மாற்றுத்திறனாளிகள் தினம் ! கவிஞர் இரா .இரவி .

மாற்றுத்திறனாளிகள் தினம் !  கவிஞர் இரா .இரவி .

இயந்திரக்  கால்களால் ஓடினாலும்
இளகிய நெஞ்சம் கொண்டவர்கள்

மாற்றுத்திறனாளிகள் ! 

மனிதநேயம் மிக்கவர்கள்
உதவிடும் உள்ளம் பெற்றவர்கள் 
மாற்றுத்திறனாளிகள் ! 

பாரலிம்பிக்கில்
பதக்கங்கள்  வெல்பவர்கள்
மாற்றுத்திறனாளிகள் !

இருகைகளின்றி
வாயால் ஓவியம்
 
மாற்றுத்திறனாளிகள் !

இருவிழிகள் இன்றி 
விரல்களால் கல்வி
மாற்றுத்திறனாளிகள் !

அங்கத்தில் இருக்கலாம் குறை
குணத்தில் இல்லை குறை
 
மாற்றுத்திறனாளிகள் !

கைகளை இழந்தபோதும்
நம்பிக்கை இழக்காதவர்கள்
மாற்றுத்திறனாளிகள் !

கால்களை இழந்தபோதும்
வளரும் நாற்றாங்
கால்கள் 
மாற்றுத்திறனாளிகள் !

பார்வை இல்லாவிடினும்
இருக்கை பி
ன்னுபவர்கள்
மாற்றுத்திறனாளிகள் !

நடக்க முடியாவிட்டாலும்
வாழ்க்கையில் வெல்பவர்கள்
 
மாற்றுத்திறனாளிகள் !

இயற்கை கால்களின்றி
செயற்கை கால்களால் சாதி
ப்பவர்கள்
மாற்றுத்திறனாளிகள் !

உடலால் சோர்ந்தாலும் 
உள்ள
த்தால் சோராதவர்கள்  
மாற்றுத்திறனாளிகள் !

புறவிழி  இல்லாவிடினும்
அகவிழி உள்ளவர்கள்

மாற்றுத்திறனாளிகள் !


துன்பத்திற்கு துன்பம் தந்து
இன்பமாய் வாழ்பவர்கள்

மாற்றுத்திறனாளிகள் !

உறுப்பை இழந்தபோதும்
உணர்வை இழக்காதவர்கள்
 
மாற்றுத்திறனாளிகள் !

சட்டத்தை மதிப்பவர்கள்
சகலகலாவல்லவர்கள் 

மாற்றுத்திறனாளிகள் !

இலக்கியம் படை
ப்பவர்கள்
இனிய இதயம் பெற்றவர்கள்
 
மாற்றுத்திறனாளிகள் !

சக்கர வண்டியில் சென்றேனும்
வாழ்க்கை சக்கரம் உரு
ட்டுபவர்கள் 
மாற்றுத்திறனாளிகள் !

யாருக்கும்  பாரமாக இருக்க
விரு
ம்பாத உள்ளம் பெற்றவர்கள் 
மாற்றுத்திறனாளிகள் !

தன்னம்பிக்கை மிக்கவர்கள்
தளாராத தேனீக்கள்
 
மாற்றுத்திறனாளிகள் !

குறையை நிறையாக்கி
குறைவில்லா உள்ளம் பெற்றவர்கள்
மாற்றுத்திறனாளிகள் !

முடங்காமல் முன்னேருபவர்கள்
சிதையாமல் சாதி
ப்பவர்கள்
மாற்றுத்திறனாளிகள் ! 

வாய்ப்பு வழங்கினால்
வெற்றி
ப்  பெறுபவர்கள்  
மாற்றுத்திறனாளிகள் ! 

வாழ்க்கையில் போராட்டம் நமக்கு
போராட்டமே வாழ்க்கை
மாற்றுத்திறனாளிகள் ! 



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

கருத்துகள்