிதைகள் படைத்த
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு அவர்களுக்கு பாராட்டுக்கள்
.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .இந்நூலை தரமாக அச்சிட்டு மானமிகு
பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளியிட்ட பகுத்தறிவாளர் நண்பர் பா
.சடகோபன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக