இப்படியும் சிலர் ! கவிஞர் இரா .இரவி .
சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய "கவிஞர் இரா .இரவி ஹைக்கூ கவிதைகள்"( 1998) ,"விழிகளில் ஹைக்கூ" ( 2003) நூலையும் சிவகாசியில் இருக்கும் நண்பர் பல லட்சம் பிரதிகள் வெளியிடுவதாக என் தம்பி மாமனார் வாங்கி சென்றார் .நானும் எனக்கு சன்மானம் எதுவும் வேண்டாம் என் பெயரோடு ஹைக்கூ கவிதைகள் வந்தால் போதும் என்று சொல்லி கொடுத்து அனுப்பினேன் .நூல் வந்து விட்டதா என்று பல முறை கேட்டேன் வரவில்லை என்றார். பின் கேட்பதை விட்டு விட்டேன் . நான் சென்னைக்கு தொடர் வண்டியில் பயணம் செய்த போது ஜோதிடம் ,ஆன்மிகம் புத்தகங்கள் விற்றனர் அதில் ஹைக்கூ கவிதைகள் என்று ஒரு புத்தகம் இருந்தது வாங்கி விட்டேன் .வாங்கி உள்ளே பார்த்தால் அதிர்ச்சி என்னுடைய இரண்டு நூல் ஹைக்கூ கவிதைகளும் அப்படியே இருந்தது .என் பெயருக்குப் பதில் இளங்கோவன் என்று இருந்தது .
அதில் உள்ள சிவகாசி பதிப்பாக தொலைபேசி என்னை அழைத்து பேசினேன் .இப்படி செய்யலாமா ? அறிவு திருட்டு அல்லவா ? மூளை திருட்டு அல்லவா ? என்று கேட்டபோது தவறு நடந்து விட்டது லட்ச கணக்கில் விற்பனைக்கு சென்று விட்டது மன்னித்து விடுங்கள் அடுத்த பதிப்பு போடாமல் விட்டு விடுகிறோம். என்றனர் .என் தம்பி மாமனாரிடமும் நடந்ததை சொல்லி கடிந்து கொண்டேன் .
நண்பர்கள் வழக்கு தொடுக்க சொன்னார்கள் .நான் வழக்கு தொடுத்து மன நிம்மதி இழக்க விரும்பாமல் மன்னித்து விட்டு விட்டேன் .தினமலர் நாளிதழ் மதுரை பதிப்பில் என் நூல் அட்டையையும் சிவகாசி ஹைக்கூ கவிதைகள் நூல் அட்டையையும் போட்டு நடந்த நிகழ்வை பதிவு செய்தனர். இனிய நண்பர் மு .முருகேஷ் உள்ளிட்ட ஹைக்கூ கவிஞர்கள் பலரும் சிவகாசி பதிப்பகதாருக்கு கண்டன மடல் அனுப்பி வைத்தார்கள் என் சோகம் வேறு யாருக்கு நேர்ந்து இருந்தாலும் பொறுத்து ,மன்னித்து இருக்க மாட்டார்கள் .என் சோகம் அதோடு முடிய வில்லை .
இரண்டு மாதங்களுக்கு முன்பு மனித நேயம் மாத இதழில் என் ஹைக்கூ கவிதையை பிரசுரம் செய்து கீழே இளங்கோவன் என்று இருந்தது .மனித நேயம் ஆசிரியர் நண்பர் திரு .எ .எம் .ஜெமேஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டேன் .என் ஹைக்கூ இளங்கோவன் என்ற பெயரில்
வந்துள்ளதே ! அந்த பெயரில் யாரும் அனுப்பினார்களா ? என்றேன் .அவர் .இல்லை ஹைக்கூ கவிதைகள் என்ற நூல் வாங்கினேன் அதில் பிடித்து இருந்தது எனவே அதில் உள்ள பெயரை அப்படியே போட்டேன் என்றார் .அவரிடம் நடந்த சோகத்தை விளக்கியதும் .மறு மாதம் மறுப்பு வெளியிட்டார் .
இரண்டு நாட்களுக்கு முன் இனிய நண்பர் மின்மினி ஆசிரியர் கன்னிக்கோவில் ராஜாசெல்லிடப் பேசியில் அழைத்து நான் வாசிக்கும் ஹைக்கூ உங்களுடையாதா ? என்று ஹைக்கூ கவிதைகள் வாசித்தார் .பத்தும் என் ஹைக்கூ தான் .யார் அனுப்பியது என்றேன் ? அவர் பெயரை சொல்லி மின்மினி இதழில் பிரசுரம் செய்ய அனுப்பி உள்ளார் . கல்லூரி பேராசிரியாராக உள்ளார் என்றார் .இதே ஹைக்கூ கவிதைகளை சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் நேரில் வந்து வாசித்தார். என்றார் .அவர் செல் என் உள்ளதா ? என்றேன் உள்ளது என்றார் .உடன் வாங்கி அந்த என்னை தொடர்பு கொண்டு பேசினேன் .அவர் பெயரை சொல்லி நிங்களா ? என்றேன் கல்லூரி பேராசிரியாரா ? என்றேன் .ஆம் என்றார் .என் ஹைகுவை சொல்லி இது நீங்கள் எழுதியதா ?மனசாட்சிப் படி உண்மையை சொல்லுங்கள் என்றேன் .முதலில் ஆம் என்றவர் என்னிடம் என் நூல்கள் உள்ளது சான்றுகளுடன் நிருபிக்கட்டுமா ? என்றதும் .ஆம் தவறு செய்து விட்டேன் மன்னியுங்கள் என்றார் .நீங்கள் இப்படி இருந்தால் உங்கள் மாணவர் எப்படி இருப்பார்கள் என்று பேசியதும் திரும்ப மன்னிப்பு கோரினார்.பின் அவரே மின்மினி ஆசிரியர் கன்னிக்கோவில் ராஜாவை செல்லிடப் பேசியில் அழைத்து நான் தவறு செய்து விட்டேன். மின்மினி இதழில் பிரசுரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் .
இரண்டு நாட்களுக்கு முன்பு மின்மினி ஆசிரியர் இனிய நண்பர் கன்னிகோவில் ராஜா செளிடப் பேசியில் அழைத்து நன் வாசிக்கும் ஹைக்கூ சிவகாசி ஹைக்கூ கவிதைகள் நூலை வாங்கி பலரும் படித்து விட்டனர் .அதில் ஒரு சிலர் திருட்டை ஹைக்கூவில் இருந்து திருடி ஹைக்கூ எழுதி தங்கள் பெயர் எழுதி இதழ்களுக்கு அனுப்பி வருகிகின்றனர் .சோகம் தொடர்ந்து கொண்டே உள்ளது .
இணையத்தில் வெளியாகும் என் கவிதைகளை பிரபல இணையங்கள் என் பெயரோடன் வெளியிட்டு வருகின்றனர் .மகிழ்ச்சி .ஆனால் ஒரு சிலர் இணையத்திலும் வலைப் பூவிலும் என் கவிதைகளை என் பெயர் இன்றி பதிப்பித்து விடுகின்றனர் .ஒரு புறம் கோபம் வந்தாலும் மறு புறம் நம் படைப்பு பல லட்சம் வாசகர்களை சென்று அடிகின்றதே என்று மகிழ்வேன் .
இரண்டு நூல் ஹைக்கூ கவிதைகள் எழுத நான் எவ்வளவு சிந்தித்து இருப்பேன் .எவ்வளவு உற்று நோக்கி இருப்பேன் எத்தனை இரவு முழித்து இருப்பேன் .இரு சக்கர வண்டியில் பயணிக்கும் போது மின்னல் போன்று தோன்றும் .வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு எத்தனை முறை குறித்து இருப்பேன் .திருடர்கள் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தால் திருட மாட்டார்கள் .சிந்திக்காமல் இப்படி பல நாள் உழைப்பை திருடி விடுகின்றனர்.
நடக்கும் சோகங்களை நினைக்கும் போது எழுதுவதையே விட்டு விடலாமா ? என்று விரக்தி வரும் .ஆனாலும் .பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. சாதிக்க வேண்டும் .மனித குல மேன்மைக்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டு என்ற எண்ணத்தில்தான் தொடர்ந்து எழுதி வருகிறேன்
இனியாவது அறிவு திருடர்கள் மூளை திருடர்கள் திருந்த வேண்டும் !பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்தான் என் நினைவிற்கு வருகின்றது .
" திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .
குறிப்பு ; மன்னித்தவர்களை பெயர் சொல்லி அசிங்க படுத்த வேண்டாம் என்று பெயர் குறிப்பிட வில்லை .

கருத்துகள்
கருத்துரையிடுக