மாவீரர்களுக்கு வீர வணக்கம் ! கவிஞர் இரா .இரவி .
மாவீரர்கள் நினைவைப் போற்றுவோம்
மாவீரர்கள் கனவை நிறைவேற்றுவோம் !
இங்கு தமிழன் கறி கிடைக்கும் என்றவன்களை
இவ்வுலகை விட்டு அனுப்பிய வேங்கைகள் !
விழிகளைத் தோண்டிய விரல்களை
வெட்டி வீழ்த்தி வீரம் புகட்டியவர்கள் !
துப்பாக்கி நாங்கள் சுட்டாலும் சுடுமென்று
துரோகிகளுக்கு உணர்த்திக் காட்டியவர்கள் !
மாவீரர் நேதாஜி வழியில் படைகள் அமைத்து
மங்கையர்களுக்கும் இட ஒதிக்கீடு தந்தவர்கள் !
முப்படைகள் நிறுவி மூடர்களுக்கு தினமும்
மூக்கை உடைத்து வீரம் விதைத்தவர்கள் !
சிங்கள இன வெறி பிடித்த ராணுவத்திற்கு
சிங்கமென கர்ஜித்து ஓட வைத்தவர்கள் !
பாலியல் வன்முறை புரிந்த பாவிகளுக்கு
பற்களை உடைத்து புத்தி புகட்டியவர்கள் !
ஆதிக்க சிங்களத்தின் ஆணவத்தை
ஆட்டி சாய்த்து மண்டியிட வைத்தவர்கள் !
சிங்கள ராணுவ மிருகங்களை
சின்னா பின்னமாக்கி சிதைத்தவர்கள் !
சிங்கள பொது மக்களுக்கு என்றும்
சிறு தீங்கும் செய்யாதவர்கள் !
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக மதித்து
ஒழுக்கமாக வாழ்ந்த தங்கங்கள் !
நேர்மையற்ற திருட்டுப் படையினரிடம்
நேர்மையாக மோதி வீழாமல் வாழ்பவர்கள் !
நெஞ்சில் உரம் நேர்மை திறம் கொண்டு எதிர்த்து
நெஞ்சை நிமிர்த்தி நெஞ்சில் நின்றவர்கள் !
அடங்க மறுத்து சீறி அத்து மீறி
ஆதிக்க கொட்டம் அடக்கியவர்கள் !
குண்டு மழை பொழிந்த விமானங்களை
குறி வைத்து சுட்டு வீழ்த்தி வென்றவர்கள் !
இரக்கமற்ற சிங்கள இராணுவ வீணர்களை
இறக்க வைத்து கதை முடித்த சிங்கங்கள் !
பகை கொண்டு பலி வாங்கிய பதர்களுக்கு
பாடம் புகட்டி வரலாறு படைத்தவர்கள் !
மக்களுக்கான வீரர்களுக்கு மரணம் இல்லை
மாவீரர்களுக்கு மரணம் என்றும் இல்லை!
ஈழத்தமிழர்கள் இல்லாத நாடு இல்லை
ஈழத்தமிழர்கள் உள்ளங்களில் மாவீரர்கள் !
தனித்தமிழ் ஈழம் மலர்வது உறுதி
தனித்தமிழ் ஈழம் மலராமல் வராது எமக்கு இறுதி !
ஈழத்தமிழர்களின் நல் வாழ்விற்கு
ஈழமே தீர்வு என்பதை உலகிற்கு உணர்த்துவோம் !
மாவீரர்கள் நினைவைப் போற்றுவோம்
மாவீரர்கள் கனவை நிறைவேற்றுவோம் !
மாவீரர்கள் நினைவைப் போற்றுவோம்
மாவீரர்கள் கனவை நிறைவேற்றுவோம் !
இங்கு தமிழன் கறி கிடைக்கும் என்றவன்களை
இவ்வுலகை விட்டு அனுப்பிய வேங்கைகள் !
விழிகளைத் தோண்டிய விரல்களை
வெட்டி வீழ்த்தி வீரம் புகட்டியவர்கள் !
துப்பாக்கி நாங்கள் சுட்டாலும் சுடுமென்று
துரோகிகளுக்கு உணர்த்திக் காட்டியவர்கள் !
மாவீரர் நேதாஜி வழியில் படைகள் அமைத்து
மங்கையர்களுக்கும் இட ஒதிக்கீடு தந்தவர்கள் !
முப்படைகள் நிறுவி மூடர்களுக்கு தினமும்
மூக்கை உடைத்து வீரம் விதைத்தவர்கள் !
சிங்கள இன வெறி பிடித்த ராணுவத்திற்கு
சிங்கமென கர்ஜித்து ஓட வைத்தவர்கள் !
பாலியல் வன்முறை புரிந்த பாவிகளுக்கு
பற்களை உடைத்து புத்தி புகட்டியவர்கள் !
ஆதிக்க சிங்களத்தின் ஆணவத்தை
ஆட்டி சாய்த்து மண்டியிட வைத்தவர்கள் !
சிங்கள ராணுவ மிருகங்களை
சின்னா பின்னமாக்கி சிதைத்தவர்கள் !
சிங்கள பொது மக்களுக்கு என்றும்
சிறு தீங்கும் செய்யாதவர்கள் !
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக மதித்து
ஒழுக்கமாக வாழ்ந்த தங்கங்கள் !
நேர்மையற்ற திருட்டுப் படையினரிடம்
நேர்மையாக மோதி வீழாமல் வாழ்பவர்கள் !
நெஞ்சில் உரம் நேர்மை திறம் கொண்டு எதிர்த்து
நெஞ்சை நிமிர்த்தி நெஞ்சில் நின்றவர்கள் !
அடங்க மறுத்து சீறி அத்து மீறி
ஆதிக்க கொட்டம் அடக்கியவர்கள் !
குண்டு மழை பொழிந்த விமானங்களை
குறி வைத்து சுட்டு வீழ்த்தி வென்றவர்கள் !
இரக்கமற்ற சிங்கள இராணுவ வீணர்களை
இறக்க வைத்து கதை முடித்த சிங்கங்கள் !
பகை கொண்டு பலி வாங்கிய பதர்களுக்கு
பாடம் புகட்டி வரலாறு படைத்தவர்கள் !
மக்களுக்கான வீரர்களுக்கு மரணம் இல்லை
மாவீரர்களுக்கு மரணம் என்றும் இல்லை!
ஈழத்தமிழர்கள் இல்லாத நாடு இல்லை
ஈழத்தமிழர்கள் உள்ளங்களில் மாவீரர்கள் !
தனித்தமிழ் ஈழம் மலர்வது உறுதி
தனித்தமிழ் ஈழம் மலராமல் வராது எமக்கு இறுதி !
ஈழத்தமிழர்களின் நல் வாழ்விற்கு
ஈழமே தீர்வு என்பதை உலகிற்கு உணர்த்துவோம் !
மாவீரர்கள் நினைவைப் போற்றுவோம்
மாவீரர்கள் கனவை நிறைவேற்றுவோம் !
கருத்துகள்
கருத்துரையிடுக