சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

சிறகுகளின் சுவாசங்கள் ! 

நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .

நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி
.

 இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.தொடர் வண்டித் துறையில் அதிகாரியாக பணி புரிபவர் . பணிபுரிந்துகொண்டே இலக்கியத்திலும் தடம் பதிப்பவர் .இவருடைய முந்தைய நூல் நித்திரைப் பயணங்கள்வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டவன் நான் இவரது அருமையான கவிதைகளை அடிக்கடி முக நூலில் படித்து விட்டு பாராட்டி வருகிறேன் .தனித்தனியாகப்  பார்த்து ரசித்த கவிதைகளை நூலாகப்  பார்ப்பதில் படிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி .

  "ஒரு சிற்பியின் பிரசவம் " முதல் கவிதையிலேயே முத்திரைப் பத்தித்து ,படித்த வாசகர்களை சிலையாக்கி விடுகின்றார் .

எனக்குள்
சன்னமாய் தேய்ந்து  மறைத்து
உளியோசையும்
வேதனையின் வலியும் !

சிந்திக்க வைக்கும் வைர வரிகள் .இவை .உளியின் தாக்குதலுக்குப் பயந்தால் கல் சிலையாக முடியாது .துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வது உயர்வானது .என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் .

உள்ளத்து  உணர்வு கவிதை ! உண்மையை உரக்க உரைப்பது கவிதை ! சிந்திக்க வைத்து சீர் படுத்துவது கவிதை ! இயற்கையின் படப்பிடிப்பு கவிதை ! இளகிய மனது கவிதை ! குழந்தை உள்ளம் கவிதை ! மனிதநேயம் கவிதை ! மகத்தானது கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி
அவர்கள் சிறகுகளின் சுவாசங்கள் !  என்று நூலிற்கு தலைப்பு வைத்த விதத்தில் வித்தியாசமாக சிந்தித்து உள்ளார் என்பதை உணர முடியும். சிறகுகளின் அசைவுகள் பார்த்து இருக்கிறோம் .ஆனால் நாம் சிறகுகளின் சுவாசங்கள் ! பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை .இனி பார்ப்போம் கேட்போம் இதுதான் படைப்பாளியின் வெற்றி .

முட்களின் வேதனை !

என்னைத் தீண்டி சிதைப்பது
நீயல்லவா ...
வலியின் வேதனையுடன்
உன் சாப
த்தையுமல்லவா
சேர்ந்து சுமக்கிறேன் !
முள் மீது நாம் மிதித்து குத்திக் கொண்டு ,"முள் குத்தி விட்டது " என்று எல்லோரும் பொய்  சொல்லும் வழக்கத்தை சாடும் விதமாக வேறு பட்டு சிந்தித்து உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .பாம்பும் அப்படிதான் பாம்பை நாம் மிதிக்காமல் அது கடிக்காது நம்மை .நாம் அதைத் தீண்டாமல் அது நம்மைத் தீண்டாது .பிறகு பாம்பு தீண்டி விட்டது என்று கவலை கொள்கிறோம் .பார்த்து கவனமாக நடந்தால் பாம்பு கடிக்காது. இவ்வாறு பல சிந்தனைகளை என்னுள்  விதைத்து முள் கவிதை .மாறுபட்டு மாற்றி சிந்திபவர்களே வெற்றிப் பெறுகின்றனர் .வித்தியாசமாக சிந்தித்து பல கவிதைகள் வடித்துள்ளார் .

சித்தர்கள் போல பல தத்துவக் கவிதைகள் வடித்துள்ளார் .

மாயத்தோற்றம் !
குயில் குரல் இனிமை
புறாவின் தோற்றம் அழகுதான்
அகம் புறம்
த்தனை மாயை  ...


குயில்  புறா அளவிற்கு அழகில்லை என்றாலும் தன் குரல் வளத்தை, இனிமையை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் .இது மனிதர்களுக்கும் பொருந்தும் .இல்லாததற்காக வருந்துவதை விடுத்து இருப்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.கிடைக்காதை  நினைத்து கவலை கொள்வதை விடுத்தது கிடைத்ததை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் .

பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சிந்தனைகளில் பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .அணிந்துரையில் அத்தனை கவிதைகளையும் எழுதிவிட முடியாது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

சிறகுகளே துணையாய் !

விழிகளில் காதல் பனி
த்திருக்க  பசுமையாய் ...
நினைவில் வருட வசந்தத்தின் விளிம்பில்
சிறகுகளே துணையாய் !
அந்த நந்தவன மாளிகையில்
மன்னவன் வரவிற்கா
ய்
மண்
டியிட்டுக் கிடந்தனையோ !

காதல் பிரிவு பற்றியும் பாடி உள்ளார் .காதலை பாடாத கவிஞரும் உண்டோ ?

கவியரசு கண்ணதாசன் பாணியில் தேன் தேன் என்று எழுதி கவித்தேன்  விருந்து வைத்து வியப்பில் ஆழ்த்தி உள்ளார் .

பார்த்
தேன்  உணர்ந்தேன் பார்வையில் திளைத்தேன்
மனம்
தேன் மலைத்தேன் மணந்தேன் உயிர்த்தேன்
இடைத்தேன் இழைத்தேன் இதழ்
தேன்  மலர்ந்தேன்
விழித்தேன் படித்தேன் மொழிந்தேன் சுவைத்தேன்

இப்படி 
தேன் கவிதை தித்திக்கும் விதமாக நீண்டு கொண்டே செல்கின்றது .நூலை வாங்கி கவித்தேனை குடித்துப்  பாருங்கள் .சங்க இலக்கியப் பாடல் போல இலக்கித் தமாக கவிதை உள்ளது .

குறிஞ்சித் தென்றல் !
குறிஞ்சி மலர்க் கொய்த காந்தள்  மென் மேனியிவள்
தேன்  திணை கலந்து சுனை நீர்ப் பருகி
குறிஞ்சி யாழ் இசைக்க கிளி வந்து சொன்ன தூது
மலைப்பாதை நெளிந்து மன்னவன் நினைத்து
வேலன் வழிப்பட்டு வேல் விழியால்
குறிஞ்சிப் பண்  சுருதி புலி சிங்கம் வணங்கி  நிற்க
தலைவன் மஞ்சம் சேர்ந்த சிறுகுடி பூங்கொடியாள் !


நல்ல சுவாசம் புத்துணர்ச்சியைத் தரும்.நல்ல கவிதை மகிழ்ச்சியைத்  தரும் . சிறகுகளின் சுவாசங்கள் !  என்ற இந்த நூல் புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தருகின்றது.தொடர்ந்து  எழுதுங்கள் என்ற என் வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து எழுதி வரும் இனிய நண்பர் கவிஞர்
மு .ஆ .பீர்ஒலி
அவர்களுக்கு பாராட்டுக்கள் .



--
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuymNGTBRoodx-Pebs4GmzsyjQM0Zd7uUBKG3qAoalaysihDkpg3mw8_fxgmKc5wm4HZIXWTTvGvRQcNfE7tMa194mUPRo_eveE9HKhwDKK2g-xnXtMMUtsMOzmp-uDP20QtA0Min1RLtJ/s1600/578838_424998540862587_100000573330162_1486214_1434638446_n.jpg

http://www.youtube.com/watch?v=x6AlHCPjNq4&feature=player_embedded

கருத்துகள்

கருத்துரையிடுக