ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ !           கவிஞர் இரா .இரவி .

அம்மாவிற்கு பிடிக்காத
தமிழ்ச்சொல்
மருமகள் !

மனைவிக்கு பிடிக்காத
தமிழ்ச்சொல்
மாமியார் !

வெண்மேகம்
கார்மேகமானது
கருப்பு  வண்ணத்தால் !

இல்லை என்று சொல்
பொய் சொல்லப் பழக்கினர்
குழந்தையை !

ஊதிக் கெடுத்தார்
தந்தையே மகனை
வெண் சுருட்டு !

கெடவில்லை பொருட்கள்
குளிரூட்டப்பட்ட அறையில்
மனிதர்கள் மூளை ?


--

கருத்துகள்