என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!

கவிஞர் இரா .இரவி .

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் !
உலகம் முழுவதும் பரவியுள்ள
மொழி தமிழ் !
உலகின் முதல்மொழி  தமிழ்மொழி என்பதை
உரைத்தார் அன்றே பன்மொழி அறிஞர் பாவாணர் !
பன்னாட்டு  ஆட்சிமொழியான
மொழி தமிழ் !
பண்டைக் காலம் முதல் ஆளுமை மொழி தமிழ் !

இணையத்தில் வாகை சூடிய  மொழி தமிழ் !
இதயத்தில் இடம் பிடித்த மொழி தமிழ் !
மூவேந்தர்கள் போற்றி வளர்த்த மொழி தமிழ் !
மூத்த புலவர்கள் கட்டிக் கா
த்த மொழி தமிழ் !
எழுத்து பேச்சு இரண்டிலும் வாழும் மொழி தமிழ் !
இணையில்லா திருக்குறளை
ந்தமொழி தமிழ் !
மொழி அறியாதவர்களும் ரசிக்கும் மொழி தமிழ்
மொழியின் பால் ஈர்ப்பு சக்தி உள்ள மொழி தமிழ் !
செம்மொழி நம் மொழி  உணர்வாய் தமிழா !
செம்மையைக்  காத்திட முயல்வாய் தமிழா !

கலப்பு தாவரத்தில் நன்மை தரலாம் !
கலப்பு மொழிக்கு தீமையே தந்திடும் !

கலப்படம் உணவில் தண்டனைக்குரிய குற்றம் !
கலப்படம் மொழியில் புரிவதும் குற்றமே !
இலக்கண இலக்கியம் நிறைந்த மொழி தமிழ் !
எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ் !

இயல் இசை நாடகம் நிறைந்த மொழி தமிழ் !
இனிய முத்தமிழில்   இனிய மொழி தமிழ் !

தமிங்கிலப்  பேச்சிற்கு முடிவுரை எழுதுங்கள் !
தமிழை தமி
ழாகவேப் பேசிட முயலுங்கள் !
ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகு  தமிழுக்கு எந்த மொழியும் ஈடாகாது
தமிழன் பெருமையை நெஞ்சில் நிறுத்து !
தமிழோடு பிற மொழி கலப்பதை நிறுத்து !


இல்லாதவன் பிச்சை எடுத்தல் நியாயம் !
இருப்பவன் பிச்சை எடுத்ல் நியாயம் !

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!

கருத்துகள்