நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நீதானே என் பொன் வசந்தம் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இயக்கம் : கெளதம்
வாசுதேவ்  மேனன் ,
நடிப்பு : ஜீவா ,சமந்தா.


 
.வருண் ,நித்யா காதல் ஜோடியின் ஊடல் காதல் கதை .சின்ன சின்ன சண்டையை பேசி பெரிது படுத்தாமல் பேசாமல் முத்தம் கொடுத்து  சரி செய்து விடலாம் .என்ற ஒரு வரி  கதையை ஒரு படமாக வழங்கி  உள்ளார் .ஊடலை கூடலால் சரி செய்யலாம் என்பதே கதை.பள்ளிப் பருவத்தில் காதல் பிறகு சண்டை பிரிவு .சில வருடங்கள் கழித்து அனைத்து  கல்லூரி விழாவில் சந்திப்பு  மீண்டும் காதல் . மீண்டும் சண்டை பிரிவு .சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு மீண்டும் காதல் இதுதான் கதை .படத்தின் இறுதிக் காட்சிகளை குறைத்து விடுவது நல்லது .நேற்று மதுரையில் திரையரங்கில் ஒரு ரசிகர் பொறுக்க   முடியாமல் படத்தை முடிங்கடா என்று கத்தி  விட்டார் .

 படம் பார்ப்பவர்களுக்கு காதலித்த அவரவர் துணை நினைவிற்கு வருவது உண்மை .அதில் இயக்குனர் வெற்றி பெற்று உள்ளார் .பாராட்டுக்கள் காதல் மலரும் நினைவுகளை மலர்விக்கின்றது .சிறு சண்டையின் காரணமாக காதலை இழந்தவர்களுக்கு மன ஆறுதல் தரும் படம்.
ஜீவாவும் சமந்தாவும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .பாராட்டுக்கள் .சமந்தா அழகு தேவதையாய் வலம்  வந்தாலும் .பள்ளி மாணவியாய், கல்லூரி மாணவியாய், பள்ளி ஆசிரியராய் பல நிலைகளில் மிக இயல்பாக நன்றாக நடித்து உள்ளார் .சமந்தா மற்றொரு ரேவதியாக வலம்  வருவார் .
காதல் காட்சிகள் மிக இயல்பாக உள்ளது .காதல் காட்சிகள் இயக்குவதில் வல்லவர்  என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் இயக்குனர்  .
பள்ளிப்  பருவத்தில் வந்த பக்குமில்லாத காதல் காரணமாக வருண் காதலி நித்யா பள்ளியின் மாணவிகள் தலைவியாக இருப்பதால் அரங்கம் தொடர்பாக வேலை உள்ளது .நான் வர நேரம் ஆகும் என்கிறார் .பள்ளி தலைவனுடன் சிரித்துப்  பேசியதை தவறாக புரிந்துக் கொண்ட வருண் உடனே என்னுடன் வர முடியுமா ? முடியாதா ? என்று மிரட்டுகிறான் .முடியாது என்று சொல்ல ,சண்டை, பிரிவு .பல வருடங்கள் கழித்து  அனைத்து கல்லூரி   விழாவில் "நினைவெல்லாம் நித்யா "படத்தில் வரும் பாடலான  "நீதானே என் பொன் வசந்தம்"என்ற பாடலை மிக நன்றாகப் பாடி கை தட்டல் பெறுகின்றான் வருண் .நித்யாவும் பாராடுகின்றாள்  .நித்யா பேச்சுப்போட்டியில் சிறப்பாகப் பேசி முதல் பரிசு பெறுகிறாள் .வருண் கை தட்டி பாராட்டுகிறான் .திரும்பவும் காதல் .இருவரும் காரில் சுற்றுகின்றனர் .திகட்ட திகட்ட காதலிக்கின்றனர் .

வருண் அண்ணனுக்கு பெண் கேட்டு போன இடத்தில அப்பாவிற்கு நேர்ந்த அவமானம் கண்டு ,சமுதாயத்தில் நல்ல நிலை அடைய வேண்டும் என்று  குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு,பொறுப்பு வந்து படிக்கின்றான் .நுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுத்து வெற்றிப் பெற்று எம் .பி .எ  படிக்க கேரளா கோழிக்கோடு செல்வதாக காதலி நித்யாவிடம்  சொல்கிறான் .அவளோ நானும் வருகிறேன் .உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது .என்கிறாள் .அவன் நீ வேண்டாம் நீ அங்கு வந்து இருக்க முடியாது .நான் கல்லூரியில்  தங்குவேன் என்கிறான் .மீண்டும் சண்டை .பல வருடங்கள் பிரிவு .

 வருணுக்கு படிப்பு முடித்து நல்ல வேலை கிடைத்து விடுகின்றது .திரும்பவும் நித்யாவை  தோழி மூலம் நித்யா  இருக்கும் இடம் தேடி செல்கிறான். நித்யா மணப்பாடு என்ற ஊரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியராகப் பணி  புரிகிறாள் .வருண் நித்தியாவை தன்னுடன் வரச் சொல்கிறான் .அன்று இருந்த நித்யா நான் இல்லை தற்போது வேறு நித்யா என்கிறாள் .நித்யா வர மறுத்து  விடுகிறாள் .உதடு மறுத்த போதும் உள்ளம் மறுக்காமல்  தவிக்கிறாள் .வருணும் தவிக்கிறான் .வருணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கின்றது .நித்யா நேரில் வந்து வாழ்த்தி விட்டு சென்றாலும் மனம்  வருந்தி வாடுகின்றாள் .செல்லிடப் பேசியில் அழைத்து சந்தித்து திரும்பவும் பேசி சண்டை நடக்கின்றது .இந்த காட்சியில்தான் படம் பார்பவர்களுக்கு எரிச்சல் வந்து விடுகின்றது .கடைசியில் வருண் தந்தை இவர்கள் காதலை அறிந்து வருண் திருமணத்தை நிறுத்து விட்டு நித்யாவிடம் வாழச் சொல்கிறார் .இறுதியில் இருவரும் இணைகின்றனர்.

இயக்குனர் கெளதம்  வாசுதேவ்  மேனனிடம் அதிகம் எதிர் பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் .ஓகோ என்று இல்லாமல் ஒரு முறை பார்க்கலாம் என்ற கத்தில் உள்ளது .சந்தானம் படத்தில் நகைச்சுவைக்கு வந்து போகின்றார் .சிரிக்க வைக்கின்றார் .நீண்ட நாட்களுக்குப் பின் மேஸ்ட்ரோ, சிம்பொனி இளைராஜாவின் பாடல்களும் ,பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது .  சண்டை  போடாமல் காதலிக்க வேண்டும் என்று காதலர்களுக்கு உணர்த்தும் படம் .


--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்