தேன் சுவைத் துளிப்பாக்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்
நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
பல்வேறு இதழ்களில் பிரசுரமான ,இணையங்களில் பதிவான துளிப்பாகளின் தொகுப்பு நூல். நேரில் சந்திக்காத , இணையத்தின் வழி தினமும் சந்திக்கும் நண்பரின் நூல்.துளிப்பாகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது .பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு .
விவசாயி கஷ்டப்பட்டு விளைவித்த பூசணிக்காயை சமைத்து உண்ணாமல் மூட நம்பிக்கையின் காரணமாக வீதியில் போட்டு வீணடித்து விபத்திற்கு வழி வகுக்கும் செயலை சாடும் விதமாக உள்ள துளிப்பா .
பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல் சிதறி பலி
ஆயுத பூஜை .
மனித நேயம் கேள்வி பட்டு இருக்கிறோம் .மரநேயம் என்று புதுச் சொல் பயன் படுத்தி உள்ளார். பாராட்டுக்கள். மரநேயம் விதைத்து உள்ளார் .
மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூய காற்று
என்னே மரநேயம் .
தமிழக மீனவர்கள் தினந்தோறும் செத்து பிழைக்கின்றனர் .அவர்களை காக்க ஒரு நாதி இல்லை. இந்த அவல நிலை என்று மாறுமோ ? என்ற வருத்தத்தில் வந்த துளிப்பா .
கண்ணீரில் வாழ்கிறான்
தண்ணீரில் பிழைக்கிறான்தமிழக மீனவன் .
மீனவர்களின் சோகத்தை கண்டு கேட்டு படித்து பார்த்து உணர்ந்து துளிப்பா வடித்துள்ளார் .
கடலில் அழும் மீன் போல்
கரையில் அழுகிறாள்
மீனவன் மனைவி .
தமிழக மக்கள் மாறி மாறி வாக்களித்த போதும் இன்னல் மட்டும் இன்னும் தீர்ந்தபடில்லை .மின் தடை ஒழிய வில்லை .இன்று மின்சாரம் என்பது அடிப்படை தேவை .அதைக் கூட ஆள்வோர் நிறைவேற்ற வில்லையே என்ற வேதனையில் உள்ளனர் .அதனை உணர்த்தும் துளிப்பா .
ஆட்சி மாறுகிறது
காட்சி மாறவில்லை
தமிழ்நாட்டில் .
சொல் விளையாட்டு விளையாடும் ஒரு துளிப்பா .ஒரு புறம் அரசியல்வாதிகள் கோடிகள் கொள்ளையடித்து அயல் நாட்டு வங்கிகளில் வருங்கால வாரிசுகளுக்கு சேர்த்து வைக்கின்றனர். மறுபுறம் வசிக்க வீடு இன்றி தெருக்களில் வாழும் வறுமை .இந்த முரணை உணர்த்திடும் துளிப்பா .
கோடிகளில் வாழ்வதும்
கோடிகளில் வாழ்வதும்
இதியாவில் மட்டுந்தான் .
ஆள்வோர் திட்டங்கள் தீட்டிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் ஏழ்மை மட்டும் இன்னும் ஒழிந்தபாடில்லை .
வயிற்றில் வலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி
கண்ணீரில் ஏழை .
சில துளிப்பாக்கள் மேற்கோள் காட்டவே தயங்கும் அளவிற்கு சாட்டை அடி துளிப்பாக்கள் நூலில் உள்ளது .
துளிப்பாவின் மூலம் உழைப்பின் மேன்மையையும் உணர்த்துகின்றார் .
வாழ்க்கை முழுக்க
ஓட்டப்பந்தயம்
கடிகார முட்கள் .
விலை நிலங்கள் விரைவாக அழிந்து வருகின்றது .விவசாயிகள் தற்கொலை தினமும் நடகின்றது .இந்த அவல நிலை தொடர்ந்தால் உண்ண சோறு கிடைக்காத அவல நிலை விரைவில் வரும் என்பதை உணர்த்தும் துளிப்பா .
விலை நிலங்களில்
ஓங்கி வளர்ந்தன
மாடி வீடுகள் .
வியப்பில் ஆழ்த்தும் துளிப்பா ஒன்று .
மீசையுடன்
குழந்தை பிறந்தது
பூனைக்குட்டி .
மனசாட்சி உள்ள ஒரு நேர்மையான படைப்பாளியால் ஈழக் கொடுமை பற்றி எழுதாமல் இருக்க முடியாது .கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் ஈழம் பற்றி எழுதி உள்ளார் .
இன வெறியால்
இடம் பெயர்கின்றன
ஈழத்துப் பறவைகள் .
நிலா பற்றி பாடாத கவிஞர் இல்லை .நிலாவைப் பாடதவர் கவிஞரே இல்லை என்பதும் உண்மை .நிலாவை வித்தியாசமாக பார்த்து உள்ளார் .
ஆழம் அதிகம்
நீந்தத் தெரியாமல்
நிலா .
நம் நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் நல்ல மரங்களை வெட்டி வீழ்த்தி வீழ்ச்சிக்கு வழி வகுத்து வருகின்றனர் .வெட்டிய அளவிற்கு புதிய மரங்கள் நடுவதே இல்லை .
சாலை விரிவாக்கம்
சங்கு ஊதினர்
மரங்களுக்கு .
எள்ளல் சுவையுடன் கவிஞர்களின் சோகத்தை உணர்த்துகின்றார் .இன்று பிரபல கவிஞர்கள் கவிதை நூல் மட்டுமே புத்தக் கடைக்காரர்கள் வாங்குகின்றனர் .வாங்கி வைத்துக் கொண்டு நூல் விற்ற பின்பு பணம் தாருங்கள் என்றாலும் , நூலை வாங்க மறுக்கின்றனர்.
வில்லுப்பாட்டு கலைஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களிடம் காந்தி மகான் கதை சொல்லும்போது , அவரை சுட்டக் காட்சி வரும்போது தின்ந்தோறும் உங்களால் எப்படி அழ முடிகின்றது .என்று கேட்டபோது .அவர் .சொன்னது ."வீட்டில் விற்காமல் இருக்கும் என் நூல்கள் பற்றி நினைப்பேன் உடன் அழுகை வந்து விடும் ".என்றாராம் .அதனை நினைவிற்கு கொண்டு வந்த துளிப்பா .
கவிதை நூல் வெளியீடு
மகிழ்ச்சியில் திளைத்தன
கரையான்கள் .
காதிலில் தோல்வி அடிந்தவர்களின்மான நிலையை படம் பிடித்துக் காட்டும் துளிப்பா .
காதல் தோல்வி
அறுத்தெறிய முடியவில்லை
அவளின் நினைவுகள் .
பறவைக்கு உள்ள சுதந்திரம் கூடமனிதனுக்கு இல்லை .கடலில் ,காற்றில் தெரியாமல் படகு எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும் கொடிய சிங்கள இலங்கை ராணுவத்தைச் சாடிடும் துளிப்பா .சிந்திக்க வைத்தது .
கடலெல்லையைத் தாண்டியும்
பறக்கும் பறவைகள்
கொல்லப்படும் மீனவன்
உள்ளத்து உணர்வை ஒளிவு மறைவு இன்றி அப்படியே பதிவு செய்துள்ளார் .ஒரு சில துளிப்பாகளில் ஆங்கிலச் சொல் வருகின்றது .வருங்காலத்தில் ஆங்கிலச் சொல் தவிர்த்து எழுதுங்கள் .தொடர்ந்து எழுத்துகள் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
--

கருத்துகள்
கருத்துரையிடுக