அழகா ? காதலா ? கவிஞர் இரா .இரவி !

அழகா ? காதலா ?  கவிஞர் இரா .இரவி !

அழகு என்பது புறம் சார்ந்தது !
காதல் என்பது அகம்  சார்ந்தது !

அழகை   ரசிப்பது இயல்பு !
அழகு மீது வருவது காதலன்று !

வானவில் அழகுதான் !
புற அழகு நிரந்தரமன்று !

அன்பே காதல் ஆகும் !
அக அழகே அழகு !

மீன் அழகு முள் உண்டு !
அழகில் ஆபத்தும் உண்டு !

புரிந்து வருவது காதல் !
புத்துணர்வு  தருவது காதல் !

அழகு காமம் சார்ந்தது !
அறிவும் அன்பும் காதல் சார்ந்தது !

உடலின் மீது வருவது காமம் !
உள்ளத்தின் மீது வருவது காதல் !

காமம் இன்றியும் காதல் உண்டு !
கற்கண்டு முதுமையிலும்  காதல் உண்டு !

கருத்துகள்