ஆணவம் ! கவிஞர் இரா .இரவி ..

ஆணவம் !      கவிஞர் இரா .இரவி ..

அழிவுக்கு அறிகுறி
வீழ்ச்சிக்கு அறிகுறி

ஆணவம் !  

என்னைத் தவிர
யாராலும் முடியாது
ஆணவம் !  

எனக்கு நிகர்
எவரும் இல்லை

ஆணவம் !  

நானே பெரியவன்
மற்றவர்
சிறியவர்கள்
ஆணவம் !

எல்லாம் தெரியும்
எனக்கு 

ஆணவம் !

எதுவும் தெரியாது
மற்றவருக்கு
 
ஆணவம் !

ஆளப் பிறந்தவன்
நான்
 
ஆணவம் !

நானே பணக்காரன்
மற்றவர் ஏழை

 ஆணவம் !

நானே அறிவாளி
மற்றவர் முட்டாள்
 
ஆணவம் !

நானே வெல்வேன்
மற்றவர் தோற்பார்

ஆணவம் !

என்னைவெல்ல
எவனும் இல்லை

ஆணவம் !

மனதில் தோன்றும்
கொடிய அரவம்
ஆணவம் !

அழிக்
கா   விட்டால்
அழித்துவிடும்

ஆணவம் !  

கருத்துகள்