அன்புடையீர் வணக்கம் .

அன்புடையீர் வணக்கம் .

அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி .நா
ம் ஒன்றை இழந்தால் வருந்தி ,சோர்ந்து , காலம் கழிப்பதை  விட ,அதை மறந்து தொடர்ந்து இயங்கி வந்தால் ,நாம் இழந்ததை விட மதிப்பு மிக்க வெற்றி கிடைத்தே தீரும் .நான் மேல்நிலை தேர்வில் 857 மதிப்பெண் பெற்று இருந்தேன் .குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி செல்லமுடிய வில்லை .வேலைக்கு சென்று விட்டேன் .
 
அஞ்சல் வழியில் பி .காம் டித்தேன் .கல்லூரி வாழ்க்கை நம் வாழ்வில் இல்லாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இன்று வரை ஒரு புறம் இருந்தாலும் ,மறுபுறம்  என் ஹைக்கூ கவிதைகள், திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழகம் ,மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி   ,விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி அனைத்திலும் என் ஹைக்கூ பாட நூலில் இடம் பெற்றுள்ளது. இளங்கலை மாணவர்கள் அனைவரும் என்   ஹைக்கூ கவிதைகளை பாடமாக படிக்கிறார்கள்    .என் மகன் மதுரை தியாகராசர் கல்லூரியில்( பி. சி .எ.) படித்து வருகிறான் .அவனுக்கும் என் 10 ஹைக்கூ கவிதைகள்  பாடமாக உள்ளது . ன்று கல்வி கற்க கல்லூரி செல்லாத என் கால்கள் ,இன்று கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக என் கால்கள் செல்கின்றது .

என் கவிதை நூல்கள் திருடியதற்காக மனம் சோர்ந்து இருந்தால் அடுத்த  படைப்புகள் படைத்து இருக்க முடியாது .அதை பொருட் படுத்தாமல், கவலைப் படாமல் தொடர்ந்து எழுதியதால் . 11 நூல்கள் எழுத முடிந்தது .என் ப
டைபுக்காகவே "இராஇரவிடாட் காம் ","கவிமலர் டாட் காம்"  www.eraeravi.com    www.kavimalar.com இரண்டு இணையங்கள் ,"இராஇரவிடாட் ப்ளாக்ஸ்பாட்காம் www.eraeravi.blogspot.com "ஒரு வலைப் பூ ,மற்றும் எழுத்து டாட் காம்,
தமிழ் ஆதர்ஸ் டாட் காம் ,நூலகம் டாட் காம் ,விருபா டாட் காம் ,லங்கா ஸ்ரீ டாட் காம், தமிழ் தோட்டம் ,ஈகரை ,கூகுள் பிளஸ் ,முக நூல் ,ஆர்குட் நெட்லாக் ,டுவிட்டர் ,ஷ்டையில் எப் எம் உள்பட பல்வேறு பிரபல இணையங்களில் என் படைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது . 300 நூல்களுக்கு மிகவிரிவான விமர்சனம் என் இணையத்தில் பதிவு செய்துள்ளேன் .  , தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன் அவர்கள் தொகுத்த "இரா .இரவி ஹைக்கூ ஆயிரம்" நூல் அச்சில் உள்ளது .என் எழுத்து மற்றும்  இணையப் பணிகளைப் பாராட்டி அமெரிக்க மேரி லேண்டில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக் கழகத்தில்  இருந்து எனக்கு மதிப்று முனைவர் பட்டமும் வழங்கினார்கள். படைப்பாளிகள் அனைவருக்கும் என் வேண்டுகோள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருங்கள் .உங்கள் வெற்றியை சாதனையை யாராலும் தடுக்க முடியாது .இலக்கிய திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள் !எல்லோரும் ன்னை போல இனி மன்னிக் மாட்டார்கள்.சொந்தமாக சிந்தித்து எழுதுங்கள் .படித்த கவிதை பிடித்து இருந்தால் ,படைப்பாளி பெயருடன் ,படித்ததில் பிடித்தது என்று பதிவு செய்யுங்கள் .
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

 

கருத்துகள்