பத்மஸ்ரீ கமலஹாசன் கவிஞர் இரா .இரவிசந்திப்பு !
விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழாவிற்காக மதுரை வந்த பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு அவரது நண்பர் பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் கவிஞர் இரா .இரவியை அறிமுகம் செய்து வைத்தார் .
தசாவதாரம் படம் வந்த நேரத்தில் பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் அவர்களை சந்திக்க மதுரை தியாகராசர் கல்லூரிக்கு நான் சென்று இருந்தபோது தசாவதாரம் படம் பார்த்து விட்டீர்களா என்றார் .ஆம் .என்றதும் கமலஹாசனுடன் பேசுங்கள் என்று அவரது செல்பேசியை தந்தார்கள். பத்து வேடத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறீர்கள் என்று பாராட்டி விட்டு ,
படத்தில் வரும் " கடவுள் இல்லை என்று சொல்ல வில்லை இருந்து இருந்தால் நல்லா இருக்கும் " என்ற வசனம் எனக்கு மிகவும் பிடித்தது என்று சொன்னவுடன் ,இந்த வசனம் பேராசிரியர் தொ .பரமசிவம் சொன்னது அதைதான் படத்தில் வைத்தேன் .என்றார் .கடவுள் பற்றி விவாதம் வந்தபோது நண்பர் பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் அவர்கள் பேராசிரியர் தொ .பரமசிவம் அவர்களிடம் கடவுள் இல்லை என்கிறீர்களா ? என்று கேட்டார் .அதற்கு பேராசிரியர் தொ .பரமசிவம் சொன்ன வசனம்தான் " கடவுள் இல்லை என்று சொல்ல வில்லை இருந்து இருந்தால் நல்லா இருக்கும் " என்று சொல்லி முடித்தார் கமலஹாசன்.அவரது அறிவு நாணயம் கண்டு வியந்த நான் நேரில் சந்தித்த போது ,மலரும் நினைவுகளாக மூவரும் பகிர்ந்து கொண்டோம் .என்னுடைய மனதில் ஹைக்கூ ,சுட்டும் விழி கவிதை நூல்களை கமலஹாசன் அவர்களுக்கு வழங்கினேன் .அன்போடு பெற்றுக் கொண்டு பாராட்டினார் .

கருத்துகள்
கருத்துரையிடுக