ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி .

நிமிர்த்த முடியாது
படுத்திருக்கும் ஏணி
தண்டவாளம் !
துணைவனை இழந்தவளுக்கு
துணையானது
பூ வியாபாரம் !


நன்றி தொலைக்காட்சி
களின்
விளம்பர இடைவெளிக்கு
கிடைத்தது உணவு !

கண்களால் காண்பதும் பொ
ய்
மரங்கள் நகர்ந்தன
சன்னலோரப் பயணத்தில் !

காகத்தின் அறியாமையில்
பிறந்தன
குயில்கள் !

விருந்தினர் வருவதாக
கரைந்த காகம்
விருந்தானது !

ஹைக்கூ கவிதைகளின்
விளம்பரத் தூதுவர்கள்
அணில்கள் !

இன்றும் தொடரும்  புராணம்
ஞானப்பழச் சண்டை 
சகோதரர்களிடையே !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

கருத்துகள்