ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !   சென்றியு !      கவிஞர் இரா .இரவி !

நன்கு உணர்த்தியது
எடிசனின் பெருமையை
மின்தடை !

தணிக்கையின்றி
ஆபாச விசம் இல்லத்தில்
தொ(ல்)லைக்காட்சி !

விலங்கிலிருந்து வந்தவனை
திரும்பவும் விலங்காக்கின
தொலைக்காட்சித்  தொடர்கள் !

நேர்மறைக்கு இடமின்றி
எதிர்மறைக்குப் பேரிடம்
ஊடகங்கள் !

பரப்பி விதைக்கின்றனர்
தமிங்கிலம்
ஊடகங்கள் !

ஒரே பார்வை
பாய்ந்தது மின்சாரம்
காதல் விளக்கு !

மறந்தது கவலை
குடிசையின் துளையில்
மழைத்துளிகளின் இசை !

திருட வந்தவன்
திட்டிச் சென்றான்
ஏழை வீடு !


சொன்னார்கள் நேரம்
வானம் பார்த்து
கிராமத்தினர் !

பிடிக்காதது
இளைஞர்களுக்கு
அறிவுரை !

கர்நாடக உறவோடு
நிலத்திலும்
விரிசல் !

உயிர் வளர்க்கும் உணவு
உழைத்துத் தந்த உழவன்
உயிர் வெறுத்து தற்கொலை !

வெகு நாட்கள் இல்லை
அருங்காட்சியத்தில்
நெல் !

கையில் வெண்ணை
நெய்  தேடல்
இலவசங்கள் !

காலுக்கடியில் புதையல்
அறியாமல் பிச்சை
மக்கள் !

கருத்துகள்