சாதிவெறி சாகடிக்கும் தீ ! கவிஞர் இரா .இரவி !

சாதிவெறி  சாகடிக்கும் தீ !  கவிஞர் இரா .இரவி !

மோதி வீழ்வது மிருககுணம்  
கூடி வாழ்வது மனிதகுணம்  
கூடிவாழ் மனிதனாக !

சதியில் பிறந்தது சாதி
சாதியை மறந்து சாதி
சாதி வெறிக்கு வை தீ !



குழந்தைக்குத் தெரியாது
குழந்தையிடம் கூறாதே
குழந்தைக்கு வேண்டாம் சாதி !

ஆதியில் இல்லை
பாதியில் வந்த தொல்லை
சாதி !

கணினி யுகத்தில்
காட்டுமிராண்டித்தனம்
தீண்டாமை !

வேண்டும் சமூக  நீதிக்கு
வேண்டாம்
சமூக  அநீதிக்கு
சாதி !

மூளையற்ற மூடத்தனம்  
சமூக அவமானம்
சாதிக்கலவரம் !


சிந்தித்துப் பார்த்து
செயலினை மாற்று
மாறு மனிதனாக !


விவேகம் உணர்ந்து  
வீண் சண்டை நிறுத்து  
வேண்டாம் வெட்டுக் குத்து !

சாதிக்காக கொல்வது
மதத்திற்காக
கொல்வது
கொல்வது  மடமை !

மனிதனுக்கு அழகு
வன்முறை அல்ல
மனிதநேயம் !


மூளைச் சலவைக்குப்  பலி
முட்டாளாகி உயிர்கள் பலி
பயன்படுத்து பகுத்தறிவை !


அயல் நாடுகளில் இல்லை
நம் நாட்டில் தொல்லை
சாதி !

உள்ள
த்தால் உயர்ந்தவனே உயர்ந்தவன்
சாதியால்
உயர்ந்தவன் இல்லை
உயர் உள்ளத்தால் !

கோடிப் பணம் கொடுத்தாலும்
கொன்ற  உயிர் திரும்பாது
திருந்து !


சாவதில்லை தலைவர்கள்
சாகிறார்கள் தொண்டர்கள்
சாதிச்சங்கத்தில் !


வளர்த்த ஆடுகள்
முட்டின மார்பில்

சாதிச்சங்கங்கள் !


கற்பிக்கப்பட்ட
ற்பனை
போதிக்கப்பட்ட போதனை
சாதி !


வேண்டும் மனிதநேயம்
வேண்டாம்
சாதிவெறி
சாதி
வெறி சாகடிக்கும் தீ !

--

கருத்துகள்